டெபிட் கார்டு ஹேக்கிங் உடனை தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள்!

இந்திய டெபிட் கார்டு பயனர்களின் தகவல்கள் திருட்டு போகியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக நீங்கள் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போமா?

Written By:

குறிப்பு: உடனே உங்களது டெபிட் கார்டு பின்கோடினை மாற்றிடுங்கள்!

ஆன்லைன் வரலாற்றில் மிகப்பெரிய தகவல் திருட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. அதன் படி சுமார் 3.2 மில்லியன் அதாவது 32 லட்சம் டெபிட் கார்டுகளின் தகவல்கள் திருடப் பட்டிருப்பதாக இது குறித்து வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் பின்கோட்'களை மாற்றக் கோரும் குறுந்தகவல்கள் ஒவ்வொரு வங்கிகளின் சார்பிலும் வாடிக்கைாயளர்களுக்கு அனுப்பப்படும் நோக்கம், இது போன்ற தகவல் திருட்டுகளில் சிக்காமல் இருப்பதற்காகவே ஆகும்.

இம்முறை அரங்கேற்றப்பட்டிருக்கும் டெபிட் கார்டு தகவல் திருட்டு குறித்து விரிவான தகவல்கள் மற்றும் இதற்கு உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவற்றை இங்குத் தெரிந்து கொள்ளுங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

வங்கிகள்

டெபிட் கார்டுகளின் தகவல் திருட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ பேங்க், எஸ் பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளன.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மால்வேர்

இந்தத் தகவல் திருட்டு பெரும்பாலான இந்திய ஏடிஎம்களை தயாரித்து வழங்கும் ஹிட்டாச்சி பேமெண்ட் சர்வீசஸ் மூலம் பயனர்களின் டெபிட் கார்டு தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா

திருடப்பட்ட டெபிட் கார்டுகள் சீனாவின் வெவ்வேறு ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தப்படுவதாக இதன் மூலம் பாதிக்கப்பட்ட பயனர்கள் வங்கிகளிடம் குற்றச்சாட்டு தெரிவித்ததில் இருந்து தெரியவந்திருக்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கார்டு வகை

திருடப்பட்டிருக்கும் டெபிட் கார்டுகளில் சுமார் 26 லட்சம் கார்டுகள் விசா மற்றும் மாஸ்டர் கார்டுகள் என்றும் மீதமுள்ள 600,000 கார்டுகள் ரூபே வகையைச் சேர்ந்தது ஆகும்.

அறிவிப்பு

தகவல் திருடப்பட்டிருக்கும் டெபிட் கார்டுகளை உடனே முடக்கும் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட வங்கிகள் ஈடுபட்டு வரும் போதும், பயனர்கள் உடனடியாக தங்களது ஏடிஎம் பின்கோட்'களை மாற்ற வங்கிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

எச்டிஎஃப்சி வங்கி

இதுபோன்ற பிரச்சனைகளின் காரணமாக எச்டிஎஃப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களை எச்டிஎஃப்சி ஏடிஎம்களை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டிருப்பதாக அந்த வங்கி சார்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சார்பில் இந்தத் தகவல் திருட்டில் பாதிக்கப்பட்ட பயனர்களின் டெபிட் கார்டுகளை பிளாக் செய்ததோடு புதிய டெபிட் கார்டுகளை வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
things to know about over 30 lakh debit cards hacked in india
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்