கணினியால் முடியாது ஆனால் ஸ்மார்ட்போனால் முடியும்.!!

Written by: Aruna Saravanan

சிலர் கணினி மற்றும் மடிகணினியின் உதவியோடு எல்லாவற்றையும் நிகழ்த்த முடியும் என்று ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்றவற்றின் தன்மையை உணராமல் இருக்கின்றனர். காலத்துக்கு ஏற்றார் போல் வாழ பழக வேண்டும்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் சமயத்தில் அவற்றை பயன்படுத்துவதில் நாம் ஆர்வம் காட்டினால் நேரம் செலவாகாமல் பலவற்றை சாதிக்க முடியும். உங்கள் கணினியால் செய்ய முடியாமல் ஸ்மார்ட்போன் மூலம் நிகழ்த்தக் கூடிய செயல்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மொபைல் அப்ளிகேஷன்

விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினியில் அதிகளவில் செயலிகள் இருப்பது இல்லை. ஆனால் ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ் போன்றவற்றில் பல செயலிகள் உள்ளன.

பாதுகாப்பு

மடிகணினி மற்றும் டெஸ்க்டாப் கணினியில் வைரஸ் பிரச்சனை அதிகமாக உள்ளது. ஆனால் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் போன்றவற்றில் அந்த பிரச்சனை இல்லாமல் பாதுகாப்பாக தரவுகளை சேமித்து கொள்ள முடியும்.

போன் தொடர்பு

மொபைல் போன்களை போல் உங்கள் கணினியில் இருந்து யாருக்கும் போன் மூலம் தொடர்பு கொள்ள முடியாது.

ரகசியம் காக்க

டெஸ்க்டாப் மற்றும் மடிகணினியில் உங்கள் ரகசியங்கள் காக்கப்படுவதில் சிக்கல் உள்ளது. ஏனென்றால் அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஆனால் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் போன்றவற்றில் உங்கள் ரகசிய தரவுகள் காக்க படுகின்றது. அவற்றை உங்களை தவிர யாரும் பார்க்க முடியாது.

மொபைல் வேலெட்ஸ்

மொபைல் வேலெட்ஸை உங்கள் கணினியில் பயன்படுத்த முடியும் என்பதில் சந்தேகம் இல்லைதான். ஆனால் அவை மொபைல் போனுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் போனில் இருந்து ரீசார்ஜ், பணம் கட்டுவது போன்றவற்றை நிகழ்த்த முடியும்.

ரிமோட் கண்ட்ரோலாக பயன்படுத்தலாம்

மொபைல் செயலிகளை பயன்படுத்தி பல கருவிகளை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். எடுத்துக்காட்டாக, உங்கள் மொபைல் கருவியை மற்றொரு கருவியுடன் பொருத்தி அந்த கருவியை கட்டுப்படுத்த முடியும். இது டிவி, குளிர்சாதன பெட்டி போன்ற வீட்டு உபயோகப்பொருட்களுக்கும் பொருந்தும்.

சுயப்படம்

உங்கள் வெப்கேம் பயன்படுத்தி புகைப்படம் எடுக்க முடியும் என்றாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி போட்டோ எடுப்பதை போன்று எடுக்க முடியாது. ஸ்மார்ட் போனை கொண்டு எங்கு வேண்டுமானாலும் போட்டோ எடுத்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கே தெரியும்.

போர்டபில் டிவைஸ்

டெஸ்க்டாப் மற்றும் மடிகணினிகளை விட ஈஸியாக எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லக் கூடிய போர்டபில் கருவி உங்கள் மொபைல் போன் தான்.

பிரச்சனை எதுவும் இல்லை

உங்கள் ஸ்மார்ட் போனில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஒஎஸ் இருப்பதால் அதை இயக்குவதற்கு எதையும் நீங்கள் புதிதாக நிறுவ தேவையில்லை. ஆனால் கணினியில் நீங்கள் விண்டோஸ் ஒஎஸ் நிறுவ வேண்டிய அவசியம் உண்டு.

ஒரே கருவியில் எல்லாம் உண்டு

மொபைல் போனில் எண்ணற்ற செயல்களை செய்ய முடியும். மெசேஜ் அனுப்ப முடியும், இமெயில் மற்றும் பாட்டு வீடியோ என பலவற்றை ரசிக்க முடியும். எல்லாம் ஒரே நேரத்தில் உங்கள் மொபைல் போன் வடிவில் உங்கள் சட்டை பையில் இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
things your smartphone can do that your PC can't! Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்