சென்னையில் உருவாகும் புதிய செல்போன் நிறுவனம்

Written By:

தாய்வானை சேர்ந்த என்ற நிறுவனம் செல்போன் உதிரி பாகங்களை தயாரித்து வருகின்றது. இந்நிறுவனம் சென்னையில் புதிதாக ஆலையை துவங்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு பணிகள் இந்தாண்டின் இறுதியில் துவங்கும் என்றும் கூறப்படுகின்றது.

மேலும் இந்தியாவில் பிரபலமாகி வரும் சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பாகங்கள் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

சென்னையில் உருவாகும் புதிய செல்போன் நிறுவனம்

இது குறித்து சியோமி நிறுவனத்தின் மானு ஜெயின் கூறும் போது, இந்தியாவில் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது, மேலும் முழு பேச்சுவார்த்தை முடியும் வரை எந்த தகவலையும் வெளியிட முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே சென்னையில் இயங்கி வந்த சில தொழில்நுட்ப நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் நிவையில் புதிதாக துவங்கப்படும் நிறுவனத்தின் மூலம் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதோடு இந்த செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Taiwanese ODM keen to set up India plant in Chennai. Inventec, the Taiwanese ODM which makes notebooks, consumer electronics, mobile phones and server products, is looking to set up a production facility in Chennai.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்