மனித உணர்வுகளை புரிந்து கொள்ளும் இயந்திரங்கள்.!!

Written By:

நல்லதோ கெட்டதோ, தொழில்நுட்ப வளர்ச்சி வரும் காலங்களில் அனைவரையும் குழப்ப காத்திருக்கின்றது என்றே கூற வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் துவங்கி, இன்று ஆடம்பர சேவைகளை சிறப்பாக வழங்கவே தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு வருகின்றது.

நம்மை சக மனிதர்களிடம் இருந்து பிரிக்கும் திறன் கொண்ட புதிய தொழில்நுட்பம் உங்களை நிச்சயம் அதிர்ச்சியில் ஆழ்த்தும். நமது உணர்வுகளை புரிந்து கொண்டு மனநிலைக்கு ஏற்ப கருத்துக்களை வழங்கும் திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் உண்மையில் சாத்தியமாகியுள்ளன.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஜிம்மி

இந்த ரோபோட் நம்மை பின் தொடர்ந்து பாட்டு பாட வேண்டுமா, வேண்டாமா என கேட்கும். ஜிம்மி ஏற்கனவே உள்புகுத்தப்பட்ட 3டி சென்சிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனிதர்களின் செயல்களை அப்படியே செய்யும்.

மோட்டோரோலா இ-டாட்டூ

மோட்டோரோலா தயாரித்திருக்கும் இந்த டாட்டூ, உடலில் நிரந்திரமாக ஒட்டப்பட்டு விடும், பின் வீட்டில் இருக்கும் இணைக்கப்பட்ட கருவிகளை மிக சுலபமாக இயக்க முடியும். இதற்கு குரல் கொடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது, தொண்டையில் நிகழும் சிறு அசைவுகளே போதுமானது.

உணவு பெட்டி

லுஸ், எக்ஸ்2 டச் டிவி வென்டிங் மெஷின் கருவி, ஒரு ஸ்மார்ட் உணவு பெட்டி ஆகும். இது பயனர்களின் முகத்தை பதிவு செய்து கொண்டு அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை முறைப்படுத்தும் திறன் கொண்டிருக்கின்றது. மளிகை விபரம், வயது, மருத்துவ அறிக்கை போன்றவற்றை டிராக் செய்து இந்த இயந்திரம் பயனர்களுக்கு பரிந்துரைகளை வழங்குகின்றது.

ஆஃப்டெக்ஸ்

இந்த தொழில்நுட்பம் ஒருவரின் மன நிலையை முக பாவனைகளை கொண்டு புரிந்து கொண்டு அதற்கேற்ப பரிந்துரைகளை வழங்கும் திறன் கொண்டிருக்கின்றது.

பீட்சா

கண் அசைவுகளை வைத்து பதில் எடுத்து கொள்ளும் தொழில்நுட்பம் இது. இதனால் வாய் திறந்து பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. மாறாக கண் அசைவுகளை வைத்து மன நிலையை சரியாக புரிந்து கொள்ளும்.

ப்ளாஷி ஸ்மார்ட் மிரர்

இது ஒரு ஸ்மார்ட் கண்ணாடி, ஆனால் இது செய்யும் வேலை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். நம் முகத்திற்கு எந்த ஸ்டைல் சரியாக இருக்கும், எந்த ஸ்டைல் நமக்கு ஒத்து வராது என்பதை கூறி விடும். இது பெண்களுக்கு அதிகம் பயனுள்ளதாக இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Technology can Read Your Emotions
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்