10,900 எம்ஏஎச் - 'மரண அடி அடித்தாலும்' பேட்டரி மட்டும் காலியே ஆகாது.!

இனி 3000 மற்றும் 3400 எம்ஏஎச் பேட்டரிகள் எல்லாம் பெரிய விடயமாகவே தெரியாது. ஏனெனில் யாவோ 6000 கருவியின் பேட்டரி 10,900 எம்ஏஎச் ஆகும்.

Written By:

"பேட்டரி லைஃப்" என்று கூறியதுமே நம் அனைவரின் நினைவிற்குள்ளும் நோக்கியா பீச்சர் போன்களின் ஞாபகம் வருவதில் எந்த ஆச்சரியமுமில்லை. ஒருமுறை முழு சார்ஜ் செய்தாலே போதும், ஒரு நாள் அல்ல இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட ஒரு வார காலம் வரையிலாக பேட்டரி ஆயுள் நீடிக்கும் தன்மை கொண்ட நோக்கியா பீச்சர் கருவிகளை அவ்வளவு எளிதாக யாராலும் மறந்து விட இயலாது. அப்படியான பேட்டரி ஆயுள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற நமது கற்பனை குரல் சீனாவில் கேட்டு விட்டதும் போலும். உருவாக்கப்பட்டது - யாவோ 600 ஸ்மார்ட்போன்.!

ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்குவதாக இருந்தாலும் சரி, அல்லது மிக பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் கருவியை வாங்குவதாக இருந்தாலும் சரி அனைவரும் நிச்சயமாக கவனிக்கும் ஒரு அம்சமாக கருவியின் பேட்டரி லைஃப் திகழ்கிறது. பெரும்பாலும் ஒன்று அல்லது அல்லது இரண்டு நாட்கள் வரை பேட்டரி தாக்குப்பிடிக்கும் அளவிலான ஸ்மார்ட்போன்களையே நாம் அதிகம் தேர்வு செய்வோம் ஏனெனில் பேட்டரி ஆயுள் என்பதின் முக்கியத்துவதை இக்கட்டான பல சூழ்நிலைகளில் நாம் அனுபவித்திருப்போம்.

அம்மாதிரியான சூழ்நிலைகளை தவடிபொடியாக்கும் எண்ணத்தில் அறிமுகமாகியுள்ளது 10,900 எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

அறிமுகம்

சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் கருவி தான் யாவோ (YAAO) 6000 என்ற ஒரு அபாரமான 10,900எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன்.

கேலக்ஸி எஸ்7, ஒன்ப்ளஸ் 3டி

3,000 எம்ஏஎச் பேட்டரி திறன் வழங்கும் கேலக்ஸி எஸ்7, 3,400 எம்ஏஎச் பேட்டரி திறன் வழங்கும் புதிய ஒன்ப்ளஸ் 3டி ஆகியகருவிகள் தான் சந்தையில் பேட்டரி சார்த்த அம்சத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரசாதமாய் திகழ்ந்து வந்தது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கருவியின் அளவு

ஒரு ஸ்மார்ட்போனுக்கு பவர் பேங்க் அளவிலான மிகப்பெரிய பேட்டரி எப்படி இருக்க முடியும், அப்படியானால் இக்கருவியின் அளவு என்னவாக இருக்கும் என்பது இப்போது வரையிலாக ஆச்சரியமான விடயம் தான். ஆனால் தகவல்களின்படி இக்கருவியின் அளவு ஒரு நிலையான சாதனத்தை விட மிக பெரிதாக இருக்காது என்று அறியப்படுகிறது.

குழப்பமான கேள்வி

10,900எம்ஏஎச் பேட்டரி ஆனது ரிமூவபிள் பேட்டரி என்பது போல் தெரிவதால், பயனர்கள் ஒரு உதிரி கொண்டு அதனை இடமாற்ற முடியும், அப்படியிருக்க ஏன் இக்கருவிக்கு இவ்வளவு அதிகமாக பேட்டரி ஆயுள் என்பது அனைவருக்குள்ளும் எழும் குழப்பமான கேள்வி.

ரேம், மெமரி, டிஸ்ப்ளே

பேட்டரி தவிர்த்து கருவியின் பிற எந்த அம்சங்களும் ஈர்க்கும் வண்ணம் இல்லை. 1ஜிபி ரேம், விரிவாக்கம் செய்யக்கூடிய 16 ஜிபி மெமரி, மற்றும் ஒரு 5.5-அங்குல 720 x 1280 டிஸ்ப்ளே ஆகியவைகளை இக்கருவி கொண்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிரா

உடன் மீடியாடெக் எம்டி6735 க்வாட்-கோர் எஸ்ஓசி மூலம் இயங்குகிறது மற்றும் கேமிரா துறையை பொருத்தவரையில் பின்புற கேமிரா 13 எம்பியும் முன்பக்க கேமிரா 5-மெகாபிக்சல்களும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

அமேசானில் மோட்டோ ஜி கருவிகளுக்கு விலைகுறைப்பு மற்றும் கேஷ்பேக் சலுகை.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
The YAAO 6000 is a smartphone with a 10,900mAh battery. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்