புதிய ஆன்டிராய்டு வாங்கியவுடன் இதை தான் செய்ய வேண்டுமாம்

Posted by:

நாளுக்கு நாள் ஸ்மார்ட்போன் சந்தையில் ஆன்டிராய்டு விற்பனை அதிகரிக்கும் நிலையில் புதிய ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் சில விஷயங்களை செய்தால் புதிய கருவியை சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று ஸ்மார்ட்போன் வல்லுனர்கள் தரப்பில் கெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் புதிய ஆன்டிராய்டு ஸ்மார்ட்போன் வாங்கியவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அப்டேட்

எப்பவும் ஆட்டோ அப்டேட் ஆப்ஷனை ஆன் செய்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் கருவி புதிய அப்டேட்களை தானாக நிறைவு செய்து கொள்ளும்.

ஜெஸ்டியூர் கீபோர்டு

இந்த வகை கீபோர்டு மூலம் குருந்தகவல்களை வேகமாக டைப் செய்ய முடியும். இதில் பல புதிய அம்சங்கள் உங்கள் டைப்பிங் வேலையை எளிதாக்கும்.

வாய்ஸ் கமான்டு

ஆன்டிராய்டு கருவிகளில் கூகுள் நௌ மூலம் வாய்ஸ் கமான்டகளை மேற்கொள்ள முடியும். இதை பயன்படுத்த கூகுள் சர்ச் ஆப் சென்று செட்டிங்ஸ் ஆப்ஷனை தேர்வு செய்து ஓகே கூகுள் என்று சொன்னால் போதுமானது.

ப்ரவுஸர்

இணையத்தை பயன்படுத்த கூகுள் க்ரோம் செயளியை பயன்படுத்தலாம். இன்று பல புதிய ஸ்மார்ட்போன்களும் க்ரோம் இன்ஸ்டால் செய்யப்பட்டு தான் வெளியாகின்றது.

வழி துணை

இன்டெர்நெட் இல்லாமல் வரைபடம் பயன்படுத்தலாம்.

வயர்லெஸ் டெஸ்க்டாப்

ரிமோட் டெஸ்க்டாப் செயலி மூலம் உங்கள் கணினியை ஆன்டிராய்டு கருவியின் மூலம் பயன்படுத்த முடியும்.

கூகுள் மேனேஜர்

கூகுளில் இருந்து Find My Phone செயலியை பதிவிறக்கம் செய்தால், திடீரென ஸ்மார்ட்போன் தொலைந்தால் போன் இருக்கும் இடத்தை இந்த செயளி காட்டி கொடுக்கும்.

க்ளவுட் புகைப்படங்கள்

நீங்கள் எடுக்கும் புகைப்படங்களை தொலையாமல் இருக்க கூகுள்+ அக்கவுன்ட் மூலம் ஆட்டோ பேக்கப் செய்து கொள்ள முடியும்.

ஸ்மார்ட் ஐகான்கள்

காலியாக இருக்கும் ஹோம் ஸ்கிரீனை சில அழகிய விட்ஜெட்களை வைத்து கொள்ளலாம்.

பாதுகாப்பு

ஆன்டிராய்டு கருவிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள ஆன்டிவைரஸ் பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Things You Need To Do After Buying A New Android Smartphones. Check out some interesting things You Need To Do After Buying A New Android Smartphones.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்