ஃபேஸ்புக் ரகசிய வியாபாரம், உங்க தகவல்களை பாத்துக்கோங்க..!!

By Meganathan
|

உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக், நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் பயன்பாடுகளும் அதிகரிக்க துவங்கியிருக்கின்றன.

இண்டர்நெட் மூலம் சிறிய குழுக்களுடன் தகவல் பறிமாறி கொள்ள எளிய வழி முறையை காண்பித்த ஃபேஸ்புக், இன்று உலகமே தகவல் பறிமாறி கொள்ளும் அளவு வளர்ந்திருப்பதோடு, மிகப்பெரும் வியாபார தளமாகவும் மாறியிருப்பதே உண்மை..

விளம்பரம்

விளம்பரம்

ஆரம்பத்தில் தகவல் பறிமாற்றத்தை மட்டும் வலியுறுத்திய ஃபேஸ்புக் மெல்ல பல வியாபார சேவைகளையும் அறிவித்து வருகின்றது என்றே கூறலாம்.

நலன்

நலன்

மக்கள் நலன் சார்ந்த சேவைகளை வழங்குகின்றோம் என மார்க், அவ்வப்போது அறிவித்தாலும் அவைகளில் வியாபார தந்திரம் இருக்க தான் செய்கின்றது என்பதை மக்கள் உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விளம்பரம்

விளம்பரம்

தகவல் பறிமாற்றத்துடன் விளையாட்டு, வினாடி வினா என பல்வேறு பொழுதுபோக்கு அதனுடன் விளம்பரம் என ஃபேஸ்புக் பரிணாமத்தை உற்று நோக்கினால் அதன் வியாபாரம் அனைவருக்கும் புரியும்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

ஒரு பக்கம் பொழுதுபோக்கு, நேரத்தை செலவிட குறைந்த செலவில் வழி செய்தாலும் ஃபேஸ்புக் மூலம் பேராபத்துக்களையும் பலர் சந்திக்கின்றனர் என்பதே உண்மை. ஃபேஸ்புக் காதல் பிரச்சனை சார்ந்த செய்திகளே இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

செயலி

செயலி

இண்டர்நெட் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஆப்ஸ் எனப்படும் செயலிகளில் மறைந்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.

தகவல்

தகவல்

சமீபத்தில் வாடிக்கையாளர்களின் தகவல்களை ரகசியமாக சேகரிக்கும் செயலிகளை ஆப்பிள் களையெடுத்தது இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

இதே போன்று தினமும் நாம் பயன்படுத்தும் செயலிகளில் பல்வேறு ஆபத்துகள் மறைந்திருக்கும் நிலையில் ஃபேஸ்புக்கில் பயன்படுத்தும் செயலிகளில் மறைந்திருக்கும் பேராபத்துக்களும் அதிகமே.

வினாடி வினா

வினாடி வினா

உங்களது திருமண தேதியை சரியாக கணிக்க இங்கு க்ளிக் செய்யவும் என, உங்களது நட்பு வட்டாரத்தின் சார்ந்பில் ஃபேஸ்புக் டைம்லைனில் அவ்வப்போது காணப்படும் வினாடி வினா சார்ந்த லின்க்களில் உங்களை நீங்கள் விற்பனை செய்வது உங்களுக்கு தெரியுமா.?

தகவல்

தகவல்

பொதுவாக இது போன்ற லின்க்களை க்ளிக் செய்ததும் தனி இணைய பக்கம் திறப்பதோடு இங்கு உங்களது தகவல்களை அறிந்து கொள்ள ஒப்புதல் அளிக்கும்படி குறிப்பிட்ட செயலி சார்பில் அனுமதி கோரப்படும். இங்கு நீங்கள் செய்யும் காரியம் தான் உங்களது தகவல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும்.

அனுமதி

அனுமதி

உங்களது தகவல்களை அறிந்து கொள்ள ஒரு வேலை நீங்கள் ஒப்புதல் அளிக்க கோரும் பட்டனை க்ளிக் செய்தால், சில நொடிகளில் உங்களது மொத்த தகவல்களும் அந்த செயலியின் சர்வரில் பதிவேற்றம் செய்யப்பட்டு விடும்.

தகவல்

தகவல்

உங்களது அனைத்து பொதுவான தகவல்கள், பெயர், புகைப்படம், வயது, பாலினம், பிறந்த தேதி மற்றும் உங்களது டைம்லைனில் நீங்கள் பதிவு செய்த தகவல்கள், உங்களது மொத்த நண்பர்களின் விவரம், அவர்களுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள், கல்வி சார்ந்த தகவல்கள், இருப்பிடம், நீங்கள் விருப்பம் தெரிவித்த அனைத்து தகவல்கள், உங்களது ஐபி முகவரி, நீங்கள் பயன்படுத்தும் மொழி, ப்ரவுஸர் மற்றும் கருவி என உங்களது மொத்த ஜாதகமும் முன்பின் தெரியாத நிறுவனத்தின் சர்வரில் பத்திரமாக பதிவேற்றம் செய்யப்படும்.

திட்டம்

திட்டம்

உங்களது தகவல்களை உங்களது ஒப்புதல் இல்லாமல் யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்ற வழி முறையை ஒவ்வொரு நிறுவனமும் பின்பற்றும்.

ஆனால்

ஆனால்

ஆனால் நீங்கள் உங்களது தகவல்களை அறிந்து கொள்ள ஒப்புதல் வழங்கும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனமானது உங்களது தகவல்களை உங்களது அனுமதியின்றி யாருக்கேனும் வழங்கவோ, விற்பனையோ செய்ய முடியும்.

வேண்டாம்

வேண்டாம்

இத்தனை தகவல்களை அறிந்தவுடன் உங்களை தகவல்களை யாரும் விற்பனை செய்ய கூடாது என நீங்கள் நினைக்கலாம், ஆனால் ஒரு முறை அனுமதியளித்த பின் அதற்கான உரிமை உங்களுக்கு கிடையாது என்கின்றது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வழிமுறை திட்டங்கள்.

இழப்பு

இழப்பு

இதனால் ஃபேஸ்புக் பொழுதுபோக்கு வினாடி வினா மூலம் நீங்கள் உங்களது ஒட்டு மொத்த தனிப்பட்ட தகவல்களையும் முன் பின் தெரியாத ஒருவருக்கு இலவசமாக விற்பனை செய்கின்றீர்கள் என்றே அர்த்தமாகும்.

கூட்டு

கூட்டு

ஃபேஸ்புக் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடையே ரகசிய ஒப்பந்தம் இருக்கின்றது. இதன் மூலம் வினாடி வினா நடத்தும் நிறுவனங்கள் தங்களால் முடிந்த தகவல்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெற முயற்சிக்கின்றனர் என்பதே உண்மை.

உஷார்

உஷார்

வினாடி வினா மற்றும் கருத்து தெரிவிப்பது பொழுபோக்கான விஷயம் என்றாலும் இதில் நீங்கள் எது போன்ற தகவல்களை வழங்குகின்றீர்கள் என்பதிலும் அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Take A Facebook Quiz, Give Up All Your Data For Free. Read More in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X