"ஏர்டெல், வோடாபோனை நிறுத்து ஜியோவை பயன்படுத்து" - புதிய கட்டளை..!

Written By:

ஏர்டெல், வோடாபோன் போன்ற சேவைகளை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு ஜியோவை பயன்படுத்துங்கள் என்று எங்கு வெளிப்படையாக கேட்க முடியுமோ அங்கு கேட்டுக்கொண்டுள்ளது ரிலையன்ஸ் நிறுவனம்.

இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏர்டெல், வோடபோன் போன்ற தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டு, அதன் சொந்த அதிவேக 4ஜி சேவையான ஜியோவிற்கு மாற வேண்டும் என்று அதன் 40,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

ஜியோவிற்கு போர்ட் :

ரிலையன்ஸ் ஊழியர்கள் தங்களிடம் இருக்கும் தொலைபேசி எண்களை ஜியோவிற்கு போர்ட் செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

முன்னோட்டம் :

இதன் மூலம் விரைவில் வெளிவர இருக்கும் ஜியோவிற்கு போர்ட் செய்யும் வசதிக்கான ஒரு முன்னோட்டம் இது என கருதப்படுகிறது.

பிற ஆப்ரேட்டர் :

ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி தலைமையிலான இந்த நீண்ட பீட்டா சோதனைக்கு எதிராக 'ஆயுதமேந்தி' நிற்கும் பிற ஆப்ரேட்டர்களுக்கு போர்ட் வசதி மேலும் பெரிய திகிலை கிளப்பும் என்பதும் சந்தேகமேயில்லை.

மகிழ்ச்சி :

"ஏற்கனவே இருக்கும் இணைப்புகளில் இருந்து ஜியோ இணைப்புக்கு மாறக்கூடிய இன்னும் அதிக சிறப்பான ஜியோ செய்தியை ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வதில் மகிழ்ச்சி, இது மேலுமொரு மைல்கல்" என்று ரிலையன்ஸ் எச்ஆர் நிறுவனம் தன் ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியுள்ளது.

மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி :

மேலும் ஏற்கனவே இருக்கும் எண்களை மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி (Mobile Number Portability - MPN) செயல்முறை பயன்படுத்தி போர்ட் செய்து கொள்ளவும் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மற்றொரு கேரியர் :

மொபைல் எண் பெயர்வுத்திறன் (MNP) மூலம் தொலைபேசி பயனர்கள் ஒரு கேரியரில் இருந்து மற்றொரு கேரியருக்கு தங்கள் அதே தொலைபேசி எண்ணை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஏழு வேலை நாட்கள் :

"தேவையான தகவல்களை சமர்ப்பிக்க தற்போது பயன்படுத்தும் ஆப்ரேட்டரில் இருந்து ஜியோவிற்கு உங்கள் நம்பர் போர்ட் செய்யப்படும். இதை முடிக்க சுமார் ஏழு வேலை நாட்கள் எடுக்கும்" என்றும் ஊழியர்களிடம் ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

பயன்படுத்தி வருகிறார்கள் :

இதுவரை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் ஏர்டெல் மற்றும் வோடபோன் உட்பட அனைத்து முக்கிய ஆப்ரேட்டர்கள் நிறுவன திட்டங்களையும் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேதி :

ரிலையன்ஸ் ஜியோ சோதனையானது முதலில் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது, ஆனால் வணிக வெளியீடு சார்ந்த எந்த தேதிகளும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

1.5 மில்லியன் :

மற்றும் ஆரம்பத்தில், ஜியோ சிம்கள் அதன் ஊழியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் வண்ணம் சோதனை தொடங்கப்பட்டு தற்போது 1.5 மில்லியன் பயனர்களை பெற்றுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்English summary
Switch to high speed 4G Jio, stop using Vodafone, Airtel: Reliance to employees. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்