மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

|

மின்சாரம் எப்போதும் தயார் நிலையில், எளிதில் கிடைக்க கூடியதாய் இருக்கும் நிலையை எப்போதோ இழந்து விட்டது, நாமெல்லாம் அதை நினைத்து வருத்தப்படும் அதே நேரத்தில் மின்சாரத்தையே பயன்படுத்தாத, பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பவர்களைப்பற்றி கொஞ்சம் யோசித்தால், நம் நிலை எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தோன்றும்.

மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

அரிக்கன் விளக்குகளையும், தெரு விளக்குகளையும் நம்பி பள்ளி செல்லும் பிள்ளைகளும், இரவு நேர சமையலை செய்யும் பெண்களும் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், அவைகளும் எல்லா நேரத்திலும் கைகொடுப்பதில்லை. சில நேரங்களில் மண்ணெண்ணை இருக்காது, பல நேரங்களில் மின்சாரமே இருக்காது. வெறுமையும், இருளும் மட்டும்தான் இருக்கும்.

விண்டோ சாக்கெட் - ஜன்னல் வழியே சார்ஜ் செய்யும் புதிய கருவி

அந்த இருளை எளிமையாக நீக்கி ஒளிதனை நிரப்பும் பல விதமான கண்டுபிடிப்புகள் வெளிவந்து கொண்டேதான் இருக்கின்றது. அவைகள், பெரும்பாலும் சூரியஒளி அல்லது பேட்டரியை மூலதனமாக கொண்டு இயங்கும் கருவிகளாகத்தான் இருக்கும். அக்கருவிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு உருவாக்கப்பட்டதுதான் - கிராவிட்டி லைட்..!

மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

இந்த கிராவிட்டி லைட்டானது முழுக்க முழுக்க ஈர்ப்பு விசை மூலமாக ஒளி தரக்கூடியது, பேட்டரிகளோ, மின்சாரமோ, சூரிய ஒளியோ இதற்க்கு தேவையில்லை. 12 கிலோ எடை சேர்க்கப்பட்ட இரு முனைகளை ஒரு கப்பியில், அதாவது கிணற்றில் தண்ணீர் குடத்தை உள்ளே விடவும், வெளியே எடுக்கவும் பயன்படுத்தும் புல்லி போன்ற ஊருளையில் இணைத்து விளக்கோடு தொங்க விட வேண்டும். ஒரு முனையை விளக்கிற்க்கு அருகமையில் கொண்டு சென்று, தொங்க விட்டு விட வேண்டும்.

வாவ் சொல்ல வைக்கும் சூப்பர் சுட்டிஸ்

தொங்க விட்ட எடையானது ஈர்ப்பு விசையின் மூலம் மெல்ல மெல்ல நிலத்தை நோக்கி கீழே இறங்கும். அப்போது ஆற்றல் சக்தியானது (கைனடிக் எனர்ஜி) இயங்காற்றால் (போடன்சியல் எனர்ஜி) சக்தியாக மாறும். இந்த மாற்றப்பட்ட ஆற்றலானது, பாலிமர் கியர் ட்ரெய்ன் மற்றும் டிரைவ் ஸ்பாக்கெட்டுக்கு சக்தி அளித்து விளக்கிற்க்குள் இருக்கும் எல்இடி-யை ஒளிபெறச்செய்யும். தொங்க விடப்பட்ட ஒரு முனையின் உயரத்திற்க்கு ஏற்ப, எடை தரையை தொட்டு, விளக்கு அணைய 30 நிமிடங்கள் வரை ஆகும். மறுபடியும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் செய்ய, விளக்கு மீண்டும் 30 நிமிடம் ஒளிரும்.

மின்சாரம் வேண்டாம், சூரியஒளியும் வேண்டாம், விளக்கேற்றலாம் வாங்க..!

வளரும் நாடுகளை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதால், இதன் விலை வெறும் 10 டாலர்தான் என்று நியமித்துள்ளனர். 'சைன்ஸ் இச் தி காட்' என்று சும்மாவா சொல்கிறார்கள், பெரும்பாலான பிரச்சனைகளை அறிவியல்தானே தீர்த்து வைக்க உதவுகிறது, இருட்டில் கிடக்கும் சக மக்களுக்கு ஒளியை தருவது போல..!

Best Mobiles in India

Read more about:
English summary
Gravity Light that is powered by force of gravity and requires no batteries, electricity or sunlight.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X