ஆப்பிள் மறைத்த ரகசியங்கள்..!!

By Meganathan
|

ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகம் செய்த ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி என அனைத்து ஆப்பிள் கருவிகள் குறித்த செய்திகள் இணைய உலகை ஆக்கிரமித்து வரும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் தனது வாடிக்கையாள்ரகளிடம் இருந்து மறைத்த சில தகவல்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

ஐபோன் 6எஸ் : நல்லதா கெட்டதா..?, நம்பலாமா நம்ப கூடாதா..??

ஆப்பிள் டிவி குறித்து அந்நிறுவனம் மறைத்த சில ரகசிய தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

காப்பி அடித்த ஆப்பிள் : அம்பலமான பகீர் தகவல்கள்..!?

4கே வீடியோ

4கே வீடியோ

ஆப்பிள் ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகளால் 4கே ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும், ஐபேட் ப்ரோ கொண்டு 4கே வீடியோக்களை எடிட் செய்யவும் முடியும், ஆனால் ஆப்பிள் தொலைகாட்சியில் 4கே வீடியோக்களை பார்க்க முடியாது.

கேம்ஸ்

கேம்ஸ்

ஆப்பிள் தொலைகாட்சிகளில் குறைந்த அளவிலான கேம்களை மட்டுமே விளையாட முடியும், ஆப்பிள் டிவியில் செயலிகளின் அளவு 200 எம்பி மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

வை (Wii) போன்றே ஆப்பிள் தொலைகாட்சிகளிலும் கைரோஸ்கோப் மற்றும் அக்செல்லோமீட்டர் போன்றவைகள் பொருத்தப்பட்டுள்ளன. இருந்தும் ஆப்பிள் நிறுவனம் ரிமோட் லூப்களை தனியே விற்பனை செய்கின்றது.

மெமரி

மெமரி

புதிய ஆப்பிள் தொலைகாட்சிகள் 32ஜிபி மற்றும் 64ஜிபி என இரு வகை மெமரிகளை கொண்டிருக்கின்றது. ஆனால் மெமரியை மேலும் நீட்டிக்கும் வசதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

யுஎஸ்பி-சி

யுஎஸ்பி-சி

ஆப்பிள் தொலைகாட்சியின் பின் புறம் ஒரு யுஎஸ்பி சி போர்ட் காணப்படும் ஆனால் அவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.

ரிமோட்

ரிமோட்

புதிய ஆப்பிள் டிவியின் ரிமோட் 'சிரி ரிமோட்' என அழைக்கப்படுகின்றது. இதில் ரீசார்ஜ் செய்ய கூடிய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் அதனினை கழற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

சவுன்டு

சவுன்டு

புதிய ஆப்பிள் டிவியில் 7.1 சரவுன்டு சவுன்டு சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.

எச்டிஎம்ஐ

எச்டிஎம்ஐ

செட் டாப் பாக்ஸ் கருவியை டிவியுடன் இணைக்க எச்டிஎம்ஐ கேபிள் தான் மிகவும் முக்கியமானதாகும், ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த கேபிளை வழங்காது, மாறாக நீங்களே உங்களுக்கான கேபிளினை வாங்க வேண்டும்.

முடிவு

முடிவு

ஆப்பிள் டிவி 32ஜிபி விலை $149க்கும் மற்றும் 64ஜிபி விலை $199 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Things Apple didn't tell you about the new Apple TV. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X