ஜியோ வேகம் குறைந்திருக்கா, காரணம் இது தான்!!

நாடெங்கும் அதிவேகமாகப் பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவைகளுக்கு இன்றும் நல்ல வரவேற்பு இருந்த போதும். இவற்றின் டேட்டா வேகம் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதன் காரணம் என்னவென்று இங்குப் பார்ப்போமா

By Meganathan
|

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் செய்த துவக்கக் காலத்தில் அதிவேக இண்டர்நெட் வழங்கியதன் காரணமாகத் தனது பயனர் எண்ணிக்கையினை அதிவேகமாக அதிகரித்து வந்தது. நாடு முழுக்கப் பிரபலமான ரிலையன்ஸ் ஜியோ இன்றும் மவுசு குறையாமலே இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, ஜியோ சேவை தரம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. துவக்கத்தில் இவை பொய் எனக் கூறப்பட்டாலும் பின் பயனர்களின் அனுபவம் இவை அனைத்தும் உண்மையென்றே உணர்த்தியது. பெரும்பாலானோர் அனுபவத்தில் ஜியோ வேகம் அறிவித்ததை விடக் குறைவாக உள்ளது எனக் கூறப்பட்டது. பின் நாட்டிலேயே மிகக் குறைந்த இண்டர்நெட் வேகம் குறைந்த சேவையாக ஜியோ அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ வேகம் குறைய உண்மை காரணம் தான் என்ன??

உலகச் சாதனை

உலகச் சாதனை

ரிலையன்ஸ் ஜியோ ஒரு மாத காலத்திலேயே 16 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று உலகச் சாதனை புரிந்திருக்கின்றது. ஜியோவின் இலவச சேவைகளை அனுபவிக்கப் பெரும்பாலானோரும் ஆர்வத்துடன் ஜியோ சிம் வாங்கிச் சென்றதே இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

அதிகப்படியான தரவு பயன்பாடு

அதிகப்படியான தரவு பயன்பாடு

ரிலையன்ஸ் ஜியோ 4ஜி நெட்வர்க் அதிகப்படியான டேட்டா பயன்பாடுகளைத் தினசரி அடிப்படையில் சந்தித்து வருகின்றது. அதன் படி நாள் ஒன்றைக்குச் சுமார் 16,000 TB அதாவது 1,60,00,000 ஜிபி ஆகும். இது சீனா மொபைல் நிறுவனத்தை விட 12,000 TB மற்றும் வோடபோன் குளோபல் நிறுவனத்தை விட 6000 TB அதிக டேட்டா ஆகும்.

வேகம் குறைவு

வேகம் குறைவு

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட அறிக்கையின் படி ஜியோ நொடிக்கு 6.2 எம்பி என்ற வேகம் அளிக்கின்றது. ஏர்டெல் நொடிக்கு 11.4 எம்பியும், வோடபோன் நொடிக்கு 7.6 எம்பியும், ஐடியா 4ஜி நொடிக்கு 7.3 எம்பியும் வழங்குகின்றது. மேலும் ரிலையன்ஸ் 4ஜி வேகமும் நொடிக்கு 7.9 எம்பி அளவு வழங்குகின்றது.

விளக்கம்

விளக்கம்

ஜியோ வேகம் குறைவு எனக் குற்றம் சாட்டுவோர் முதலில் எத்தனை அளவு பயன்பாட்டிற்குப் பின் இதனைத் தெரிவிக்கின்றனர் என்பதையும் கவனிக்க வேண்டும் என்கிறது ரிலையன்ஸ் ஜியோ. பயனர்கள் தினசரி அடிப்படையில் 4ஜிபி என்ற 4ஜி பயன்பாட்டினை கடந்த பின்பு தான் டேட்டா வேகத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது.

காலம்

காலம்

ரிலையன்ஸ் ஜியோ வேகம் குறைவு எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையிலும் பயனர்கள் தொடர்ந்து ஜியோ சிம் வாங்க ஏங்கி வருகின்றனர். அழைப்புகளை மேற்கொள்வதில் ஜியோ சார்பில் கோளாறுகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும் ஜனவரி 2017 என்ற காலகட்டத்திற்குள் இவற்றைச் சரி செய்ய ஜியோவிற்கு நேரம் இருக்கின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஜியோவின் இன்டர்நெட் வேகத்தை எகிறவைக்க 3 சீக்ரெட் செட்டிங்ஸ்.!

ஜியோவின் இன்டர்நெட் வேகத்தை எகிறவைக்க 3 சீக்ரெட் செட்டிங்ஸ்.!

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திவருகிறது,அதன்படி புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்தவண்ணம் உள்ளன. மேலும் டிராய் (Telecom Regulatory Authority of India - Trai) நடத்திய நவம்பர் மாத 4ஜி மொபைல் தரவு வேக சோதனையில் நாட்டின் மிகப்பெரிய மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளது. அது மட்டுமின்றி தொடர்ச்சியாக 11-வது மாதமாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

கடந்த 2017 நவம்பர் மாதத்தில், ஜியோவின் மொபைல் தரவு வேகம் (பதிவிறக்கம்) ஆனது 25.6 எம்பிபிஎஸ் ஆக பதிவாகியுள்ளது. இது 2017 ஆண்டு காலண்டரில் அதிகபட்ச வேகமாகும் என்பதையும் டிராய் சுட்டிக்காட்டியுள்ளது. ஜியோவின் முந்தைய டேட்டா வேகப்பதிவுகளுடன் ஒப்பிடும் போது வெகுவான வளர்ச்சியை நேரடியாகவே காணமுடிகிறது. மேலும் சில ஸ்மார்ட்போன்களில் ஜியோ இணையவேகம் சற்று குறைவாகவே இருக்கும்,இதனை மாற்றவும் ஜியோ இணைய வேகத்தை அதிகரிக்கவும் சில வழிமுறைகள் உள்ளன.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் ஜியோ-சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் அமைப்புக்குள் நுழைய வேண்டும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அதன்பின்பு செட்டிங்ஸ் அமைப்புக்குள் இருக்கும் mobile networks தேர்வுசெய்து access point names-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் அவற்றில் இண்டர்நெட் (ஜியோநெட்) என காண்பிக்கும், அதனை தேர்வுசெய்து உள்நுழைய வேண்டும். பின்பு அவற்றில் server-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து நீங்கள் கிளிக் செய்த server-பகுதியில் JIO NETCONNET-என்று டைப் செய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அதன்பின்பு அந்த செட்டிங்ஸ் பகுதியில் bearer தேர்வுசெய்து, LTE-ஐ கிளிக் செய்ய வேண்டு

வழிமுறை-6:

வழிமுறை-6:

அடுத்து bearer-க்கு கீழே MVNOtype-எனும் விருப்பத்தை தேர்வுசெய்து IMSI-கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-7:

வழிமுறை-7:

மேலும் அந்த செட்டிங்ஸ் பகுதியில் உள்ள authentication type-தேர்வுசெய்து PAP or CHAP--கிளிக் செய்யவேண்டும்,அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனை reboot-செய்துவிட்டு பயன்படுத்தினால் இணையவேகம் சற்று அதிகரிக்கும்.

Best Mobiles in India

English summary
Things to Know about Why Reliance Jio 4G Data Speed is Slow

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X