இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

இந்தியாவில் எந்தெந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்ன வகையான 4G பிளான்களை அறிமுகம் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்

By Siva
|

இந்தியாவில் ஒரு காலத்தில் மிக மெதுவான இண்டர்நெட்டை பயன்படுத்தி கொண்டிருந்த நிலையில் தற்போது 4G இண்டர்நெட் வசதியை கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கொண்டு வந்துவிட்டன., குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம் 4Gஐ அறிமுகம் செய்தவுடன் அதன் போட்டியை சமாளிக்க அனைத்து நிறுவனங்களும் 4G இண்டர்நெட் வசதியை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மாற்றியுள்ளது. இதனால் ஒரு ஆரோக்கியமான போட்டி இந்தியாவில் ஏற்பட்டுள்ளது என்றே கூறலாம்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

இந்நிலையில் இந்தியாவில் எந்தெந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் என்ன வகையான 4G பிளான்களை அறிமுகம் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிளான்கள்

4G இண்டர்நெட் உலகில் இந்தியாவில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ரூ.150 முதல் ரூ.5000 வரையிலான பத்து பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. இண்டர்நெட் தேவையை பொறுத்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு உரிய பிளான்களை தேர்வு செய்து கொள்ளலாம்.

2016-ஆம் ஆண்டில் ரூ.10,000/-க்குள் வெளியான டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.!

இந்நிறுவனம் ரூ.50க்கு ஒரு ஜிபி என்ற வகையில் இண்டர்நெட்டிற்கான கட்டணத்தை வசூல் செய்கிறது. மேலும் இரவில் முழுக்க முழுக்க இலவசம் என்றும் அறிவித்துள்ளது. டேட்டாவை தவிர இலவச அழைப்பு, இந்தியா முழுவதும் ரோமிங் இலவசம் உள்பட பல பிளான்களை ஜியோ அறிவித்துள்ளது. மேலும் பலவிதமான இலவச சலுகைகளை இந்நிறுவனம் மார்ச் மாதம் வரை வழங்கியுள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

ஏர்டெல் நிறுவனத்தின் 4G பிளான்கள்

ஜியோ அறிமுகம் ஆகும் முன்னர் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம், ஜியோவின் போட்டிகளை சமாளிக்க 4G இண்டர்நெட்டில் பல புதிய அறிவிப்புகளை செய்தது. ரூ.1495க்கு அன்லிமிடெட் 4G டேட்டாவை மூன்று மாதங்களுக்கு உபயோகப்படுத்தும் திட்டம் ஒன்று ஏர்டெல் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த திட்டங்களில் ஒன்று. இந்த அறிவிப்பு பெரும்பாலான 3G வாடிக்கையாளர்களை 4G வாடிக்கையாளர்களாக மாற்றியது.

2016-ல் முற்றிலுமாக வெற்றி பெற்ற டாப் ஸ்மார்ட்போன்கள்.!

ஆனால் இந்த பிளான் உண்மையில் அன்லிமிடெட் பிளான் அல்ல. 30 ஜ்GB வரை மட்டுமே 4G இண்டர்நெட் கிடைக்கும். அதன் பின்னர் 64 kbps ஸ்பீடுக்கு மாறிவிடும். அதாவது கிட்டத்தட்ட டேட்டா முடிந்தது மாதிரிதான்

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சிறப்பு சலுகையை அளித்தது. இதன்படி ரூ.1498க்கு ரீசார்ஜ் செய்தால் 3G அல்லது 4Gயில் 1 GB வரை உங்களுக்கு டேட்டா கிடைக்கும். அதன்பின்னர் 1GB டேட்டாவுக்கு நீங்கள் ரூ.51 கட்டணம் செலுத்த வேண்டும்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

பி.எஸ்.என்.எல் BB 249 பிராண்ட்பேண்ட் பிளான்

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் சமீபத்தில் BB 249 என்ற பிளானை அறிமுகம் செய்தது. இந்த பிளான் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிய வாடிக்கையாளர் ரூ. 249க்கு கட்டணம் செலுத்தினால்; ஆறு மாதங்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம். டேட்டாவின் ஸ்பீடு 2GB வரை 2Mbps கிடைக்கும். அதன் பின்னர் 1Mbps ஸ்பீட் மட்டுமே கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு பின்னர் இந்த பிளான் BB449க்கு மாறிவ்டிஉம்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

வோடோபோன் வழங்கும் இந்தியா முழுவதும் இலவச ரோமிங்

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடோபோன் கடந்த தீபாவளி முதல் இந்தியா முழுவதிலும் ரோமிங் இலவசம் என்ற புதிய சலுகையை வழங்கியது. மேலும் சமீபத்தில் இரண்டு புதிய ரீசார்ஜ் பேக்கிங்கை அறிமுகம் செய்தது. அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேக்கேஜிங் திட்டமாக ரூ.144 மற்றும் ரூ.349 என்று அறிவித்தது. மேலும் 300 MP 4G டேட்டா மற்றும் இலவச இன்கமிங் கால்ஸ் பிளான்களையும் இந்நிறுவனம் அளிக்கின்றது

இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதன் 4G இண்டர்நெட் பிளான்களும்

ஐடியாவின் ரூ.698 அன்லிமிடெட் பிளான்கள்:

ஐடியா நிறுவனமும் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமளிக்க ரூ.698 பிளான் ஒன்றை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா முழுவதற்கும் எந்த ஒரு நெட்வொர்க் போனுக்கும் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்களை பேசி கொள்ளலாம். ஆனால் இந்த திட்டம் 28 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும்

மேலும் ஐடியா நிறுவனம் புதிய இண்டர்நெட் பிளான்களையும் அறிவித்துள்ளது. இதன்படி ரூ.297 கட்டணத்தில் 1GB டேட்டா மற்றும் 400 இலவச அழைப்புகளையும், ரூ.497 கட்டணத்தில் 800 கால்கள் மற்றும் 2GB டேட்டாக்களையும் பெறலாம்,

Best Mobiles in India

English summary
The year 2016 gave some of the best voice and data plans to make internet affordable for consumers in the Indian market

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X