அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்'..!

|

வந்தான், வென்றான், ஆண்டான், மாண்டான் - என்று வரலாற்றில் நாம் படிக்கும் எல்லாமே 'அப்படியே' உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது 'அத்துணையும்' கூட பொய்யாக இருக்கலாம். எடுத்துக்காட்டுக்கு "ஆஹா.. ஓஹோ..!" என்று ஆதிகால தமிழ் புலவர்களால் பெருமையாக பாடப்பட்ட பெரும்பாலான மன்னர்கள் கதையெல்லாம், பொன் மூட்டைகளுக்காக உருவாக்கப்பட்ட 'பொய் புகழ்ச்சி' கதைகள் என்பது தான் நிதர்சனம்..!

ஆதாரங்கள் : அமெரிக்கா நிலாவுக்கு போகவே இல்லயாம்..!?

அப்படியாக, "முதலில் நாங்கள் தான் செய்தோம்..!", "இதை முதலில் நாங்கள் தான் நிகழ்த்தினோம்..!" என்று எல்லா 'முதல்' இடங்களிலும் அமெரிக்காவின் பெயர் பதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த விடயங்களில்..!

அமெரிக்காவிற்கு முன் :

அமெரிக்காவிற்கு முன் :

உண்மை என்னவென்றால் அமெரிக்காவிற்கு சமமாக சோவியத் நாடு பல வகையான விண்வெளி ஆராய்ச்சிகளையும் சாதனைகளையும் நிகழ்த்தி வெற்றிகளும் கண்டுள்ளது.

ஆக்கிரமிப்பு :

ஆக்கிரமிப்பு :

இருந்த போதிலும் அந்த சாதனைகள் எல்லாமே வரலாற்று பக்கங்களில் இருந்து மறைக்கப்பட்டு, பெரும்பாலான இடங்களில் அமெரிக்காவின் பெயர் நிலை நிறுத்தப்பட்டுள்ளன..!

சோவியத் சாதனைகள் :

சோவியத் சாதனைகள் :

அதை நிரூபிக்கும் 'சோவியத்'தின் வெற்றிகரமான 'முதல் முதலில்' என்ற பட்டியலில் அடங்கும் (வரலாற்றில் மறைக்கப்பட்ட) விண்வெளி ஆராய்ச்சி சாதனைகள் தான் அடுத்து ஸ்லைடர்களில் தொகுக்கப்பட்டுள்ளன..!

முதல் நிலா பயணம் :

முதல் நிலா பயணம் :

நிலாவின் அருகாமை வரை சென்ற முதல் விண்கலம் - லுனா 1 (Luna 1) தான்..!

நெருங்கியது :

நெருங்கியது :

360 கிலோகிராம் எடை கொண்ட இந்த விண்கலம், நிலவை சுமார் 6000 கிலோ மீட்டர் இடைவெளி வரும் வரை நெருங்கியது என்பது குறிப்பிடத்தக்கது..!

அமெரிக்க உளவுத்துறை :

அமெரிக்க உளவுத்துறை :

லுனா 1 சோவியத்தின் முதல் முயற்சி என்று அமெரிக்க உளவுத்துறை தொடங்கி அனைத்து உலக நாடுகள் நம்புகிறது.

முயற்சி :

முயற்சி :

ஆனால், சுமார் 5 முயற்சிகளுக்கு பின்தான் லுனா 1 விண்ணில் ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வேற்றுகிரக பயண முயற்சி :

முதல் வேற்றுகிரக பயண முயற்சி :

பிப்ரவரி 12, 1961 : சோவியத் ஸ்பேஸ் ப்ராப் வேனேரா 1 (Soviet space probe Venera 1)

முடிவு :

முடிவு :

சோவியத் ஸ்பேஸ் ப்ராப் வேனேரா 1 - தரையில் விழுந்து நொருங்கும் என்று தெரிந்த பின்னரும் கூட முடிவு செய்யப்பட்டு வீனஸ் கிரக்திற்கு அனுப்பட்ட முதல் விண்கலம் ஆகும்..!

எதிர்பார்ப்பு :

எதிர்பார்ப்பு :

வீனஸ் கிரக சூழ்நிலையை தாக்குப்பிடிக்காமல் எறிந்து போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

விபத்து :

விபத்து :

ஆனால், சுமார் 100,000 கிலோ மீட்டர்கள் (62,000 மைல்கள்) தொலைவில் இருந்து தொடர்பு கொள்ளப்பட முடியாமல் விபத்துக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலா புகைப்படம் :

முதல் நிலா புகைப்படம் :

லுனா 3 (Luna 3) - நிலவை வெற்றிகரமாக அடைந்த சோவியத்தின் மூன்றாவது விண்கலம் ஆகும்..!

கேமிரா :

கேமிரா :

லுனா 1 மற்றும் லுனா 2 விண்கலங்களைப்போல் அல்லாது இது கேமிரா பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட்டது..!

பார்க்காத பக்கம் :

பார்க்காத பக்கம் :

அதன் விளைவாக கிடைத்ததே நிலவின் பார்க்காத பக்கத்தின் முதல் புகைப்படம், அந்த காலகட்டத்தில் அது போன்ற ஒரு புகைப்படம் எடுக்கப்படவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் வெற்றிகரமான வேற்று கிரக பயணம் :

முதல் வெற்றிகரமான வேற்று கிரக பயணம் :

வேற்றுகிரகம் (வீனஸ்) ஒன்றை வெற்றிகரமாக அடைந்த முதல் விண்கலம் - வேனேரா 7 (Venera 7)..!

நுழைந்தது :

நுழைந்தது :

ஆகஸ்ட் 17, 1970 விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி வெற்றிகரமாய் வீனஸ் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தது வேனேரா 7..!

29 நிமிடங்கள் :

29 நிமிடங்கள் :

ஆனால், மெதுவாய் தரை இறங்க உதவும் பாராசூட் பிளவுபட்டு போக 29 நிமிடங்கள் கீழ்நோக்கி சென்ற வேனேரா 7, வீனஸ் கிரகத்தில் விழுந்து இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகம் 2 :

பாகம் 2 :

இவைகள் மட்டுமில்லை சோவியத் நிகழ்த்திய பல விண்வெளி சாதனைகள் வரலாற்று பக்கங்களில் இருந்து எரிக்கப்பட்டுள்ளன. அது சார்ந்த தகவல்கள், இத்தொகுப்பின் இரண்டாம் பாகத்தில், (அமெரிக்கா செய்த 'வரலாற்று துரோகம்' - பாகம் 2) விரைவில்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
வரலாற்றில் இருந்து 'முழுமையாக' மறைக்கப்பட்ட சோவியத் சாதனைகள். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X