உயர்மட்ட இரகசிய திட்டத்தில் 6 பெண்களுக்கு 'நிகழ்த்தப்பட்ட' வரலாற்று துரோகம்.!

விடாது போராடும் போர்க்குணம் கொண்ட பெண்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.!

|

1942 ஆம் ஆண்டுக்கு முன்பு ஆறு கணிதவியலாளர்கள், ஒரு உயர்மட்ட இரகசிய திட்டத்தில் வேலை செய்வதற்காக அமெரிக்க அரசால் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் பணி - அமெரிக்கா முதல் மின்னணு டிஜிட்டல் கணினியை உருவாக்க வேண்டும் என்பது தான்..!

எந்தவொரு முறையான குறியீட்டு மொழியும், அதிநவீன கருவிகளும் இல்லாத அந்த காலக்கட்டத்தில் அது பெரிய சவாலான அதேப் சமயம் சரித்திர புகழ்மிக்க ஒரு வேலையாக இருந்தது. ஆனால், அதனுடன் சேர்த்து ஒரு வரலாற்று துரோகமும் நிகழ்த்தப்பட இருந்தது..!

இயந்திரம்

இயந்திரம்

எந்தவொரு இயந்திரத்தை விடவும் 10,000 மடங்கு வேகமாக அதே சமயம் சிக்கலான கணக்கீடுகள் செய்ய தகுந்த ஒரு இயந்திரம் உருவாக்கப்பட வேண்டும் என்று அந்த 6 பெண் கணிதவியலார்களும் பணிக்கப்பட்டனர்.

டிஜிட்டல் புரட்சி

டிஜிட்டல் புரட்சி

உண்மையில் சொல்லப்போனால் இந்த பணியை டிஜிட்டல் புரட்சியின் ஆரம்பம் என்றே கூறலாம். இந்த பணிக்காக - பெட்டி ஜீன் ஜென்னிங்ஸ் பரடிக், காத்லீன் மெக்நல்டி மொச்லி அண்டோநெல்லி, ரூத் லிட்சர்மென் டெடல்பாம், பிரான்சஸ் பிளாஸ் ஸ்பென்ஸ் , மர்லின் வெஸ்காப் மெல்ட்சர் , மற்றும் பெட்டி ஸ்னைடர் ஹோல்பர்டன் என்ற 6 பெண்கள் நியமிக்கப்பட்டன.

ப்ரோகிராமிங் :

ப்ரோகிராமிங் :

இனியாக் (ENIAC) அதாவது எலெக்ட்ரானிக் நுமரிக்கல் இன்டர்கிரேட்டர் அண்ட் கம்ப்யூட்டர் (Electronic Numerical Integrator and Computer) என்ற இயந்திரத்தை உருவாக்கியது பெரும்பாலும் ஆண்கள் உள்ளடங்கிய ஒரு குழு தான். ஆனால், அதை இயக்கம் செய்ய ப்ரோகிராமிங் செய்தது இந்த 6 பெண்கள் மட்டும் தான்..!

திறமைசாலிகள்

திறமைசாலிகள்

முதல் மின்னணு டிஜிட்டல் கணினி உருவாக்கப்பட்ட காலத்தில், இந்த 6 பெண்கள் கொண்ட குழுவந்து அனைவராலும் 'கம்ப்யூட்டர்' என்று செல்லமாக அழைக்கப்பட்டது என்பதும், அந்த அளவிற்கு அவர்கள் திறமைசாலிகளை இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெரிய அறை

பெரிய அறை

கிட்டத்தட்ட 18,000 வெற்றிட குழாய்கள், 70,000 ரெசிஸ்டர்கள் , 10,000 மின்தேக்கிகள், 5 மில்லியன் ஹாண்ட் சொல்டர்டு ஜாயின்ஸ் என ஒரு பெரிய அறை முழுக்க வயரிங் விளக்கப்படங்கள் மற்றும் கம்ப்யூட்டருக்கான ரவுண்ட்-தி-கிளாக் அக்செஸ் (round-the-clock access) என அனைத்தையும் அந்த 6 பெண்கள் செய்து கொடுத்தனர்.

வெற்றி

வெற்றி

இரண்டு முதல் மூன்று ஷிப்ட்கள் என, வாரம் 6 நாட்கள் கடுமையாக உழைத்த இந்த 6 பெண்கள் கொண்ட குழுவானது இறுதியில் தனக்கு கொடுத்த பணியை வெற்றிகரமாக செய்து முடித்தது. பின் அந்த கம்ப்யூட்டர்தனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அனைவருக்கும் கற்றும் கொடுத்தனர்.

ஓரமாக நிறுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர்

ஓரமாக நிறுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர்

பின்பு இனியாக் ஆனது செய்தியாளர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது, இனியாக்-கின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்த 6 பெண்களும் எதோ மெஷின் அருகே நிற்க வைக்கப்டும் மாடல்கள் போல ஒரு ஓரமாக நிறுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர். பாலின பிரச்சனையால் அந்த 6 பெண்களின் திறமையும் உழைப்பும் பூசிமொழுகப்பட்டது.

சான்று கிடையாது

சான்று கிடையாது

இந்த 6 பெண்களுக்கும் அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப் பட்டதோடு சரி, அது தவிர்த்து இனியாக் ப்ராஜக்ட்டிற்கும், இவர்களுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு எந்த விதமான அதிகாரப்பூர்வ சான்றும் கிடையாது.

உச்சகட்ட துரோகம்

உச்சகட்ட துரோகம்

அதுமட்டுமின்றி 'இனியாக்' அறிமுகம் செய்யப்பட நாள் அன்று நடத்தப்பட்ட விருந்தில் சக ஆண் ஊழியர்களுக்கு அருகில் அமர இந்த 6 பெண்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது என்பது தான் உச்சகட்ட துரோகம்..!

உலகத்திற்கு அம்பலமானது

உலகத்திற்கு அம்பலமானது

50 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 1997 ஆம் ஆண்டு தான் இந்த 6 பெண்களின் பெரும் பங்களிப்பு உலகத்திற்கு அம்பலமானது. பின்பு தான் அவர்கள் கவுரவிக்கப்பட்டர்கள், தொழில்நுட்ப உலகமே அவர்களை பாராட்டித் தள்ளியது.

ஆவணப்படம்

ஆவணப்படம்

பின்பு 2014 ஆம் ஆண்டு இந்த 6 பெண்கள் மற்றும் அவர்களின் அதீத உழைப்பு சார்ந்த ஆவணப்படமான - 'தி கம்ப்யூட்டர்ஸ்' வெளியானது. விடாது போராடும் போர்க்குணம் கொண்ட பெண்களுக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

சிலிக்கான் வேலியின் 'செக்சிஸம்' - போட்டு உடைத்த சூசன் ஃப்ளவர்.!

Best Mobiles in India

English summary
These 6 women were written out of the history of technology. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X