மலிவு விலை, 'மலையளவு' அம்சங்கள் : இந்திய நிறுவனம் அதிரடி.!!

Written By:

ஸ்வைப் டெக்னாலஜீஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்மார்ட்போன் கருவியானது ஸ்வைப் எலைட் ப்ளஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த கருவி ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றது. வரும் திங்கள் கிழமை (06/06/2016) முதல் ஓபன் சேல் முறையில் இந்த கருவி விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

1

ஸ்வைப் நிறுவனத்தின் எலைட் பிரான்டிங் கொண்ட நான்காவது கருவி இது ஆகும். முன்னதாக இந்நிறுவனம் ஸ்வைப் எலைட், ஸ்வைப் எலைட் 2, மற்றும் ,ஸ்வைப் எலைட் நோட் போன்ற கருவிகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

2

ஸ்வைப் எலைட் ப்ளஸ் கருவியில் 5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் திரை 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் டிராகன்டிரெயில் கிளாஸ் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

3

இந்த கருவி 78 சதவீத ஸ்கிரீன்-டூ-பாடி விகிதம் கொண்டு 8.4எம்எம் தடிமானக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

4

ஸ்வைப் எலைட் ப்ளஸ் கருவியானது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர் மூலம் சக்தியூட்டப்பட்டுள்ளது.

5

இதோடு 2ஜிபி ரேம், 16 ஜிபி இண்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 64 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

6

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா எல்இடி ப்ளாஷ் , f2.0 அப்ரேச்சர், 8 எம்பி செல்பீ கேமரா வழங்கப்பட்டுள்ளது.

7

ஸ்வைப் எலைட் ப்ளஸ் கருவியில் 4ஜி எல்டிஇ, 3ஜி, GPRS/ EDGE, ஜிபிஎஸ், ப்ளூடூத், வை-பை மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

8

இத்தனை சிறப்பம்சங்களை கொண்டு நீண்ட நேரம் இயங்க வசதியாக 3050 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு அதிகபட்சம் இரு நாள் வரை பேக்கப் பெற முடியும் என கூறப்பட்டுள்ளது.

9

டூயல் சிம் ஸ்லாட் கொண்ட ஸ்வைப் எலைட் ப்ளஸ் கருவியில் ஃப்ரீடம் ஓஎஸ், கஸ்டம் ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 வழங்கப்பட்டுள்ளது.

10

ஐவரி வைட் மற்றும் மிட்நைட் ப்ளூ என இரு நிறங்களில் கிடைக்கும் ஸ்வைப் எலைட் ப்ளஸ் கருவியானது இந்தியாவில் ரூ. 6,999 என்ற விலையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
Swipe Smartphone With 3050mAh Battery Launched at Rs. 6,999 Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்