ஆண்ட்ராய்டு அப்டேட் கவனிக்க வேண்டியவை..!!

Written By:

ஆண்ட்ராய்டு கருவியை எப்படி அப்டேட் செய்ய வேண்டும் என பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும், அப்படி செய்யும் போது கருவியில் சில புதிய பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றது. இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் சில எளிய வழிமுறைகளை செய்து கருவியை புதிய பாதிப்புகளில் இருந்து காத்திடுங்கள்..

ஆப்பிள் ஐபோன் 6எஸ் சிறப்பம்சங்கள்..?

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பேக்கப்

இதை அதிகம் முறை சொன்னாலும் மீண்டும் சொல்வதில் ஏதும் தவறில்லை, கருவியை பேக்கப் செய்ய வேண்டும், பேக்கப் செய்வது கருவியை பாதுகாக்கும் முடிந்த வரை இலவச க்ளவுட் பேக்கப் பயன்படுத்தலாம்.

பேட்டரி

அப்டேட் செய்யும் போது கருவியில் பேட்டரி தீராமல் பார்த்து கொள்ள வேண்டும். எவ்வித அப்டேட்களை இன்ஸ்டால் செய்யும் போதும் கருவியில் குறைந்தபட்சம் 70 முதல் 80 சதவீத சார்ஜ் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ஸ்கிரீன்ஷாட்

அப்டேட் செய்யும் முன் கருவியின் ஹோம் ஸ்கிரீனினை ஸ்கிரீன்ஷாட் எடுத்து கொள்வது நல்லது. இவ்வாறு செய்தால் அப்டேட் முடிந்த பின் கருவியில் ஏற்கனவே இருந்தவாறு மாற்றி கொள்ள முடியும்.

கேச்சி

அப்டேட் முடிந்த பின் சிஸ்டம் கேச்சி ஃபைல்களை அழித்து விடுவது நல்லது, இவ்வாறு செய்தால் பேட்டரி சீக்கிரம் தீரும் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Things to do before and after an Android update to avoid problems. Read more in Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்