மனித இனம் அழியும் - ஸ்டீபன் ஹாக்கிங் விளக்கம்..!

Posted by:

அண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவர் தான் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking). அவர் குறிப்பிட்ட 3 விடயங்கள் மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று நம்புகிறார்.

ஏலியன்கள் இருப்பது உறுதி..!

பிளாக் ஹோல் (Black Hole) எனப்படும் கருங்குழி மற்றும் ஈர்ப்பு ஒற்றைப்படைத்தன்மைகள் (gravitational singularities) ஆகியவைகளில் சிறப்பான ஆய்வு பணிகளை மேற்கொண்டிருக்கும் ஸ்டீபன் ஹாக்கிங், மனித இன அழிவை ஏற்படுத்தும் 3 விடயங்கள் பற்றி என்ன விளக்கம் அளித்துள்ளார் என்பதை கீழ்வரும் ஸ்லைடர்களில் காணலாம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

01. செயற்கை நுண்ணறிவு :

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் முதல் விடயம் - ஆர்டிஃபிஷியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு..!

புலனாய்வு அறிவு :

இயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும்.

கருத்து :

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. மேலும் சில சமயம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்

அழிவு சாத்தியமே :

அப்படியாக, மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவை பெறும்போது மனித இனத்தின் அழிவு சாத்தியமே என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

சாத்தியமான ஆபத்துக்கள் :

மேலும், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களை தவிர்க்கும்படியான ஆய்வுகளில் நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

02. மனித ஆக்கிரமிப்பு :

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் இரண்டாவது விடயம் - மனித ஆக்கிரமிப்பு..!

தன்னைத்தானே :

அதாவது அதீத செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் மனித இனத்தை அழிக்கவில்லை என்றால், மனித இனம் தன்னைத்தானே மனித ஆக்கிரமிப்பு மூலம் அழித்துக்கொள்ளும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

ஆக்கிரமிப்பு பண்பு :

மனித குறைபாடுகளில் எதை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மனிதனின் ஆக்கிரமிப்பு பண்பு என்று விடை அளித்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங்.

வல்லமை :

ஆதிகாலங்களில் உணவு உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற காரணத்தால் வளர்ந்த ஆக்கிரமிப்பு பண்பு இப்போது மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது என்று கருத்து கூறியுள்ளார்.

உறுதி :

மேலும், அதிகப்படியான விண்வெளி ஆய்வுகள் மூலம் மனித இருப்பை உறுதி செய்யலாம் என்று நம்புவதாகவும், ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து கூறியுள்ளார்.

03. ஏலியன்கள் :

மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் மூன்றாவது விடயம் - ஏலியன்கள்..!

எச்சரிக்கை :

2010-ஆம் ஆண்டிலேயே ஏலியன்கள் இருப்பது உறுதி, மற்றும் அவைகள் பூமிக்கு நட்பு பாராட்டும் முறையில் நடந்து கொள்ளாது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடோடித்தன்மை :

ஒருவேளை மேம்பட்ட ஏலியன் நாகரீகங்கள் என்பது கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது போன்ற நாடோடித்தன்மை கொண்டதாய் கூட இருக்கலாம் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார்.

பயணம் :

அப்படி இருந்தால், ஏலியன்கள் மேலும் மேலும் பயணிக்க பிற கிரகங்களின் பொருட்களையும், வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்ககத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.

எல்லை :

மேலும் அவர், எது எல்லை என்று யாருக்குமே தெரியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
3 விடயங்களால் மனித இனமே அழியக்கூடும் என்கிறார் ஸ்டீபன் ஹோக்கிங். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்