மார்க் இல்லை, ஆனா மார்க் தான் இப்போ ஃபர்ஸ்டு.!!

By Meganathan
|

'ஒழுங்கா படிச்சு, அதிக மார்க்க எடுத்தா தான், பின் நாளில் கஷ்ட படாமல் வாழ முடியும்', நம்ம ஊரில் இந்த வசனம் பெரும்பாலான மாணவர்களை கடுப்பேற்றி கொண்டிருக்கின்றது என்பதே உண்மை.

இது முற்றிலும் தவறு இல்லை என்றாலும், கல்வியை மட்டும் வைத்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறி விட முடியாது. மேலும் அதிகளவில் கல்வி கற்காமலும் வாழ்க்கையில் சாதிக்க முடியும் என்பதை பல்வேறு துறையில் சாதித்த தலைவர்களின் வாழ்க்கையை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் டெக் உலகில் இன்று உலக பிரபலமாக இருப்பவர்களில் பெரும்பாலானோரும் தங்களது பட்டப்படிப்பை முடிக்கவில்லை என்பதை அறிவீர்களா.?

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகின் முன்னணி டெக் நிறுவனமாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்வீட் ஜாப்ஸ் தனது 19 வயதில் கல்வியை நிறுத்தி கொண்டார்.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

இவரை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது எனலாம், உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் பில் கேட்ஸ் 20 வயதில் கல்வியை துறந்தார்.

மைக்கேல் டெல்

மைக்கேல் டெல்

இவரது நிறுவனத்தின் கணினி மற்றும் லேப்டாப் வகைகள் இன்று உலகளவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் இவர் தனது கல்லூரி படிப்பை 19 வயதில் நிறுத்தி கொண்டார்.

எவான் வில்லியம்ஸ்

எவான் வில்லியம்ஸ்

ட்வீட் செய்தால் மக்கள் பின்பற்றுவார்கள். தன் 20 வயதில் படிப்பை நிறுத்தி உலகின் பிரபல சமூக வலைதளத்தை உருவாக்கினார் எவான் வில்லியம்ஸ்.

டிராவிஸ் கலானிக்

டிராவிஸ் கலானிக்

யுபெர் என்பது அமெரிக்கா மட்டுமில்லாமல் இன்று இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளிலும் பிரபலமாகி வருகின்றது. இந்நிறுவனத்தினை துவங்கிய டிராவிஸ் தன் கல்வியை 21 வயதிலேயே நிறுத்தி கொண்டார்.

லேரி எல்லிஸன்

லேரி எல்லிஸன்

தன் 20 வயதில் கல்வியை விட்டு பணியை துவங்கிய லேரி இன்று ஆரக்கிள் நிறுவனத்தை வெற்றிகரமாக இயக்கி வருகின்றார்.

ஜான் கௌம்

ஜான் கௌம்

வாட்ஸ்ஆப் செயலியை தெரியாதவர்களே இருக்க முடியாது எனலாம். சில ஆண்டுகளுக்கு முன் ஃபேஸ்புக் நிறுவனம் கைப்பற்றிய இந்நிறுவனத்தின் ஜான் தன் கல்லூரி படிப்பினை 21 வயதில் நிறுத்தி கொண்டார்.

மார்க் சூக்கர்பர்க்

மார்க் சூக்கர்பர்க்

இவரை தெரியாவதவர்களும் இருக்கவே முடியாது. இவரும் தன் கல்லூரி படிப்பை தனது 20வது வயதிலேயே நிறுத்தி விட்டார். இதோடு இன்று உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக இவரது ஃபேஸ்புக் இருக்கின்றது.

திறமை

திறமை

இந்த பட்டியலில் இருப்பவர்கள் திறமை மற்றும் விடாமுயற்சியோடு கடுமையைாக உழைத்ததால் இன்று இந்த நிலைமையில் இருக்கின்றனர். கல்வியை நிறுத்தினாலும் தங்களது முயற்சியை நிறுத்தாமல் இவர்கள் பணியாற்றியதால் தான் இந்த உயரத்தில் இருக்கின்றார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
successful techies who made big without a college degree Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X