இது தான் கர்ஜிக்கும் 'நிஜமான' ஜுராஸிக் பார்க்..!!

Written By:

உலகின் மிகப்பெரிய டைனோசர் உருவாக்கப்பட்டுள்ளது. பயப்பட வேண்டாம் புதிய வகை தொழில்நுட்பமான விர்ச்சுவல் ரியால்டி உதவியோடு பிபிசி உருவாக்கியிருக்கும் இந்த டைனோசருக்கு 'டிட்டனோசர்' என பெயரிடப்பட்டுள்ளது.

கொஞ்சம் நாட்களாக பயன்பாட்டில் இருந்து வரும் விர்ச்சுவல் ரியால்டி தொழில்நுட்பம் வெகு விரைவில் கல்வி நிலையங்களில் பயன்படுத்த கூடும் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு அரங்கேறியிருக்கின்றது. ப்ரிட்டனை சேர்ந்த இயற்கை ஆவணப்பட இயக்குனரான டேவிட் அட்டென்போரோ, விர்ச்சுவல் ரியால்டி தொழில்நுட்பத்தில் புதிய வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இருள் சூழ்ந்த நடு காட்டில் ஜூராஸிக் பார்க் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அட்டென்போரோ டைட்டனோசரை அறிமுகம் செய்ய அது மெதுவாக காட்சியளிக்கின்றது. இதை மேலும் தத்ரூபமாக உணர வைக்க பிரத்யேக 'சவுண்டு எஃபெக்ட்கள்' வழங்கப்பட்டுள்ளது.

டைட்டனோசர் குறித்து விளக்கமளிக்க அதற்கேற்ப அதன் உடல் ஒவ்வொரு பாகமாக காட்டபடுகின்றது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 360 கோணத்தில் வீடியோ வடிவமைக்கப்பட்டுள்ளதை கூறலாம். இவை அனைத்தும் நான்கு நிமிட வீடியோவாக பார்த்து ரசிக்கலாம். இந்த வீடியோ 4கே தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோவை இங்கு பாருங்கள்..!

இதே வழிமுறையை பின்பற்றி கல்வி சார்ந்த தகவல்களையும் மாணவர்களுக்கு வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க :
விண்வெளி வீரர்கள் 'போகும் முன்' கடைசியாக செய்யும் சம்பிரதாயங்கள்..!
எக்ஸ்‌ட்ராடெரெஸ்ட்ரியல்ஸ் - வலுவான 3 புரிதல்கள்..!

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
The largest dinosaur comes alive in new virtual reality video. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்