பாரிஸ் தாக்குதல், உதவிக்கரம் நீட்டிய தொழில்நுட்ப நிறுவனங்கள்..!!

Posted by:

பாரிஸ் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட பல்வேறு தாக்குதல்களில் சுமார் 132 அப்பாவி பொது மக்கள் உயிர் இழப்பு, 300க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த சம்பவம் உலகையே அதிர்ச்சியில் மூழ்கடித்தது.

இச்சம்பவத்திற்கு ஆறுதலாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வருத்தம் தெரிவிக்க உலக மக்கள் சமூகவலைதளங்களில் ஒன்றிணைந்த இதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் பிரபல தொழில்நுட்ப நிறுவனங்களும் மக்களோடு இணைந்தது குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஏர்பிஎன்பி

வீடு வாடகை சார்ந்த பிரபல இணையதளமான ஏர்பிஎன்பி பாரிஸ் நகரில் வீடி தேவைப்பட்டோருக்கு இலவசமாக தங்கும் இடங்களை வழங்கியது.

இணையதளம்

இந்த சேவையை துரிதமாக வழங்க ஏர்பிஎன்பி நிறுவனம் பிரத்யேக இணையதளம் ஒன்றை உருவாக்கியதும் குறிப்பிடத்தக்கது.

சேஃப்டி செக் டூல்

ஃபேஸ்புக் தரப்பில் பாரிஸ் நகரில் சேஃப்டி செக் டூல் சேவை அந்நிறுவனம் ஆக்டிவேட் செய்திருந்தது.

பாதுகாப்பு

இதன் மூலம் ஃபேஸ்புக் பயனாளிகள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனரா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கைப்

ஸ்கைப் மற்றும் கூகுளின் ஹேங்அவுட் நிறுவனங்கள் அனைத்து ஃபிரான்ஸ் அழைப்புகளையும் இலவசமாக வழங்கியது.

உதவித்தொகை

பாதிக்கப்பட்டோருக்கு உதவித்தொகை வழங்க நிதி திரட்டுவதிலும் சில சிறிய தொழில்நுட்ப நிறுவனம் ஈடுப்பட்டிருந்ததோடு இதற்கென பிரத்தேயக வலைதளம் ஒன்றையும் உருவாக்கியிருந்தது.

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்