இவன் பெயர் பெப்பர், சிட்டி ரோபோவின் தம்பி..!

By Meganathan
|

எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் அறிமுகப்படுத்திய சிட்டி ரோபோ போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோ உலகில் கண்டறியப்பட்டால் எப்படி இருக்கும். நல்லா தான் இருக்கும் ஆனால் இதெல்லாம் நடக்குமா என்கின்றீர்களா, நடத்தி காட்டியுள்ளனர் ஜப்பான் காரர்கள்..

ஆடு, மாடு போல வீடும் நடக்கும்..!

டோக்யோவின் சாஃப்ட்பேங்க் நிறுவனம் பெப்பர் என்ற பெயரில் ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோட் மனிதனுக்கு இணையாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதோடு அதற்கு பதில் அளிக்கவும் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் செய்தியாளர்களுக்கு பெப்பர் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பெப்பர் நடனம் ஆடுயதோடு, பிறந்நாள் பாட்டு ஒன்றையும் பாடியது. மேலும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் செய்தது அனைவரையும் கவர்ந்தது.

இவன் பெயர் பெப்பர், சிட்டி ரோபோவின் தம்பி..!

பெப்பரில் பொருத்தப்பட்டிருக்கும் விசேஷ கோடுகள் மனிதர்களுடன் உரையாடுவது மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் செய்கின்றது. இந்த ரோபோட் மகிழ்ச்சி, கோபம், வியப்பு மற்றும் சோகம் உள்ளிட்டவற்றை முக பாவனைகளை கொண்டு கண்டறிகின்றது. மேலும் பயனாளியின் விருப்பங்களை அறிந்து கொள்வதோடு தெரிந்தவர்கள் பார்த்தால் உடனே சிரிக்கவும் பார்க்காத நேரங்களில் சோகமாக இருக்கும் படி ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா ரிட்டர்ன்ஸ் - சிங்கம் களம் இறங்கிடிச்சு டோய்..!

உலகில் மனிதர்களுக்கு உதவியாக இருக்கும் பல ரோபோட்கள் கண்டறியப்பட்டு விட்டன ஆனால் மனிதர்களுடன் உணர்ச்சிகளை பறிமாறி கொள்ளும் ரோபோட் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோளாக இருந்தது என சாஃப்ட்பேங்க் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மசயோஷி சோன் தெரிவித்தார்.

இவன் பெயர் பெப்பர், சிட்டி ரோபோவின் தம்பி..!

முதல் கட்டமாக ஜப்பானில் மட்டும் ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் பெப்பர் ரோபோட் விலை $1600 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளில் இதன் விற்பனை 2016 ஆம் ஆண்டில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Tokyo robotics company Softbank is getting ready to launch its latest design - a robot called "Pepper" which can not just recognise human emotions

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X