சென்னை ஃபாக்ஸ்கான் மீண்டும் இயங்க வேண்டும் - தமிழக அரசு கோரிக்கை..!!

By Meganathan
|

சென்னை அருகில் ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்திருக்கும் தாய்வான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் மீண்டும் பணிகளை துவங்க வேண்டும் என தமிழ் நாடு அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மின்சாதன பாகங்களை தயாரித்து வந்த இந்நிறுவனம் தனது தயாரிப்பு பணிகளை இந்தாண்டின் துவக்கத்தில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஃபாக்ஸ்கான் மீண்டும் இயங்க வேண்டும் - தமிழக அரசு கோரிக்கை..!!

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ரூ.32,667 கோடி முதலீடு செய்ய இருப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவனம் தெரிவித்திருந்ததை தொடர்ந்து தமிழ் நாடு அரசு அந்நிறுவனத்திடம் இந்த கோரிக்கையை வைத்திருக்கின்றது. நோக்கியாவின் சென்னை ஆலை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் போட்டு கொண்ட ஒப்பந்தத்தை தொடர்ந்து சென்னையில் அமைந்திருக்கும் ஃபாக்ஸ்கான் ஆலை தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டதோடு குறிப்பிடத்தக்கது.

சென்னை ஃபாக்ஸ்கான் மீண்டும் இயங்க வேண்டும் - தமிழக அரசு கோரிக்கை..!!

தயாரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து குறிப்பிட்ட ஆலைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் போரட்டத்தில் ஈடுப்பட்டனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் நோக்கியா நிறுவனத்திற்கு மின்சாதன பாகங்களை தயாரித்து வந்தது.

இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் பல ஆயிரம் கோடிகளை முதலீடு செய்ய இருக்கும் நிலையில் தாய்வான் நிறுவனம் எடுக்க இருக்கும் முடிவினை தமிழக அரசு மட்டுமின்றி அதே நிறுவனத்தில் பணியாற்றி வேலை இழந்த ஊழியர்களும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
Tamil Nadu government has asked Taiwan-based electronic parts manufacturer Foxconn to resume some manufacturing in Sriperumbudur, near Chennai.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X