4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் ரூ.3,299

Written By:

ஸ்பைஸ் ஸ்டெல்லார் 405, புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் இணையதளங்களில் ரூ.3,299க்கு கிடைக்கின்றது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் இன்னும் ஸ்பைஸ் நிறுவனத்தின் தளத்தில் இடம் பெற வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் ரூ.3,299

டூயல் சிம் ஸ்டான்ட்பை, ஆன்டிராய்டு 4.4 கிட்காட் வழங்கப்பட்டுள்ளதோடு லாலிபாப் அப்டேட் குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் மற்றும் 512 எம்பி ரேம் மற்றும் 4 இன்ச் WVGA டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

4 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட ஸ்பைஸ் ஸ்மார்ட்போன் ரூ.3,299

ஸ்பைஸ் ஸ்டெல்லார் 405, 3.2 எம்பி ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ், மற்றும் 1.3 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் மெமரி கார்டு மூலம் 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றதோடு 1500 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

3ஜி சேவை இல்லாமல் வைபை, எப்எம் ரேடியோ, ப்ளூடூத், ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களோடு கருப்பு நிறத்தில் மட்டும் தான் கிடைக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
The Spice Stellar 405, a new budget offering from the smartphone maker, is now available to buy from its e-commerce website at Rs. 3,299.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்