கூகுள் மேப்ஸில் வினோதம், 'ஸூம்' செய்து பார்த்தால்... "அட"..!!

Written By:

கூகுள் மேப்ஸில், வேறு எதோ ஒரு இடம் தேடப்பட்டு கொண்டிருக்கும் போது, எகிப்திய பாலைவனத்தில் சின்னை தீபகற்பம் என்றொரு இடத்தில் மிகவும் வினோதமான நில அமைப்பு தென்பட்டுள்ளது. நடு பாலைவனத்தில் தென்படும் அந்த இடம் மிகவும் சீரான அடுக்கான முறையில் இருந்ததால் தான் அது வினோதமாக காட்சியளித்துள்ளது.

அது என்னவன்று 'ஸூம்' (Zoom) செய்து பார்த்த பின்பு தான் மிகவும் சுவாரசியமான பல விடயங்கள் வெளியாகின..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

இருக்கைகள் :

அந்த இடத்தை 'ஸூம்' செய்து பார்த்ததில் அடுக்கடுக்கான முறையில் கட்டமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் இருப்பதும், அந்த இடம் தான் உலக சினிமாவின் முடிவு (The End of the World Cinema) என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பழமையானது இல்லை :

ஆம் அது ஒரு சினிமா தியேட்டர். பண்டைய மர்மமான நாகரிகத்தில் உருவாக்கம் பெற்ற ஒரு சினிமா தியேட்டர் போல அது காட்சி அளித்தாலும் அந்த அளவிற்கு அது பழமையானது இல்லை என்பதும் குறிப்பிட த்தக்கது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு தான் உருவாக்கம் பெற்றுள்ளது.

மோசமான நிலை :

அந்த இடமானது ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பு, அங்கு சுமார் 150 இருக்கைகள் உடன் பாழ் அடைந்த கட்டிடத்திற்குள் மோசமான நிலையில் உடைந்த திரை அடித்தளம், ஜெனரேட்டர் மற்றும் ப்ரோஜக்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரெஞ்சுகாரர் :

கெய்ரோ என்ற நகரத்தில் இருந்த சினிமா தியேட்டர் ஒன்றில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் கொண்டு இதை முழுக்க முழுக்க ஒரு பிரெஞ்சுகாரர் வடிவமைத்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

அனுமதியின்றி :

நடுபாலைவனத்தில் அமைக்கப்பட்டது மட்டுமின்றி, அனுமதியின்றி கட்டமைக்கப்பட்டதால் உள்ளூர் அதிகாரிகள் இந்த சினிமா தியேட்டரின் ஆர்வம் கொள்ளவில்லையாம்.

விபத்து :

பின்பு ஜெனரேட்டர் மோட்டாரில் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த சினிமா தியேட்டரில் ஒரு திரைப்படம் குட காட்சிக்குள்ளாக்க படவில்லை என்றும் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றது.

இடம் பெறவில்லை :

அரசாங்கம், உள்ளூர் வாசிகள் மற்றும் பாலைவன- வாசிகள் ஆகியோர்களின் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தினால் இந்த சினிமா தியேட்டர் கைவிடப் பட்டது மட்டுமின்றி, எந்த விதமான மேப்பிலும் இடம் பெறவில்லை என்பதும் குறிபிடத்தக்கது.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
Strange Place On Google Maps. When I Zoomed In. Read more about this in Tamil GizBot..!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்