வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக்குடன் இணைப்பு : நல்லதா கெட்டதா.??

By Meganathan
|

நம்மோட வாட்ஸ்ஆப் நம்பர் ஃபேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளப்பட இருக்கின்றது. இதனால் ஃபேஸ்புக் தளத்தில் விளம்பர எண்ணிக்கை அதிகமாகும் எனக் கூறப்படுகின்றது. ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்ஆப் சேவையை கைப்பற்றியதைத் தொடர்ந்து முதல் முறையாக அதன் தனியுரிமை கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் நம்பர்கள் ஃபேஸ்புக் உடன் பகிர்வு செய்யப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன? வாட்ஸ்ஆப் செயலியின் இந்த முடிவு நல்லதா, கெட்டதா?

விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

கெடு

கெடு

வாட்ஸ்ஆப் உங்களது மொபைல் நம்பரை ஃபேஸ்புக்'இடம் வழங்குவதில் விருப்பமில்லை எனில் இதில் இருந்து வெளியேற 30 நாட்கள் கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு வேலை புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கியிருந்தாலும் அதில் இருந்து விடுபெற 30 நாட்கள் கெடு இருக்கின்றது.

விற்பனை

விற்பனை

மொபைல் நம்பர்கள் பகிரப்பட்டாலும், இவை விற்பனை, அல்லது விளம்பரதாரர்களிடம் பகிரப்படாத என வாட்ஸ்ஆப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

வாட்ஸ்ஆப் செயலியில் எவ்வித விளம்பரங்களும் இருக்காது. மூன்றாம் தரப்பு விளம்பரங்கள் அனைத்தும் தானாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு விடும்.

தரவுகள்

தரவுகள்

வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களது மொபைல் நம்பர், நீங்கள் பயன்படுத்தும் கருவி மற்றும் அதன் இயங்குதளம் உள்ளிட்ட தரவுகள் ஃபேஸ்புக் உடன் வழங்கப்படும்.

கஸ்டம் ஆடியன்சஸ்

கஸ்டம் ஆடியன்சஸ்

ஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய கஸ்டம் ஆடியன்சஸ் (Custom Audiences) எனும் திட்டத்தின் கீழ் புதிய விளம்பரங்கள் வரும். இந்தத் திட்டத்தில் விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்கள் சார்பில் மொபைல் நம்பர் மற்றும் வாடிக்கையாளர் தரவுகள் வழங்கப்படும். மறுபக்கம் ஃபேஸ்புக் நிறுவனம் சேகரித்த வாட்ஸ்ஆப் நம்பர்களுக்கும் விளம்பரங்கள் வழங்கப்படும்.

விருப்பம்

விருப்பம்

இதில் தனியார் நிறுவனத்திற்கு நீங்கள் விருப்பத்துடன் வழங்கிய தகவல்களை வைத்துக் குறிப்பிட்ட நிறுவனம் உங்களது விளம்பரங்களை ஃபேஸ்புக் மூலம் வழங்கும், ஒருவேலை ஒரே நம்பரை ஃபேஸ்புக்கிலும் நீங்கள் பயன்படுத்தினால் குறிப்பிட்ட விளம்பரம் உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்.

மெசன்ஜர்

மெசன்ஜர்

தற்சமயம் வரை வாட்ஸ்ஆப் நம்பரை ஃபேஸ்புக் மெசன்ஜரிடம் ஒருங்கிணைக்கும் திட்டம் ஏதும் இல்லை என ஃபேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்க்ரிப்ஷன்

என்க்ரிப்ஷன்

வாட்ஸ்ஆப் குறுந்தகவல்கள் தொடர்ந்து முழுமையான என்க்ரிப்ஷன் சேவை தொடரும். முழுமையான என்க்ரிப்ஷன் வசதி இந்த ஆண்டின் துவக்கத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்பேம்

ஸ்பேம்

வாட்ஸ்ஆப் நம்பர்கள் இணைக்கப்பட்ட பின் ஃபேஸ்புக் தகவல்களை கொண்டு ஸ்பேம் தகவல்களை எதிர்கொள்வது எளிமையானதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

விளம்பரம்

எதுவானாலும் எந்தச் சேவையும் லாபமின்றி நீண்ட காலத்திற்கு தொடர இயலாது என்பதையே இந்த முடிவு தெரிவிக்கின்றது.

Best Mobiles in India

English summary
Things to note about WhatsApp sharing your number with Facebook Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X