ஜியோ டிடிஎச் விரைவில்.. கையில் ரூ.185/-யை ரெடியாக வைத்துக்கொள்ளுங்கள்.!

ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவை தொடங்கப்பட்டதும் அதை தேர்வு செய்யும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், சரியான முடிவில் உள்ளீர்கள்.!

|

நீங்கள் ஏர்டெல், டாடா ஸ்கை, வீடியோகான் போன்ற டிடிஎச் சேவைக்கு ரீசார்ஜ் செய்து செய்து அழுத்துப்போனவராக இருந்தாலும் சரி அல்லது இன்னமும் கேபிள் டிவிக்கு மாதந்தோறும் பணம் செலுத்துபவராக இருந்தாலும் சரி, உங்களுக்கு ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவை நிச்சயமாக ஒரு வரப்பிரசாதமாக திகழும்.

ஜியோ டிடிஎச் சேவை விரைவில் அறிவிக்கப்படும் என்ற யூகங்கள் அதிக அளவில் உள்ளன. மறுகையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாபைபர் பிராட்பேண்ட் சேவையானது தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் ஏற்கனவே கிடைத்துக் கொண்டிருக்கும் போது ஜியோ டிடிஎச் சேவை பயனர்களை எப்போது எங்கெல்லாம் அடையும் என்ற எந்த குறிப்பும் இல்லை. ஆனால், ஜியோவின் இந்த சேவை நாட்டின் மலிவான டிடிஎச் சேவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.!

அப்படியாக, ரிலையன்ஸ் ஜியோவின் டிடிஎச் சேவை தொடங்கப்பட்டதும், பிற அனைத்து டிடிஎச் சேவைகளையும் துறந்துவிட்டு ஜியோவை தேர்வு செய்யும் எண்ணத்தில் நீங்கள் இருந்தால், வாழ்த்துக்கள்.. நீங்கள் சரியான முடிவில் தான் உள்ளீர்கள். ஏன் என்பதற்கு எங்களிடம் ஐந்து காரணங்கள் உள்ளன.!

மாதம் ரூ.185/-

மாதம் ரூ.185/-

யூகங்களின் படி, ஜியோ டிடிஎச் சேவையானது தோராயமாக மாதம் ரூ.185/- என்பதை விட குறைவாகத் தான் இருக்கும். குறிப்பாக, மற்ற டிடிஎச் சேவைகள் ரூ.275/-ல் முதல் ரூ.300/- வரையிலாக திட்டங்களை வழங்கி கொண்டிருக்கும் போது ரூ.185/- என்பது மிகவும் குறைவான விலையாகும். இருப்பினும் சரியான விலையயை ஜியோதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.

கண்ணாடி இழை இணைப்புகள்

கண்ணாடி இழை இணைப்புகள்

ரிலையன்ஸ் ஜியோவின் செட்-டாப் பாக்ஸ் ஆனது சிபிஇ (CPE) சாதனம் பயன்படுத்தப்பட்டு ரிலையன்ஸ் ஜியோ கோபுரங்களுக்கு மிக நெருக்கமாவே இணைக்கப்பட வேண்டும். மேலும், டிடிஎச் சேவைகள் கண்ணாடி இழை இணைப்புகள் மூலம் பயனர்களுக்கு வழங்கப்படும் என்பதற்கு அதுவே சாட்சி.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஒரு வார காலம் வரை பதிவு

ஒரு வார காலம் வரை பதிவு

டாடா ஸ்கை, ஏர்டெல் போன்ற அனைத்து டிடிஎச் சேவைகளிலும் பதிவு செய்யும் வசதி உண்டு. ஆனால், நீங்கள் உங்களுக்கு விருப்பமான பதிவை நிகழ்த்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், ஜியோ சேவையில் அப்படி கிடையாது, டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒரு வார காலம் வரை பதிவு செய்யும் திறநாய் ஜியோ டிடிஎச் சேவை வழங்கும்.

300-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள்

300-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள்

ரிலையன்ஸ் ஜியோ டிடிஎச் சேவையின் பேஸ் (அடிப்படை) தொகுப்பில் 300-க்கும் மேற்பட்ட இலவச சேனல்கள் சேர்க்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டு பிறகு திட்டங்களுக்கும் கட்டணங்களுக்கும் ஏற்ப இன்னும் பல சேனல்களை சேர்க்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டீபால்ட் ஆப்ஸ்கள்

டீபால்ட் ஆப்ஸ்கள்

ரிலையன்ஸ் ஜியோ செட்-டாப் பாக்ஸ் ஆனது கூகுளின் ஆண்டராய்டு ஓஎஸ்-ல் இயங்கும். இதன் விளைவாக, இதில் விளையாட்டு போன்ற சில டீபால்ட் ஆப்ஸ்கள் நிரம்பி இருக்கும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ டவுன்லோடு வேகத்தை இரு மடங்கு அதிகரிப்பது எப்படி.??

Best Mobiles in India

English summary
Strong Reasons to choose Reliance Jio DTH the Cheapest Service Coming Soon. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X