இனி போனை காற்றை கொண்டே சார்ஜ் செய்ய முடியும்

By Meganathan
|

அவசியம் தேவைப்படும் நேரத்தில் போனில் சார்ஜ் இல்லாமல் போவது தான் கொடுமையிலும் கொடுமை. இது போன்ற நேரத்தில் ஏற்படும் மன அழத்தத்திற்க்கு அளவே இல்லை என்றும் கூறலாம்.

இனி இந்த பிரச்சனை இருக்காது என்கின்றது நிகோனா லேப்ஸ் எனும் நிறுவனம். இந்நிறுவனம் கண்டறிந்திருக்கும் புதிய வகை போன் கேஸ் போனின் சார்ஜிங் பிரச்சனை தீர்த்து வைக்கின்றது.

இனி போனை காற்றை கொண்டே சார்ஜ் செய்ய முடியும்

ஐபோன் பயனாளிகள் இனி காற்றை கொண்டே போனினை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என்கின்றது நிகோனாவின் புதிய போன் கேஸ். இந்த புதிய வகை கேஸ் போனில் வீணாக செலவழிக்கப்படும் மின்சக்தியை மீண்டும் உற்பத்தி செய்யும்.

ஐபோன்களில் வைபை, ப்ளூடூத், மற்றும் நெட்வர்க் சிக்னல் போன்றவைகளுக்காக பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் 90% சக்தியை இந்த ஐபோன் கேஸ் மீட்கும்.

இனி போனை காற்றை கொண்டே சார்ஜ் செய்ய முடியும்

நிகோலா தொழில்நுட்பமானது, வைபை, ப்ளூடூத் மற்றும் LTE போன்றவைகளில் இருக்கும் RF சிக்னல்களை DC மின்சாரமாக மாற்றி அதை சேமித்து வைத்து கொள்கின்றது. இதன் மூலம் மொபைல் கருவிகளை வயர் இல்லாமலே சார்ஜ் செய்ய முடியும்.

புகைப்படம் :கிக்ஸ்டாட்டர்

Best Mobiles in India

English summary
check out The charger that can power your phone from the air. This is interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X