கல்பனா சாவ்லா பிறந்த தின சிறப்பு பகிர்வு.!!

Written By:

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றிருந்தார். இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் பல்வேறு பட்டங்களை பெற்று நாசாவில் பணியாற்றி வந்தார். பிப்ரவரி 1, 2003 ஆம் ஆண்டு ஏழு வீரர்களுடன் கொலம்பியா விண்களம் வெடித்து சிதறியதில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் நடைபெறாமல் அவர் உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது 54வது பிறந்த தினத்தை கொண்டாடியிருப்பார். இந்திய பெண்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும் கல்பனா சாவ்லா குறித்து யாரும் அறிந்திராத சில தகவல்களை ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

மோன்டோ

இவரது இயற்பெயர் மோன்டோ, மோன்டோ என்ற தன் பெயரை செல்ல பெயராக வைத்து கல்பனா என்ற பெயரை அவரே தனக்கு சூட்டி கொண்டார்.

கூடுதல் நடவடிக்கைகள்

கல்வியில் இவர் அதிக மதிப்பெண் பெறவில்லை என்றாலும் இவருக்கு கல்வி சார்ந்த கூடுதல் நடவடிக்கைகளில் அதிக ஆர்வம் இருந்தது. பானை செய்தல், ஆட்டம், சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ஓட்ட பந்தயம் போன்றவற்றில் கல்பனா அதிக திறன் கொண்டிருந்தார்.

பணி

இந்தியாவில் பொறியியல் பட்டம் பெற்று 1982 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற கல்பனா வாணியல் பிரிவில் பட்டம் பெற்று நாசாவில் பணியில் சேர்ந்தார். விண்வெளி செல்லும் முன் அவர் பல்வேறு பணிகளை நாசாவில் மேற்கொண்டு வந்தார்.

விமானி

விமானியாவதில் அதிக ஆர்வம் கொண்ட கல்பனா விமானங்களை இயக்கும் உரிமம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குடிமகள்

1991 ஆம் ஆண்டு அமெரிக்க குடிமகளான பின்பு தான் இவர் நாசாவின் அஸ்ட்ரோநட் கார்ப்ஸ்களில் ஒருவரானார், பின் ஆறு ஆண்டுகள் கழித்து தான் இவர் முதன் முதலாக விண்வெளிக்கு சென்றார்.

பெயர்

இவரது மறைவிக்கு பின் ஆஸ்டிராய்டு மற்றும் விண்கலம் ஒன்றிற்கு இவரது பெயர் சூட்டப்பட்டிருக்கின்றது. மேலும் செவ்வாய் கிரகத்தில் இருக்கும் கொலம்பியா மலைப்பகுதி சாவ்லா ஹில் என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இதோடு இல்லாமல் இவர் கல்வி கற்ற இடங்களில் இவரது பெயர் சூட்டப்பட்டிருப்பதோடு நாசாவில் சிறப்பாக பணியாற்றதை பறைசாற்றும் விதமாக சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பெண்

விண்வெளி பயணம் மேற்கொண்ட முதல் இந்திய பெண் என்பதோடு உலகளவில் விண்வெளி பயணம் செய்த 33வது பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Things You Need To Know About Kalpana Chawla
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்