விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்ற சூப்பர் டிவி பிரபல நிறுவனங்கள் அதிர்ச்சி.!

Written By:

லீஇகோ நிறுவனத்தின் சூப்பர் டிவி கருவிகள் இந்தியாவில் வெளியாகி ஒரு மாதம் தான் ஆகின்றது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று பல்வேறு நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சூப்பர் டிவிக்களின் மூலம் முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதோடு இந்திய தொலைக்காட்சி சந்தையில் லீஇகோ நிறுவனம் முன்னணி இடம் பிடித்திருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பங்கு

தொலைக்காட்சி திரை அடிப்படையில் 50 இன்ச் மற்றும் அதற்கும் அதிகமான மாடல் டிவிக்களின் விற்பனையை வைத்து லீஇகோ நிறுவனம் சந்தையில் 40 சதவீத பங்குகளை பிடித்திருப்பதாக அந்நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலிடம்

ஆகஸ்டு மாதத்தைப் பொருத்த வரை லீஇகோ சூப்பர் டிவிக்களின் ஒட்டு மொத்த விற்பனை ஆன்லைன் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றது. 4கே தொழில்நுட்பம் கொண்ட டிவிக்களின் விற்பனையிலும் லீஇகோ முதலிடம் பிடித்திருக்கின்றது.

லீஇகோ சந்தா

புதுவிதமான விற்பனை முறை மற்றும் அதிநவீன வன்பொருள், மென்பொருள் அம்சங்களுடன் 2 ஆண்டு இலவச லீஇகோ சந்தா உள்ளிட்ட அம்சங்களை வழங்குகின்றது. மேலும் பல்வேறு இலவசங்களையும் லீஇகோ கருவிகளுடன் அந்நிறுவனம் வழங்கி வருகின்றது.

சலுகை

லீஇகோ சந்தா மூலம் பயனர்களுக்கு சுமார் 2000 எச்டி தரமுள்ள திரைப்படங்கள், 100 டிவி சேனல்கள், 3.5 மில்லியன் பாடல்கள் மற்றும் 50க்கும் அதிகமான நேரலை நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும். இதோடு ஒவ்வொரு விற்பனையிலும் வித்தியாச சலுகைகளுடன் லீஇகோ தனது பயனர்களை கவர்வந்துள்ளது.

வளர்ச்சி

சலுகைகளோடு இல்லாமல் அதிசிறந்த அம்சங்களை மிகக் குறைந்த விலையில் வழங்கி, லீஇகோ இந்திய சந்தையில் தனது வளர்ச்சியை நோக்கி வேகமாகப் பயணித்து வருகின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
The triumphant progress of LeEco SuperTV in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்