ஆஹா..! 2016-ன் குண்டக்க மண்டக்க டெக்னாலஜி தயாரிப்புகள்.!

உடற்பயிற்சி உபகரணங்கள், அபாரமான கேமிரா, 3D தொலைக்காட்சிகள், 360 டிகிரி கேமிரா, பேட்டரி சைக்கிள் என நம்மை அசத்திய டெக்னாலஜி பொருட்கள் பல.

By Siva
|

சமீபத்தில் முடிந்துள்ள 2016ஆம் ஆண்டு டெக்னாலஜி ஆண்டு என்றே சொல்லலாம். பல வெற்றிகரமான டெக்னாலஜி தயாரிப்புகள் பொதுமக்களுக்கு பெரிதும் உபயோகமாக இருந்தது. மொபைல் போனையும் தாண்டி பல அற்புதமான டெக்னாலஜி பொருட்கள் கடந்த ஆண்டில் வெளிவந்து மாபெரும் வரவேற்பை பெற்றது.

உடற்பயிற்சி உபகரணங்கள், அபாரமான கேமிரா, 3D தொலைக்காட்சிகள், 360 டிகிரி கேமிரா, பேட்டரி சைக்கிள் என நம்மை அசத்திய டெக்னாலஜி பொருட்கள் பல.

2016-ல் வெளியான 5 சிறந்த பெஸல் லெஸ் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்கள்

கடந்த ஆண்டு வெளியான பெரும்பாலான டெக்னாலஜி பொருட்களை போதிய விளம்பரம் இல்லாததால் இந்தியர்கள் அறிந்திருக்கவில்லை. இந்நிலையில் இந்த பொருட்கள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

சியாமி ஒய் 4K ஆக்சன் கேமிரா 2:

சியாமி ஒய் 4K ஆக்சன் கேமிரா 2:

சியாமி நிறுவனத்தின் மற்றொரு அற்புதமான படைப்பு இந்த சியாமி ஒய் 4K ஆக்சன் கேமிரா 2. கடந்த ஆண்டு இந்திய சந்தையில் வெளியான இந்த கேமிராவில் உயர்தரமான புகைப்படங்கள் பதிவு செய்யும் வசதி இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றது.

சியாமி ஒய் 4K ஆக்சன் கேமிரா 2 துல்லியனான 4K வீடியோ எடுப்பதில் கில்லாடி. 4K வீடியோவை 30fps தரத்திலும் , ஃபுல் HD வீடியோவை 120fps தரத்திலும், HD வீடியோவை 240 தரத்திலும் எடுக்கவல்லது இந்த கேமிரா.

இந்த சியாமி ஒய் 4K ஆக்சன் கேமிரா 2 வில் சோனி நிறுவனத்தின் 12 MP இமேஜ் சென்சார் உள்ளது. மேலும் இதில் 160 டிகிரி ஆங்கில் எல்ன்ஸ், அம்பிரல்லா A9 சிப்செட் ஆகியவை அமைந்துள்ளது.

ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போன்

ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போன்

சீனாவின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான ஹாவாய் நிறுவனம் சமீபத்தில் தனது 3வது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடியதோடு, புதிய அறிவிப்பு ஒன்றையும் அறிவித்தது. அதுதான் ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போன்.

கண்ணை கவரும் டிசைன், அபாரமான லேட்டஸ்ட் சாப்ட்வேர் ஆகியவை காரணமாக இந்த போன் நல்ல வரவேற்பை பெற்றது.

ஹானர் மேஜிக் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில் டிராபிக் அலர்ட் உள்பட பல விஷயங்களை தந்து பயனளிக்கும். மேலும் சமூக வலைத்தளங்களில் நமக்கு வரும் மெசேஜ்களை நமக்கு நோட்டிபிகேசன் மூலம் தரும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

3D தொலைக்காட்சிகள் மற்றும் அல்ட்ரா D

3D தொலைக்காட்சிகள் மற்றும் அல்ட்ரா D

நாம் திரையரங்குகளில் பல 3D திரைப்படங்கள் பார்த்துள்ளோம். ஆனால் கண்ணாடி அணிந்துதான் அந்த படங்களை பார்க்க வேண்டும் என்பது ஒரு நிபந்தனை. சிலருக்கு அந்த 3D கண்ணாடிகளை அணிந்தால் தலை வலிக்கும்.

ஆனால் கண்ணாடி இல்லாமல் நீங்கள் 3D அனுபவத்தை பெற வேண்டுமா? இதோ வந்துவிட்டது 3D தொலைக்காட்சிகள். ஸ்ட்ரீம் டிவி நெட்வொர்க் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய 3D டிவியில் கண்ணாடி இல்லாமல் 3D அனுபவத்தை உணரலாம்.

சியாமி மி மிக்ஸ்

சியாமி மி மிக்ஸ்

சீனாவில் கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்துள்ள பெஸல் லெஸ் மாடலான சியாமி மி மிக்ஸ் ஸ்மார்ட்போன் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 6.4 இன்ஸ் டிஸ்ப்லேவில் செராமிக் ஸ்பீக்கர், அல்ட்ராசனிக் சென்சார் மற்றும் அற்புதமான செல்பி கேமிரா இதில் அமைந்துள்ளது.

இன்னும் இந்த மாடல் இந்தியாவில் வெளிவரவில்லை. இந்த வருடம் மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் சியாமி மி மிக்ஸ் ஸ்மார்ட்போனை எதிர்பார்த்து ஏகப்பட்ட இந்தியர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடாக் 360 டிகிரி கேமிரா:

கோடாக் 360 டிகிரி கேமிரா:

கேமிரா தயாரிப்பில் மன்னன் என்று பெயர் எடுத்துள்ள கோடாக் நிறுவனம் 2016ஆம் ஆண்டில் அறிமுகம் செய்த நவீன ரக கேமிரா SP3604K. இந்த கேமிராவின் சிறப்பு அம்சமே இதன் பெயரில் உள்ள 360 தான். ஆம் இந்த கேமிரா 306 டிகிரியில் 4K வீடியோ எடுப்பதில் தலை சிறந்ததாக உள்ளது.

12.4 MP CMOS சென்சார் உள்ள இந்த கேமிராவில் தெளிவான வீடியோ அவுட்புட் கிடைக்கும். வைபை, 128GB எஸ்டி கார்டு போடும் வசதியும் இதில் உண்டு. டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டெண்ட், ஷாக் புரூப், உள்பட பல அம்சங்கள் உள்ள இந்த கேமிரா இந்தியாவில் தற்போது அனைத்து கோடாக் ஷோரூம்களிலும் கிடைக்கின்றது

சியாமி பேட்டரி கியூசைக்கிள்

சியாமி பேட்டரி கியூசைக்கிள்

சியாமி நிறுவனத்தின் மற்றும் ஒரு அற்புதமான தயாரிப்பு தான் இந்த

சியாமி பேட்டரி கியூசைக்கிள். இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் சைக்கிள் ஆன இந்த சைக்கிள் இந்திய மதிப்பில் ரூ.30,000 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

7 கிலோ எடையுள்ள இந்த எலக்ட்ரிக் சைக்கிள் கார்பன் பைபரில் ஆனது. மேலும் இதில் நவீன சென்சார்களும் உள்ளது. 250W 36V எலக்ட்ரிக் மோட்டார் உள்ள இந்த சைக்கிளில் பெடலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவா Phab 2 புரோ டாங்கோ ஸ்மார்ட்போன்

லெனோவா Phab 2 புரோ டாங்கோ ஸ்மார்ட்போன்

கூகுளின் டாங்கோ அம்சம் பொருத்தி வெளிவரும் இந்த லெனோவா Phab 2 புரோ டாங்கோ ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை இல்லாத அற்புதமான அனுபவத்தை தர காத்திருக்கின்றது.

இந்த ஸ்மார்ட்போன் டிசம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒருசில காரணங்களால் இந்த போன் வரும் வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
If you eat breathe and live technology then this is the right place to find out what the world got in 2016 in the fascinating world of technology.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X