ப்ளான் பண்ணால் பணம் மிச்சம்.!!

By Aruna Saravanan
|

நீங்கள் தொழில்நுட்ப ப்ரியரா? உங்களுக்கு உங்கள் புதிய டெக் கருவிகளை உடனே வாங்கி அதனினை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் காட்ட வேண்டும் என்று எண்ணுபவரா? இதற்கு அதிகம் செலவாகும் என்பது உங்களுக்கே தெரியும்.

புதிய தொழில்நுட்பங்களை உடனே வாங்க வேண்டும் ஆனால் பணம் அதிகமாக செலவாகக் கூடாது என நினைக்கின்றீர்களா. அப்படி என்றால் இதை படியுங்கள். கீழே உள்ள இந்த பழக்கங்களை பின்பற்றி உங்கள் பணத்தை மிச்சம் செய்வதோடு உங்களுக்கு கேஜெட் மற்றும் வன்பொருளை பெற்று தருகின்றது.

ஆய்வு

ஆய்வு

கேஜெட் வாங்குவதற்கு முன் அந்த கருவியை பற்றி போதிய ஆய்வை நீங்கள் செய்துள்ளீர்களா என்பதை சரி பார்க்கவும். அதை பற்றிய கணிப்புகள், அதன் சரியான மற்றும் துள்ளியமான பட்டியல் மற்றும் யூட்யூபில் அதை பற்றிய விமர்சனங்கள் போன்றவைகளை தேடி தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஆய்வுக்கு பின் அருகில் உள்ள விற்பனை கடைக்கு சென்று வாங்கும் நோக்கத்தை விடுத்து அந்த கருவியை பற்றி தெரிந்து கொள்வதில் மட்டும் கவனம் செலுத்தி ஆய்வு செய்தல் வேண்டும். பின் முடிவு செய்யுங்கள்.

தேவை

தேவை

எனக்கு இது தேவைதானா? என்பதை நீங்களே கேட்டு பாருங்கள். எடுத்துக்காட்டாக, இந்த ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டுக்கு 30,000 ரூபாய் செலவு தேவையா இல்லையா. அதற்கு ஏத்த பொருளா என்பதை தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

பணம்

பணம்

உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கின்றது என்பதை அறியாமல் பொருள் வாங்க வேண்டாம். பொருளின் தரத்தையும் தேவையான பணத்தையும் மனதில் கொண்டு வாங்க நினையுங்கள்.

சலுகை

சலுகை

ஆன்லைனில் போனுக்கான எக்ஸ்சேன்ஜ் சலுகை வருகின்றதா என்பதை கவனிக்க வேண்டும். சில நேரங்களில் பழைய போனை கொடுத்து புதிய போனை வாங்கும் சலுகை கிடைக்கலாம். அதற்காக காத்திருந்து வாங்குவது கூடுதல் புத்திசாலிதனம்.

பொறுமை

பொறுமை

கடைக்கு சென்றால் அங்குள்ள கருவிகள் நம்மை வாங்க தூண்டும். ஆனால் நாம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும். பட்ஜட் விலையில் உங்களுக்கான பீரிமியம் ஸ்மார்ட்போன் கிடைக்கலாம். ஆகவே பொறுமையாக இருந்து யோசித்து பொறுமையுடன் செயல்பட்டால் பணமும் மிச்சம் போனும் கிடைக்கும்.

திட்டம்

திட்டம்

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சில வழிமுறைகளை கடைபிடித்து குறைந்த பட்ஜெட்டில் அதிக அப்டேட் பெற்றிடுங்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன் சரியான திட்டமிடல் நல்லது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tech habits you should adopt to save money. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X