நீங்க சொல்றது தப்ப்ப்பு, திருத்திக்கோங்க ப்ளீஸ்..!

Posted by:

'பூவ பூனும் சொல்லலாம், புஷ்பம்னும் சொல்லாம், புய்ப்பம்னும் சொல்லாம்', செந்தில் கூறிய இந்த வசனத்தை யாரும் மறக்கவே முடியாது, அந்த வகையில இன்னைக்கு நாம உச்சரிக்கும் பல தமிழ் வார்த்தைகள் பெரும்பாலும் தப்பாகவே இருக்கின்றது.

உடனே டென்ஷன் ஆக வேண்டாம் வார்த்தைகளின் உச்சரிப்பு காலப்போக்கில் மாறுவது தேச துரோகம் கிடையாது. ஆனால் நிறுவனங்களின் பெயர்களை தப்பாக உச்சரிப்பது பலரையும் கடுப்பாக்கி விடுகின்றது என்பதே உண்மை.

இன்று பிரபலமாக இருக்கும் பல தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர்கள் பெரும்பாலும் தப்பாகவே உச்சரிக்கப்படுகின்றது. அப்படியா..? என்பவர்கள் தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் அந்நிறுவனங்களை உண்மையில் எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சியோமி

இந்த சீன நிறுவனத்தை ஷாவ் மீ என்று தான் அழைக்க வேண்டும்.

இம்கர்

இந்த நிறுவனத்தை இமேஜ் எர் என்று தான் அழைக்க வேண்டும்.

ஏசஸ்

இந்நிறுவனத்தின் பெயர் ஏசஸ் இதனினை ஏ - சஸ் என்றழைக்க வேண்டும்.

ஹூவாய்

இந்நிறுவனத்தின் இயற்பெயர் ஹூவாய், இதனினை வா - வே என்று தான் அழைக்க வேண்டும்.

நிகான்

நிகான் நிறுவனத்தை நீ - கான் என்றழைக்க வேண்டும்.

ஸ்க்ரிப்டு

ஸ்க்ரிப்டு நிறுவனத்தை ஸ்க்ரி - பிடு என்று அழைக்க வேண்டும்.

அடோப்

அடோப் நிறுவனத்தை அடோப் என்று அழைக்க கூடாது, மாறாக அ - டோபி என்று தான் அழைக்க வேண்டும்.

கேஸ்பர்ஸ்கை

இந்த நிறுவனத்தை கஸ் - பரிஸ் - கீ என்று தான் அழைக்க வேண்டும்.

ஃபூ - ஜீ - ஃபில்ம்

ஃபூ - ஜீ - ஃபில்ம் என்று இந்நிறுவனத்தை அழைப்பதே சரியானதாகும்.

ஜோல்லா

ஜோல்லா இல்லை பாஸ், யோல்லா இப்படி தான் அழைக்க வேண்டும்.

உச்சரிப்பு

இங்கு வார்த்தைகளின் உச்சரிப்பு மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் எழுதும் முறையில் மாற்றம் இருக்கும்.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Following are some tech company names you probably are pronouncing all wrong. This is simple, interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்