சீனா மீது 'திருட்டுப்பட்டம்' சுமத்தும் அமெரிக்கா..!

Written By:

ஒரு நாட்டின் வளர்ச்சியை திருடி மற்றொரு நாடு வளர்வது ஒன்றும் உலக சரித்திரத்தில் புதியதல்ல. காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்படியாக, அமெரிக்காவிற்கு நிகரான ரோபோட்டிக்ஸ் வளர்ச்சியில், சீனாவின் முன்னேற்றததில் நியாயமற்ற நிலை இருக்கிறதா என்ற கோணத்தில் அமெரிக்க அரசாங்கம், சீனாவிற்கு எதிரான விசாரணை ஒன்றை நிகழ்த்தும்படியாக உத்தரவிட்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சந்தேகம் :

அமெரிக்க ராணுவ ரோபோட் டிசைன்களை சீனா திருடி இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகிக்கிறது.

சீன ராணுவ ரோபோட் படை :

ஹேக் செய்யப்பட்ட அதாவது திருடப்பட்ட ரோபோட் டிசைன்களை கொண்டுதான் சீனா தனது ராணுவ ரோபோட் படையை வலிமையாக்கி கொண்டிருக்கிறது என்று அமெரிக்க அரசு சந்தேகப்படுகிறது.

சீனாவின் தொடர் வளர்ச்சி

அமெரிக்காவின் நவீன திட்டங்களான தானியங்கி வாகனங்கள், ஆளில்லா விமானங்கள், கடல்வழி ட்ரோன்கள் ஆகியவைகளில் சீனாவின் தொடர் வளர்ச்சியானது அமெரிக்காவின் சந்தேகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.

டெக்னீக்கல் :

இது போன்ற காரணங்களால் சீனாவின் ஹுமனாய்டு ரோபோட்களின் டெக்னீக்கல் சார்ந்த விடயங்களை கண்டறியும் தங்களது நோக்கத்தை பகிரங்கமாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முனைப்பு :

முக்கியமாக சீன ரோபோட்களின் காம்போனாட்ஸ் (கூறுகள்) மற்றும் சிப் சப்ளையர்கள் சேர்த்து, அவைகளின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த ப்ரோகிராமிங் மொழிகளை அறிந்து கொள்ள அமெரிக்க முனைந்து கொண்டிருக்கிறது.

ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள் :

அது மட்டுமின்றி சீனாவின் ரோபோட்டிக்ஸ் சார்ந்த பணிகளில் ஈடுபடும் ஆர் அண்ட் டி நிறுவங்களின் (அதாவது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள்) பெயர்களையும் அறிந்து கொள்ள விரும்புகிறது.

தயார் நிலை :

தங்கள் ரோபோட்கள் யுத்த களத்தை சந்திக்க தயார் நிலையில் உள்ளன என்று கடந்த ஆண்டே சீனா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பெருமளவில் நிதி :

ரோபாட்டிக்ஸ் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் சீனாவிற்கு நிகராக ரஷ்யாவும் பெருமளவில் நிதி ஒதுக்கி செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
The US Thinks China May Have Stolen Military Robot Designs. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்