சாம்சங் மற்றும் எல்ஜி: சிறப்பான டிவி வழங்கும் நிறுவனம் எது

|

சாம்சங் நிறுவனத்தின் ஃபிரேம் டிவி கடந்த வாரம் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்டது, முதற்கட்டமாத ஸ்விட்சர்லாந்து மற்றும் நார்வே நாடுகளில் இந்த டிவி விற்பனைக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, ஆஸ்த்ரியா, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவில் வரும் வரும் விற்பனைக்கு வருகிறது.

சாம்சங் மற்றும் எல்ஜி: சிறப்பான டிவி வழங்கும் நிறுவனம் எது

சாம்சங் டிவி அறிமுகமான சில தினங்களில் அதன் போட்டியாளரான எல்ஜி நிறுவனமும் புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி ஓஎல்இடி சிக்னேச்சர் டபுள்யூ7 டிவி என அழைக்கப்படும் புதிய டிவி வால்பேப்பர் டிவி என்றும் அழைக்கப்படுகிறது.

எல்ஜியின் ஃபிளாக்ஷிப் ஒஎல்இடி சிக்னேச்சர் டபுள்யு7 மற்றும் பல்வேறு மாடல்கள் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாடல் சாம்சங் சமீபத்தில் அறிமுகம் செய்த ஃபிரேம் டிவியுடன் போட்டியிடுகிறது.

சர்வதேச சந்தைகளில் எல்ஜியின் ஒஎல்இடி டிவி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், சாம்சங்கின் ஃபிரேம் டிவி வாடிக்கையாளர்களிடம் எவ்வாறான வரவேற்பை பெறும் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வடிவமைப்பு

சாம்சங் ஃபிரேம் டிவிக்களை அருங்காட்சியகம் மற்றும் கேலரிகளில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டுள்ளது. புதிய ஃபிரேம் டிவி தனித்துவம் வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. எல்ஜி சிக்னேச்சர் டிவியை பொருத்த வரை 2.57 எம்எம் பேனல் வழங்கப்பட்டுள்ளது. மெல்லிய வடிவமைப்பு கொண்டுள்ள சிக்னேச்சர் டிவி லாஸ் வேகாசில் நடைபெற்ற சிஇஎஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

ஃபிரேம் டிவியில் அட்டகாச வடிவமைப்பு மற்றும் பிக்சர் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டிவி வைக்கப்பட்டுள்ள அறையில் இருக்கும் வெளிச்சத்திற்கு ஏற்ப டிவி பிரைட்னசை தானாக மாற்றியமைக்கும் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஃபிரேம் டிவி 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆர்ட் மோட் வழங்கப்பட்டுள்ளதால் டிவி ஸ்டான்ட்பை மோடில் டிஸ்ப்ளே அழகிய புகைப்படங்களை காண்பிக்கும். சாம்சங் புதிய டிவிக்கு வாடிக்கையாளர்களே ஃபிரேமினை தேர்வு செய்யும் வசதியை வழங்கியுள்ளது. ஃபிரேம் டிவியின் அழகிய ஃபிரேம் பார்க்க புகைப்படம் போன்றே காட்சியளிக்கிறது.

எல்ஜி ஒஎல்இடி டிவி இதே போன்ற வசதியை வழங்குகிறது. எனினும் இதில் வயர்லெஸ் கணெக்டிவிட்டி ஆப்ஷன் வழங்கப்படவில்லை.

தொழில்நுட்பம்

ஃபிரேம் டிவி அல்ட்ரா ஹை டெஃபனீஷன் டிவி மற்றும் வால்நட், ஓக் மற்றும் வைட் போன்ற ஃபிரேம்கள் கொண்டுள்ளது. இதன் மோஷன் சென்சார்கள் டிவியின் அருகில் ஆட்கள் இருப்பதை உணர்ந்து தானாக பவர் சேவிங் மோடில் வைக்கும்.

ஃபிரேம் டிவியுடன் ஒப்பிடும் போது எல்ஜி ஒஎல்இடி ஆர்கானிக் டிவி என்பதுடன் இதில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் தொழி்ல்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. ஒஎல்இடி சிக்னேச்சர் டிவி அதிசிறந்த டைனமிக் ரேன்ஜ் கொண்டுள்ளது.

இரு டிவிகளிலும் வாய்ஸ் கமாண்டு மற்றும் ஜெஸ்ட்யூர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. எல்ஜியின் சமீபத்திய வெப் ஓஎஸ் 3.5 மற்றும் ஒஎல்இடி உள்ளிட்டவை ஆன்லைன் செயலிகளை சிறப்பாக இயக்க வழி செய்கிறது.

முடிவு

எல்ஜியின் ஓஎல்இடி வித்தியாசமாக இருந்தாலும், சாம்சங் ஃபிரேம் டிவி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதோடு சிறப்பான அனுபவத்தையும் வழங்குகிறது. இத்துடன் இது ஆர்ட் டிஸ்ப்ளே போன்றும் வேலை செய்கிறது.

எல்ஜி ஒஎல்இடி வாடிக்கையாளர்களை கவர பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் ஈடில்லா தொழில்நுட்பம் மற்றும் தரத்தினை வழங்குகிறது.

இரு டிவிகளும் இதுவரை இல்லாத தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான அனுபவத்தை வழங்குகின்றன. எனினும் எல்ஜி தனது புத்தம் புது அம்சங்களுடன் போட்டியில் முன்னிலை பெற்றுள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் போட்டிகளை சந்திக்கவுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Here is a comparison between Samsung Frame TV and LG OLED Signature W7.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X