ஹிட்லரின் நாஸி 'இரகசியங்கள்'..!

Posted by:

ஹிட்லரின் நாஸி படை போலாந்துக்குள் படையெடுக்கவும், ஆரம்பித்தது இரண்டாம் உலக யுத்தம். இந்த நிகழ்வு நடந்து 76 ஆண்டுகள் ஆகிவிட்டன, இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போர் மற்றும் ஹிட்லர் ஆகிய இரண்டு மாபெரும் வரலாறுகளும் முடிந்ததாய் இல்லை.

மூன்றாம் உலகப்போர் உறுதி : அமெரிக்கா, ரஷ்யா, சீனா தயார்..!

அனுதினம் பல விடயங்கள் வெளிவந்து கொண்டே தான் இருக்கின்றன, சில சமயம் அம்பலமாகி கொண்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம்.

பதற வைக்கும் ஜெர்மனி : திடுக்கிடும் தகவல்கள்..!!

அப்படியாக, இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில் நிகழ்காலத்தை தோற்கடிக்கும் சில அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் (Future Weapons) உருவாக்கப்பட்ட சான்றுகள் வெளியாகி உள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

வெற்றி பங்கு :

ஹிட்லரின் மாபெரும் வெற்றிகளுக்கு பின் அவரின் நாசி படையினருக்கு மட்டுமில்லை, ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில்நுட்ப விஞ்ஞானிகளுக்கும் பெரிய பங்கு உண்டு என்பதே நிதர்சனம்.

ஜெர்மானிய வளர்ச்சி :

அதிகப்படியான புகைப்பழக்கத்தின் மூலமாகத்தான் புற்றுநோய் உண்டாகிறது என்பதை முதன்முதலில் கண்டுபிடித்தது ஜெர்மானிய விஞ்ஞானிகள்தான் - என்பதில் இருந்து அவர்களின் அதிநவீன வளர்ச்சியை புரிந்து கொள்ள முடிகிறது.

வருங்காலம் :

அப்படியாக, இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்திலேயே நாஸி என்ஜினீயர்கள், வருங்காலத்தை மனதில் கொண்டு அதிநவீன ஆயுதங்களை உருவாக்க தொடங்கி விட்டனராம்.

பட்டியல் :

அந்த ஆயுதங்கள் அனைத்தும் ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) என்ற பட்டியலில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியமானவை :

அப்படியாக, உருவான அதிநவீன ரகசிய ஆயுதங்களில் - சோனிக் கேனான்கள் (Sonic Cannons), எக்ஸ்-ரே துப்பாக்கிகள் (X-Ray Guns), லேன்ட் க்ரூஸர்ஸ் (Land cruisers) ஆகியவைகள் மிக முக்கியமானவைகளாகும்.

நாளிதழ் :

உலகப்போர் தொடங்கி 67 ஆண்டுகள் ஆனதையோட்டி 'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' (Weapons of WWII) என்ற பெயரில் வெளியான நாளிதழ் ஒன்று ஹிட்லரின் நாஸி ரகசிய ஆயுதங்களை ஆவணப்படுத்தியுள்ளது.

தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் :

அந்த தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்ட நாஸி ரகசிய ஆயுதங்களில் ஒன்று தான் - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ் (The Fritz X)..!

கொள்ளுத்தாத்தா :

இக்கால நவீன வகை ஆயுதமாக கருதப்படும் 'ஸ்மார்ட் பாம்'களின் (Smart Bomb) கொள்ளுத்தாத்தா தான் இந்த - தி ஃப்ரீட்ஸ் எக்ஸ்..!

ரகசியம் :

அது மட்டுமின்றி இது தான் ஹிட்லரின் மிகவும் ரகசியமான ஆயுதங்களில் ஒன்றாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் ரேடியோ :

317.5 கிலோ வெடி பொருளை உள்ளடக்கிய இந்த ஆயுதமானது வயர்லெஸ் ரேடியோ மூலம் கட்டுப்படுத்தப்பட்ட ஆயுதமாகும்.

ஹோர்டன் ஹோ 229 பாமர் :

ஹிட்லரின் ரகசிய வருங்கால ஆதிநவீன ஆயுதங்கள் (Secret Weapons of the future) பட்டியலில் அடுத்த இடத்தில் இருக்கும் ஆயுதம் தான் - ஹோர்டன் ஹோ 229 பாமர் (Horten Ho 229 bomber)..!

முன்மாதிரி :

இவ்வகை "ஃப்ளையிங் விங்" பாமர் ("flying wing" bomber) தான் உலகின் முதல் முன்மாதிரி கள்ள விமானம் (world's premiere stealth aircraft) ஆகும்..!

வேகம் :

அது மட்டுமின்றி, ஹோர்டன் ஹோ 229 பாமர் ஆனது சுமார் 907 கிலோ வெடிபொருளை உள்ளடக்கி, மணிக்கு 600 மைல் வேகத்தில் பயணிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதன்முதலில் :

1944-ஆம் ஆண்டு முதன்முதலில் விண்ணில் சீறிப் பாய்ந்த, இவ்வகை விமானம் 2 டர்போ என்ஜீன்கள், 2 பீரங்கிகள் மற்றும் ஆர்4எம் (R4M) ராக்கெட்களை உள்ளடக்கி இருந்ததாம்.

அதிநவீனம் :

நார்த்‌ரப் கிருமன் பி-2 பாம்‌பர் (Northrop Gruman B-2 bomber) போன்ற, இக்கால அதிநவீன ஸ்டீல்த் (Stealth) விமானங்களெல்லாம் பார்த்தே உருவாக்கப்பட்டனர் என்பது தான் ஹிட்லரின் நாஸி என்ஜினீயர்களின் அதிநவீனமாகும்.

பீட்டல் டேங்ஸ் :

'இரண்டாம் உலகப்போரின் ஆயுதங்கள்' என்ற தொகுப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள நாஸி படையினரின் மற்றொரு ரகசிய ஆயுதம் தான் - பீட்டல் டேங்ஸ் டு தி அல்லிஸ் (Beetle tanks to the Allies)..!

சிறிய வகை டாங்கி :

பீட்டல் டேங்ஸ் என்பது ஜாய் ஸ்டிக் (Joystick) மற்றும் எலெக்ட்டிரிக் மோட்டார் (Electric motors) அல்லது கேஸ் பர்னர்ஸ் (Gas Burners) பயன்படுத்தி கட்டுப்படுத்தும்படி வடிவமைக்கப்பட்ட சிறிய வகை டாங்கிகள் ஆகும்.

ஜாய் ஸ்டிக் :

60 முதல் 100 கிலோ எடை வரை வெடிபொருள் உள்ளடக்கப்பட்ட பீட்டல்கள், ஜாய் ஸ்டிக் கன்ட்ரோல் மூலம் எதிரிகளின் பெரிய வகை டாங்கிகளின் அடியில் செலுத்தப்பட்டு, வெடிக்க வைக்கப்படுமாம்.

டூடல் பக்ஸ் :

இவ்வகை ஆயுதத்தை நாஸி படையினர் "டூடல் பக்ஸ்" (Doodle Bugs - ஒரு வண்டு வகை) என்றும் அழைப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னோடி :

இக்கால அதிநவீன ரேடியோ கன்ட்ரோல்டு (Radio-Controlled) ஆயுதங்களின் முன்னோடி தான் இந்த - 'பீட்டல் டேங்ஸ்', என்பதில் எந்த சந்தேகமுமில்லை..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
ஹிட்லரின் ரகசிய கண்காணிப்பில், அதிநவீன எதிர்கால ஆயுதங்கள் உருவாக்கப்பட்ட சான்றுகள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்