பட்ஜெட் ஸ்மார்ட்போன் - எச்சரிக்கை அவசியம்..!

By Meganathan

பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பது ஸ்மார்ட்போன் வல்லுநர்களின் கருத்து. விலை அதிகமாக செலவு செய்யும் போது அவைகளில் பெரும்பாலும் கொடுக்கும் காசுக்கு ஏற்ற சிறப்பம்சங்கள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு விடும்.

குறைந்த விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்கள்..

ஆனால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் போது நிலைமை முற்றிலும் வேறாக தான் இருக்கின்றது. குறைந்த விலை கருவிகளில் அவசியம் கவனிக்க வேண்டியவைகள் இருக்கின்றன, அவ்வாறு அவசியம் கவனிக்க வேண்டியவைகளை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

அம்சங்கள்

அம்சங்கள்

குறைந்த விலையில் போன்களை தயாரிக்கும் போது பெரும்பாலான நிறுவனங்கள் பல அம்சங்களை குறைத்து ஒரே ஒரு அம்சத்தினை மட்டும் விளம்பரம் செய்வர். இதனால் ஒவ்வொரு சிறப்பம்சத்தினையும் அதிக கவனத்துடன் பார்த்து அதன் பின் தேர்வு செய்யலாம்.

ஹார்டுவேர்

ஹார்டுவேர்

பட்ஜெட் விலை எந்பதால் குறைந்த ரக ஹார்டுவேர் தான் இருக்க வேண்டும் என்பதில்லை, குறைந்த விலையில் சிறந்த ஹார்டுவேர் வழங்கும் கருவிகளை தேர்ந்தெடுக்கலாம்.

ஒப்பீடு

ஒப்பீடு

விலை குறைந்த ஸ்மார்ட்போன்களை விலை உயர்ந்த கருவிகளுடன் ஒப்பிடவே கூடாது. பட்ஜெட் விலை கருவிகளை வாங்கும் போது அதில் வழங்கப்பட்டிருக்கும் சிறப்பம்சங்களை சிறப்பாக பயன்படுத்தி கொள்ளுங்கள்.

இயங்குதளம்
 

இயங்குதளம்

ஆண்ட்ராய்டு, விண்டோஸ், ப்ளாக்பெரி என பல்வேறு இயங்குதளங்களை கொண்டு ஸ்மார்ட்போன்கள் இயங்குகின்றன. இதனால் வாங்கும் முன் அதன் இயங்குதளம் குறித்த தகவல்களை சேகரிக்க தவறாதீர்கள். ஒவ்வொரு இயங்குதளமும் அதற்கு ஏற்ற ஹார்டுவேர் இருந்தால் மட்டும் தான் சீராக இயங்கும்.

சர்வீஸ்

சர்வீஸ்

உங்களது கருவிக்கு ஏதும் பிரச்சனை ஏற்பட்டால் குறிப்பிட்ட நிறுவனம் உங்களது பிரச்சனையை சரி செய்ய ஏதுவாக இருக்குமா என்பதையும் பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் நிறுவனம் குறித்த தகவல்களை அந்நிறுவனத்தின் இணைய பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

 
Read more about:
English summary
Check out here Things To Consider While Buying A Budget Smartphone. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X