என்ன இருந்தாலும் கூகுள் கூகுள் தான் பா, எப்படி யோசிச்சிருக்கங்க..!

Posted by:

கூகுள் தேடியந்திரம் உலகம் முழுவதிலும் மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றது. இதோடு மக்களுக்கு உபயோகமான பல திட்டங்களை கூகுள் சோதனை செய்தும் வருகின்றது அனைவரும் அறிந்ததே.

2015-ன் தலை சிறந்த 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள்..!

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு பயன் அளிக்கும் பல திட்டங்கள் மற்றும் கருவிகளை உருவாக்குவதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றதை யாரும் மறுத்திர முடியாது. இங்கு கூகுள் பற்றி யாருக்கும் தெரிந்திராத சில அம்சங்களை தான் பார்க்க இருக்கின்றோம்..

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

உணவு

உணவு வகைகளை கலோரிகளின் அடிப்படையில் எடுத்து கொள்பவரா நீங்கள், இனி கூகுளில் எந்த உணவில் எத்தனை கலோரிகள் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ள இரு உணவுகளின் பெயர்களுக்கு இடையில் 'Vs' என டைப் செய்தால் போதும்.

ஃபான்ட்

உங்களது இணைய பக்கங்களுக்கு பயனுள்ள பல வித ஃபான்ட்களை கூகுள் ஃபான்ட்ஸ் பகுதியில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

ஸ்டாப்வாட்ச்

கூகுளில் ஸ்டாப்வாட்ச் சேவையை பயன்படுத்த முடியும்.

கால்குலேட்டர்

சதவீதங்களுக்கு ஏற்ப கணக்குகளை மேற்கொள்ளவும் கூகுள் உதவுகின்றது. இதற்கு கூகுளில் டிப் கால்குலேட்டர் என டைப் செய்தால் போதும்.

என்கிராம்

சில அரிய வகை வார்த்தை மற்றும் அதற்கான அர்த்தங்களை அறிந்து கொள்ள என்கிராம் பயன்படுத்தலாம்.

ப்ளைட் ட்ராக்கர்

விமான நேரங்கள் குறித்த சந்தேகங்களை கூகுளில் தெளிவு செய்து கொள்ள முடியும்.

ஹைலைட்

ஹைலைட் டூ சர்ச் என்ற அம்சம் உங்களது தேடல்களை மேலும் தனித்துவம் வாய்ந்ததாக மாற்றுகின்றது.

கன்வர்ஷன்

கணிதம் சார்ந்த குறியீடுகளை எளிமையாக தெரிந்து கொள்ளவும் கூகுள் பயனளிக்கின்றது.

கூகுள் ஸ்கை

கூகுள் ஸ்கை மூலம் விண்வெளியின் அழகை ரசிக்க முடியும்

ஸ்டாக் ஃபைன்டர்

ஸ்டாக் நிலவரங்களை அறிந்து கொள்ள குறிப்பிட்ட நிறுவனத்தின் குறியீட்டு வார்த்தையை டைப் செய்தால் மட்டும் போதுமானது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Check out here the THINGS THAT YOU DIDN’T KNOW GOOGLE CAN DO FOR YOU. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்