உங்கள் ஆண்ட்ராய்டு, ஆப்பிள் கருவிகளை உளவு பார்க்கிறது அமெரிக்கா.!

சாம்சங் டிவி, ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் - ஒன்று விடாமல் உளவு பார்க்கும் சிஐஏ - இங்கு நீங்கள் இதுவொரு வெகுஜன கண்காணிப்பு கருவி அல்ல உங்களின் தனிப்பட்ட சாதனம் மூலம் ஹேக் நிகழ்கிறது என்பதை உணர வேண்டும்.!

|

வால்ட் 7 (Vault 7) என்ற பெயரில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட சமீபத்திய ஆவணங்கள் உண்மையெனில் ஒரு சிஐஏ ஏஜென்ட் ஆனவர், சாட் பயன்பாடுகளை குறியாக்கம் (என்க்ரிப்ஷன்) செய்வதின் வழியாக நேரடியாக உங்கள் ஓஎஸ்-தனை அணுக முடியும் அதன் வழியாக உங்கள் டிவியை ஒரு மைக் ஆக மாற்ற முடியும், அதுமட்டுமல்ல இன்னும் நிறைய செய்ய முடியும்.

<strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..! </strong>ஏரியா 51 : ஒட்டுமொத்த அமெரிக்க அரசும் மறைக்க விரும்பிய ஒரு இடம்..!

உடன் விக்கிலீக்ஸ் ஆனது மத்திய புலனாய்வு முகமையின் ரகசிய புலனாய்வு சார்ந்த பெரிய அளவிலான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. கிட்டத்தட்ட 9,000 ஆவணங்களை வெளியிட்டுள்ளது. சமீபத்திய கசிவில் இருந்து "சிஐஏ முழு ஹேக்கிங் திறன்" சார்ந்த ஆவணங்கள் வெளியாகியுள்ளது. அதிலிருந்து ஒரு கேஜெட் நம்மை உளவு பார்க்கும் விடயத்தில் நாம் என்னவெல்லலாம் கற்றுக்கொள்ள வேண்டும்.? எப்படி உஷாராக இருக்க வேண்டும் என்பதை பற்றிய விவரங்கள் இதோ.!

உரையாடல்களை பதிவு

உரையாடல்களை பதிவு

விக்கிலீக்ஸ் வெளியீட்டின்படி சிஐஏ உளவு சாதனம் ஆனது உங்கள் சாம்சங் ஸ்மார்ட் டிவியை ஒரு உளவு கருவியாக மாற்றும் என்று தெரிய வருகிறது. ஏற்கனவே சாம்சங் ஸ்மார்ட் தொலைக்காட்சி ஆனது நம் அறையில் நிகழும் உரையாடல்களை பதிவு செய்யும், அந்த அம்சத்தை செட்டிங்ஸ் மூலம் டிசேபிள் செய்யலாம் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆப் செய்யப்பட்டு இருந்தாலும்

ஆப் செய்யப்பட்டு இருந்தாலும்

எனினும், விக்கிலீக்ஸ் அறிவிப்பின்படி அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வீப்பிங் ஏஞ்சல் என்ற ஒரு திட்டம் மூலம் குறிப்பிட்ட அம்சம் ஆப் செய்யப்பட்டு இருந்தாலும் எப்படி உளவு நிகழ்த்துவது என்பது தெரியும் என்று சுட்டிக்காட்டுகிறது.

கெட்ட செய்தி

கெட்ட செய்தி

நீங்கள் சிக்னல் போன்ற ஒரு மறைகுறியாக்கப்பட்ட சாட் ஆப்பை பயன்படுத்துபவர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி மற்றும் ஒரு கெட்ட செய்தியும் உண்டு. நல்ல செய்தி என்னவென்றால் சிக்னல் ஆப்பின் மறைக்குறியை உடைக்க இயலாது, கெட்ட செய்தி என்னெவென்றால் அதை உடைக்கும் பணியில் சிஐஏ வெளிப்படையாக பணியாற்றி வருகிறது என்பது தான்.

ஹேக்கர்கள்

ஹேக்கர்கள்

உங்கள் தொலைபேசியின் ஓஎஸ் தனை அணுகுவதின் மூலம் ஹேக்கர்கள் அந்த பயன்பாடுகளை பாதுகாப்புகளை மிக எளிமையான முறையில் கடந்து விட முடியும். இங்கு நீங்கள் இதுவொரு வெகுஜன-கண்காணிப்பு கருவி அல்ல உங்களின் தனிப்பட்ட சாதனம் மூலம் ஹேக் நிகழ்கிறது என்பதை உணர வேண்டும்.

மெளனம்

மெளனம்

அப்படியாக சிஐஏ, மக்களின் தரவுதனை அணுக கூகுளின் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிளின் ஐஓஎஸ் ஆகிய இரண்டு இயங்குதளங்களுமே உளவு வேலைகளுக்கான இலக்காக நிர்ணயித்துள்ளது என்றும் வெளியான ஆவணங்கள் தெரிவிக்கிறது. "தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் ஆனது ஏற்கனவே உள்ள பல பிரச்சினைகள் தான்" என்று ஆப்பிள் கருத்து தெரிவித்துள்ள நிலையில் கூகுள் நிறுவனம் இதுவரை விக்கிலீக்ஸ் சிஐஏ கோப்புகள் பற்றி மெளனம் சாதிக்கின்றது.

முக்கிய இலக்குகள்

முக்கிய இலக்குகள்

வெளியான ஆவணங்களின்படி சிஐஏ மூலம், தனிப்பட்ட மின்னணு சாதனங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வர உதவும் 1,000 க்கும் மேற்பட்ட வைரஸ்கள், ட்ரோஜான்கள் மற்றும் ஊடுருவல்கள் நிகழ்த்தும் தீம்பொருள் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. விக்கிலீக்ஸ் தகவலின்படி, ஆண்ட்ராய்டு, ஐபோன்கள், ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் மற்றும் விண்டோஸ் கருவிகள் தான் ஹேக்கிங் நிகழ்வதில் முக்கிய இலக்குகள் என்று கூறப்பட்டுள்ளது.

சட்டம் சம்பந்தப்பட்ட

சட்டம் சம்பந்தப்பட்ட

மேலும் கார்கள் பயன்படுத்தி கட்டுப்பாட்டு அமைப்புகளை சிஐஏ உருவாக்குகிறது என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதுசார்ந்த வெளிப்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை என்பது ஒருபக்கமிருக்க சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் இது சட்டம் சம்பந்தப்பட்ட ஒன்று என்று கூறுகிறார்கள்.

பகிரங்க ஆதாரங்கள்

பகிரங்க ஆதாரங்கள்

என்எஸ்ஏ இரகசியங்களை வெளிப்படுத்தும் எட்வார்ட் ஸ்னோவ்டென் இந்த ஆவணங்கள் உண்மையானது போல தெரிகிறது என்று ட்விட்டர் மூலம் கூறியுள்ளார் மற்றும் "இது அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக நிகழ்த்தும் உளவு சார்ந்த முதல் பகிரங்க ஆதாரங்கள்" என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

உயர்மட்ட இரகசிய திட்டத்தில் 6 பெண்களுக்கு 'நிகழ்த்தப்பட்ட' வரலாற்று துரோகம்.!

Best Mobiles in India

English summary
Things We Learnt About Gadgets That Spy on You. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X