ஒரு ரூபாய் கூட கரெண்ட் பில் கட்டாமல் ஏசி வீட்டில் வாழும் தினேஷ்.!

"நாம் ஏன் மின்சார துறையிலிருந்து சக்தி எடுக்க வேண்டும்.? எனக்கு ஆச்சரியமாக உள்ளது.!" - என்று கூறி சிரிக்கிறார் தினேஷ்.!

|

பொளந்து கட்டும் வெயில் காலம் பற்றிய அறிமுகமே தேவையில்லை. வீட்டில் ஒரே ஒரு ஏசி இருந்தால் கூட வெயிலில் இருந்து கொஞ்சம் தப்பிக்கலாம், ஆனால் செலவாகுமே..? அதை விட முக்கியமாக மின்சார கட்டணம் எகிறுமே என்று கவலையில் மூழ்கி கிடக்கும் உங்களிடம் ஒரு ரூபாய் கூடா மின்சார கட்டணம் செலுத்தாமல் வீடு முழுவதும் ஏசி அமைக்கலாம் என்று கூறினால் எப்படி இருக்கும் - சும்மா ஜில்லென்று ஒரு சர்பத் குடித்தாற் போல இருக்கும் அல்லவா.?

<strong>ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.! </strong>ராகிங் செய்யப்பட்ட சுந்தர் பிச்சை - வெளிப்படுத்திய ஹாஸ்டல் நண்பர்.!

உங்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்குமே வெறும் யோசனையை மட்டும் வழங்காமல் அதை கட்டமைத்து தானே நிரூபித்தி அட நாமும் இப்படி செய்தால் என்ன.? - என்ற ஜில்லென்ற உந்துதலை நமக்கு வழங்குகிறார் - தினேஷ்.!

இயற்கை ஆர்வலர்

இயற்கை ஆர்வலர்

தினேஷ் ஒரு நகரம் சார்ந்த ரியல் எஸ்டேட் டெவலப்பர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார். தினேஷ் எப்போதும் வழக்கமான வாகனங்களை தவிர்த்து மின்சாரம் மூலம் இயங்கும் கார் கொண்டு அலுவலகம் செல்லும் பழக்கம் கொண்டவர் ஆவார்.

இரட்டிப்பு கொண்டாட்டம்

இரட்டிப்பு கொண்டாட்டம்

உகாதி திருநாள் என்பது கர்நாடக மாநிலத்தின் ஒரு மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகும் மற்றும் களிப்பூட்டக்கூடிய ஒரு விடுமுறை நாளும் கூட, அப்படியான உகாதி திருநாளில் பெங்களூரு வாசியான தினேஷ் பகரியாவிற்கு இரட்டிப்பு உகாதி கொண்டாட்டம் நிகழ்த்த ஒன்றுக்கு மேற்பட்ட காரணம் உள்ளது.

சூழல்-நட்பு முனைவு

சூழல்-நட்பு முனைவு

ஏனெனில் தினேஷ் அவருடைய புதிய வீட்டில், உகாதி திருநாள் அன்று குடிபுக உள்ளார். அதை விட முக்கியமான விடயம் தினேஷ் கட்டமைத்துள்ள புதிய வீடானது முற்றிலும் சூழல்-நட்பு முனைவுகள் கொண்ட ஒரு வீடாகும். தினேஷ் கட்டமைத்துள்ள புதிய வீடானது வெற்றிகரமாக முழுக்க முழுக்க சூரிய ஆற்றல் சேனல்கள் கொண்டு போர்த்தப்பட்டுள்ளது அதனால் தினேஷுக்கு தற்காலிகமாக எந்த பெஸ்காம் (Bescom - பெங்களூர் மின்சாரம் வழங்கும் கம்பெனி லிமிடெட்) இணைப்பும் கோரவில்லை.

கிரீன் லைஃப்

கிரீன் லைஃப்

ஒரு கிரீன் லைஃப்தனை வாழும் தினேஷ் "என் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து குறிப்பிட்ட அளவுகோலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க விரும்புகிறேன்" என்று கூறுவதுடன் நில்லாமல் தன்னுள் இருக்கும் சூரிய ஆற்றல் சார்ந்த ஆழமான ஆர்வத்தை கண்டுபிடித்து இந்தத் தொழில்நுட்பம் மேலும் அதிக அளவில் இணைத்துக்கொள்ள விரும்பியுள்ளார்.

சொந்த சக்தி

சொந்த சக்தி

நாம் ஏன் மின்சார துறையிலிருந்து சக்தி எடுக்க வேண்டும்.? என்று எனக்கு ஆச்சரியமாக உள்ளது என்று கூறி சிரிக்கும் தினேஷ் "நாம் ஏன் நமது சொந்த சக்தியை உருவாக்க கூடாது? என்று நம்மை கேள்வி கேட்பதோடு அதை தனது புதிய வீட்டில் நிகழ்த்தியும் காட்டியுள்ளார்.

சோலார் பேனல்கள்

சோலார் பேனல்கள்

சூரிய ஆற்றல் கொண்டு இயங்கும் அதே கொள்கைகளை கொண்டு 12 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்ட அவர் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பச்சை கட்டுமானத்திலான சூரிய அலகு அமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. தினேஷ் அவர் வீட்டில் சூரிய அலகுகளை நிறுவும் போது சூரிய சக்தி பயன்பாடு சார்ந்த பல சுற்றுச்சூழல் உணர்வு மிக்க மக்கள் மத்தியில் இது பிரபலமடைந்தது ஏனெனில் வீடு கட்டும் போதே சோலார் பேனல்கள் கொண்டு கட்டுவது என்பது மிகவும் அரிதான ஒரு விடயமாகும்.

மேகமூட்ட நாட்களில் கூட

மேகமூட்ட நாட்களில் கூட

தினேஷ் மற்றும் குழுவினர் மெல்லிய சூரிய பேனல்கள்களை பயனப்டுத்தியுள்ளனர் இதனால் வழக்கமான மற்றும் சாத்தியமான மேகமூட்ட நாட்களில் கூட முழு ஆற்றலையும் உருவாக்கி பயன்படுத்தலாம். தேவை அனைத்து மின்சாரத்தை உருவாக்கும் வல்லமை கொண்ட நூற்றிற்கும் மேற்பட்ட மெல்லிய பேனல்கள் பொறியியல் குழு மூலம் வீட்டின் கூரை மீது பொருத்தப்பட்டுள்ளது.

மனது வைத்து இறங்கிவிட்டால்

மனது வைத்து இறங்கிவிட்டால்

எலான் மஸ்க்கின் விசிறி என்று தன்னை கூறிக்கொள்ளும் தினேஷ் இந்த முயற்சியில் உங்கள் நினைப்பு மட்டும் தன மிகப்பெரிய சவாலாக இருக்கும். மனது வைத்து இறங்கிவிட்டால் மட்டுமே போதும் இதை சாத்தியப்படுத்தலாம் என்கிறார்.

ஆப்பிளை அலற வைத்த ஜோசப்..! யார் இவர்..? என்ன செய்தார்.?

ஆப்பிளை அலற வைத்த ஜோசப்..! யார் இவர்..? என்ன செய்தார்.?

ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகள் (ஐபோன், ஐபாட், ஐபாட் டச், அல்லது ஆப்பிள் வாட்ச்) ஆனது உரிமையாளரிடம் இருந்து திருடப்பட்டுவிட்டது அல்லது தொலைந்து விட்டது என்றால் மற்றவர்கள் அக்கருவிகளை பயன்படுத்துவதைத் தடுக்கும் அனுமதிக்கும் ஆப்பிள் மிகவும் பாதுகாப்பான லாக் செயல்படுத்தும் முறையானத்தில் ஒரு பெரிய ஓட்டையை போட்டுவிட்டார் கேராளவை சேர்ந்த பொறியாளர் மாணவரான ஹேமந்த் ஜோசப்.


"பைண்ட் ஐபோன் ஆப் மூலம் ஒரு உரிமையாளர் லாக் செய்த கருவியை திறக்க நான் ஒரு வழி கண்டறிந்து விட்டேன்" என்று கூறுகிறார் ஹேமந்த் ஜோசப், பொறியியல் இறுதியாண்டு மாணவர், அமல் ஜோதி பொறியியல் கல்லூரி, கஞ்சிரப்பள்ளி.

வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்

வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார்

ஆக யாரும் 10,000 லெட்டர்களில் பெயர் அல்லது 10,000 லெட்டர்களில் ஒரு கடவுச்சொல்லை அமைக்கப் போவதில்லை எனவே கேரக்டர் லிமிட் இதுபோன்ற பக்ஸ்'களை சீர் செய்ய தேவை" என்று ஜோசப் அவரின் வலைப்பக்கத்தில் எழுதியுள்ளார், பின்னர் அவரின் நண்பர்கள் அவர் இதை எப்படி நிகழ்த்தினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

கேரக்டர் லிமிட்களும் இல்லை

கேரக்டர் லிமிட்களும் இல்லை

இது அனைத்திற்கும் காரணம் ஜோசப்பின் நண்பர் ஒருவர் இபேவில் ஐபாட் ஒன்று வாங்கியுள்ளார், அக்கருவி முந்தைய உரிமையாளரால் பூட்டப்பட்டது என்று பின்னர் கண்டறியப்பட்டது. அதை சோதிக்கும் போது அதில் எந்தவிதமான கேரக்டர் லிமிட்களும் இல்லை என்பதை கண்டறிந்துள்ளார் அதாவது 'மற்றொரு வைஃபை நெட்வொர்க்கை' விருப்பத்தை இணைக்கும் முன் அதை சரிபார்ப்பதற்கான இன்புட் பீல்டகளில் கேரக்டர்ல் லிமிட்கள் இல்லை என்று தெரிந்தவுடன் "ஆக "நாம் பல எழுத்துக்களை பீல்ட்டில் நுழைத்து ஒரு ஓவர் ப்ளோவை உருவாக்க முடியும்" என்று வலைதளத்தில் எழுதியுள்ளார் ஜோசப்.

ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்'

ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்'

பனிரெண்டாம் வகுப்பில் இருந்தே ஜோசப், தான் எழுதி வரும் 'பக் ஹன்டிங்' என்ற வலைத்தளத்தில் தன்னை ஒரு 'பாதுகாப்பு ஆய்வாளர்' என்று குறிப்பிடுகிறார். சில மாதங்களுக்கு முன்பு, கிளவுட் பிளாட் பார்மில் இருந்த 'பக்' ஒன்றை சுட்டிக்காட்டி ரூ .5 லட்சம் ருபாய் பரிசை கூகுள் நிறுவனத்திடம் இருந்து பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசாரணை

விசாரணை

இதே போன்ற ஏடி & டி, பீபல், ட்விட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட 45-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் இவர் பரிசு பெற்றுள்ளார். தற்போது ஆப்பிள் நிறுவனம் ஜோசப் சுட்டிக்காட்டியுள்ள பிரச்சினையை விசாரணை செய்வதாக அவருக்கு பதில் அளித்துள்ளது

Best Mobiles in India

Read more about:
English summary
This Bengaluru Man Can Run an Air-Conditioned House Without Paying a Rupee in Electricity Bills. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X