"பாட்ஷா பாய் போல" அனில் அம்பானியின் அறியப்படாத பக்கங்கள்.!

ஜார்ஜ் புஷ் - திருப்பதி கோவில் - தன்ராஜ் பிள்ளை - அனில் அம்பானி - என்னென்ன தொடர்பு.?

Written By:

எல்லோருக்குள்ளுமே யாருக்கும் தெரியாத பல முகங்கள், பல கதைகள், பலபண்புகள் உண்டு. அது எப்போது வேண்டுமானாலும் வெளிப்படலாம் அல்லது எப்போதுமே வெளிப்படாமல் போகலாம் - அதுவல்ல விடயம், நமக்குள்ளே அவைகள் நிச்சயமாக இருக்கிறது என்பது தான் இங்கே விடயம்.!

அப்படியாகத்தான் இந்தியாவின் பிரபல தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர்களுள் ஒருவரான அனில் திருபாய் அம்பானிக்கும் நாம் சற்றும் யோசித்துக்கோடா பார்த்து விட முடியாத பல அறியப்படாத முகங்கள் உள்ளது. அந்த முகங்கள் என்ன.? அதிலிருந்து வெளிப்படும் நிஜங்கள் என்னென்ன.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

ஜார்ஜ் புஷ் மூலம் ஈர்க்கப்பட்டவர்

ஒவ்வொரு நாளின் காலையிலும் 5 மணிக்கெல்லாம் அனில் அம்பானியின் நாள் இயங்க தொடங்கும். மும்பை மராத்தான் போட்டியின் ஒரு வழக்கமான பங்களிப்பாளர் ஆன அனில் அம்பானி அவரது இந்த உத்வேகத்திற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தான் என்கிறார். உண்மையில் ஒரு நல்ல ரன்னர் ஆகும் பொருட்டு, அனில் அம்பானி யோகா பயிற்சியும் எடுத்து வருகிறார்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லை

அனில் அம்பானி ஒரு மிகப்பெரிய பணக்காரர் மற்றும் அதிகாரம் படைத்தவராக இருப்பினும் பிற பணக்கார கும்பலை போல எந்த விதமான தவறான விடயங்களுக்கும் அடிமையாகாமல் ஒதுங்கியே வாழ்கிறார். அனில் அம்பானிக்கு குடிபழக்கமும், புகைக்கும் பழக்கமும் கிடையாது.

நேரம் தான் பணம்

அனில் அம்பானிக்கு கெடுபிடியான நேர மேலாண்மை அதிகமாகவே உள்ளது. காலை 9.30 மணிக்கு அலுவலகத்தில் இருப்பார் மற்றும் இரவு 9.30க்கு அலுவலகத்தை விட்டு வெளியேறுவார், 12 மணி நேர வேலை நாள் என்பதை இந்த வணிக அதிபர் கட்சிதமாக பின்பற்றுபவர் ஆவார்.

நாத்திகர் அல்ல

அனில் அம்பானி கடவுளின் ஒரு தீவிர விசுவாசி ஆவார் மற்றும் எந்த முக்கியமான காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் திருப்பதி கோவிலுக்கு செல்லும் பழக்கம் கொண்டவர்.

ஆட்டோகிராப், பரஸ்பர கொடுக்கல்-வாங்கல்

அனில் அம்பானி எப்போதுமே ஆட்டோகிராப் அளிக்க மட்டுமே செய்ய மாட்டார், பதிலுக்கு கேட்கவும் செய்வாராம். ஒருமுறை தன்ராஜ் பிள்ளை அனில் அம்பானியை சந்தித்தபோது அவரது கையொப்பத்தை கேட்டபோது அவர் ஒரு நிபந்தனை விதிக்கிறார். தன்ராஜ் பிள்ளை அவரது கையொப்பத்தை கொடுக்க வேண்டும் பின்னர் பதிலுக்கு தனது கையொப்பத்தை கொடுக்கிறேன் என்பது தான் அந்த நிபந்தனை.!

மேலும் படிக்க

சுந்தர் பிச்சையின் 'மறைக்கப்படும்' முகங்கள்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Read more about:
English summary
This is a side of Anil Ambani you will have never seen. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்