'இந்த திட்டம்' பூமியை காப்பாற்றுமா இல்லை, காலி செய்யுமா..?!

Written By:

கருங்குழி எனப்படும் பிளாக் ஹோல்களுக்கும் (black holes), வெப்ப இயக்கவியலுக்குமான தொடர்புகளைப்பற்றி ஸ்டீபன் ஹோக்கிங்கை தவிர அதிகம் புரிந்து வைத்திருக்கும் அண்டவியல் ஜாம்பவான் உலகில் இல்லை எனலாம்..!

அப்படியான அண்டவியல் மேதாவியான ஸ்டீபன் ஹோக்கிங்-ன் புதிய திட்டம் ஒன்றை கேட்டால் முதலில் அசத்தலாக தோன்றினாலும், அதை ப் பற்றி தீவிரமாக யோசித்தால் கொஞ்சம் திகிலாகவும் இருக்கிறது என்பது தான் நிதர்சனம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கோட்பாடு :

ஸ்டீபன் ஹோக்கிங்-ன் சமீபத்திய கோட்பாடு ஒன்று விண்வெளியில் உள்ள சிறிய அளவிலான பிளாக் ஹோல்களை எப்படி மின் நிலையமாக மாற்ற முடியும் என்பதை சார்ந்துள்ளது.

மின்சாரம் :

அதாவது ஒரு மலை அளவு இருக்கக்கூடிய பிளாக் ஹோல்களிடம் இருந்து, பூமி கிரகம் இயங்கத் தேவையான அளவு மின்சாரத்தை பெற முடியும் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் கோறுகிறார்.

ஒருவழிப்பாதை :

பொதுவாக பிளாக் ஹோல்கள் மிகவும் விபரீதமான உறிஞ்சி சக்தி கொண்ட கண்களுக்கு புலப்படாத ஒருவழிப்பாதை கொண்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பூமி கவசம் :

இருப்பினும் பெரிய அளவிலான பிளாக் ஹோல் தான் விபரீதமானவைகள், ஒரு சிறிய மலை அளவில் இருக்கக்கூடிய பிளாக் ஹோல்கள் வெளியேற்றும் கதிர்கள் ஆனது பூமிக்கு தேவையான (மின்)சக்தியை வழங்கும் ஒரு கவசமாக இருக்கும் என்று பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங் விளக்கம் அளிக்கிறார்.

10 மில்லியன் மெகாவாட் :

அதாவது, ஒரு மலை அளவிலான பிளாக் ஹோல் வெளிக்கிடும் எக்ஸ்-ரே கதிர்கள் மற்றும் காம்மா கதிர்கள் ஆனது சுமார் 10 மில்லியன் மெகாவாட் என்ற விகிதத்தில் உலகின் மின்சார விநியோக சக்தியை வழங்க வல்லது என்கிறார் பேராசிரியர் ஹோக்கிங்.

விபரீத வாய்ப்பு :

ஆனால், அப்படியான ப்ளாக் ஹோல் ஆற்றலை நாம் பெறும்போது அந்த பிளாக் ஹோல் ஆனது தனது சக்தியை பூமி கிரகத்தின் மீது கட்டவிழ்த்து விட்டு விடக்கூடிய விபரீத வாய்ப்பும் நடக்கலாம் என்கிறார் ஸ்டீபன் ஹோக்கிங்.

தொலைவு :

ஆகையால், பிளாக் ஹோலிடம் இருந்து மிகவும் பாதுகாப்பான தொலைவில் இருந்து கொண்டு அதே சமயம் அந்த பிளாக் ஹோல் வெளிக்கிடும் சக்தியை பெரும் தொலைவில் இருந்தால் மின்சக்தி பெறும் இந்த கோட்பாடு சாத்தியமாகலாம்..!

சுற்றுப்பாதை :

இப்படியாக, பூமிக்கு சக்தியை வழங்கக்கூடிய பிளாக் ஹோல் ஒன்று இருந்தால் அதை நம் பூமி கிரகத்தின் சுற்றுப்பாதையில் இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மைக்ரோ பிளாக் ஹோல் :

இதுவரை பிளாக்ஹோல்கள் மீதான ஆணித்தனமான கோட்பாடுகள் இல்லை என்ற பட்சத்தில், நமக்கு தேவையான மைக்ரோ பிளாக் ஹோல்களை 'எக்ஸ்‌ட்ரா டைமண்ஷன்ஸ் ஆஃப் ஸ்பேஸ் டைம்' மூலம் உருவாக்க முடியும் என்ற மற்றொரு கோட்பாடு ஒன்றையும் கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஸ்டீபன் ஹோக்கிங்..!

கருங்குழி மர்மங்கள் :

கருங்குழி பற்றிய மேலும் அதிக புரிதலைப்பெற இங்கே கிளிக் செய்யவும் - பிளாக் ஹோல் : இருட்டு ஒருவழி பாதையின் மர்மங்கள்..!

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Stephen Hawking says Humanity could make black holes into power stations. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்