ரூ.500, 1000/- செல்லாது டெக்னாலஜி துறை வரவேற்பு.!!

இந்தியாவில் இனி ரூ.500, 1000/- நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் அறிவிப்புக் குறித்துத் தொழில்நுட்பத் துறை என்ன சொல்கிறது.?

By Meganathan
|

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ரூ.500, 1000/- தாள்கள் செல்லாது என அறிவித்தார். மோடியின் இந்த அறிவிப்பு நாடு முழுக்க விதவிதமான விமர்சனங்களைப் பெற்று வருவது சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. இந்நிலையில் தொழில்நுட்பத் துறையில் மோடியின் புதிய திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியில் இந்த நடவடிக்கைகள் துவங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்தியர்கள் கேஷ்லெஸ் பேமெண்ட் அதாவது ரூபாய் நோட்டில்லாத பணப் பரிமாற்றங்களை அதிகம் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஓலா

ஓலா

இந்திய பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடிய ஒன்றாகும். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நமது இலக்குகளை அடைய இந்தத் திட்டம் வழி செய்யும். ஒட்டு மொத்த நாடே ரூபாய் நோட்டில்லா வர்த்தகத்தை எளிதாக அணுக உதவியாக இருக்கும் என ஓலா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

நாஸ்காம்

நாஸ்காம்

தேசியளவிலான வர்த்தக அமைப்பான நாஸ்காம் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் திட்டம் மின்சாதன கட்டண முறையை ஊக்குவிக்கும், இந்தியாவில் தற்சமயம் குறைந்தளவு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் சுமார் 78 சதீவதம் பணப் பரிமாற்றங்கள் ரூபாய் நோட்டுகளின் மூலம் நடைபெறுகிறது. மத்திய அரசின் இந்தத் திட்டம் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேஷ் ஆன் டெலிவரி

கேஷ் ஆன் டெலிவரி

ஆன்லைன் வர்த்தகத்திலும் இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். பெரும்பாலான டெலிவரிகள் கேஷ் ஆன் டெலிவரி மூலம் மேற்கொள்ளப்படும் நிலையில் இனி வரும் காலங்களில் கேஷ் ஆன் டெலிவரி பயன்பாடு குறையலாம் என்றும் நாஸ்காம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்னாப்டீல்

ஸ்னாப்டீல்

மத்திய அரசின் புதிய திட்டத்தைத் தானும் வரவேற்பதாக ஸ்னாப்டீல் தளத்தின் சிஇஒ மற்றும் இணை நிறுவனர் குணால் பால் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் நம் நாட்டின் பொருளாதாரத்தில் நீண்ட காலப் பயனளிக்கும் ஒன்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேடிஎம்

பேடிஎம்

பழைய ரூபாய் நோட்டுக்கள் குறித்த அறிவிப்புப் பேடிஎம் போன்ற சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கு அதிகப் பலனளிக்கும் ஒன்றாக இருக்கும் எனப் பேடிஎம் நிறுவன சிஇஒ தெரிவித்துள்ளார். தனது கருத்தினை ட்விட்டர் மூலம் அவர் பதிவு செய்திருந்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Tech industry welcomes Ban on Rs 500, Rs 1,000 notes

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X