"கடுமையான விலை கொடுப்பீர்கள்" - வட கொரியாவை மிரட்டும் தென் கொரியா...!

Written By:

வடகொரியா ஆனது, 2006-ஆம் ஆண்டில் இருந்து கடந்த 2015-ஆம் ஆண்டு மே மாதம் வரையிலாக நீர்மூழ்கி கப்பல் ஏவுகணை, பலமுறை மூன்று கட்ட ராக்கெட்களை விண்ணுக்குள் செலுத்த முயற்சி, நீண்ட தூர தெப்போடோங்- 2 ஏவுகணை என பலவகையான அதிநவீன ஆயுத சோதனைகளை நடத்திக் கொண்டே வருகிறது.

இப்படியாக, அண்டை நாடுகள் தொடங்கி பெரும்பாலான உலக நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்துக் கொண்டிருக்கும் வடகொரியாவிற்கு தற்போது நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளது - தென் கொரியா..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

'வெளியீட்டு ஏவுதல்' சோதனை :

பிப்ரவரி 8 முதல் 25 ஆகிய இடைப்பட்ட தேதிகளுக்குள் 'வெளியீட்டு ஏவுதல்' சோதனை ஒன்றை நடத்த உள்ளதாக வட கொரியா நேற்று செய்தி வெளியிட்டு இருந்தது.

பாலிஸ்டிக் தொழில்நுட்ப ஏவுகணை :

வட கொரியாவின் இந்த சோதனையானது கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் பாலிஸ்டிக் தொழில்நுட்பம் சார்ந்த ஏவுகணை சோதனையாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கவும் கிளம்பியது சர்ச்சை.

ஜப்பான் :

இதனை தொடர்ந்து ஜப்பான் நாட்டு பாதுகாப்பு மந்திரி, ஜப்பான் பிராந்தியத்தை நெருங்கும் எந்த விதமான ஏவுகணையையும் சூட்டு வீழ்த்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வாஷிங்டன் அரசு :

மேலும், ஏவுகணை செலுத்துதல் மீதான ஐ.நா தடையை மீறும் வட கொரியாவின் இந்த செயல் ஆனது "அதிர்ச்சியான மீறல்" என்று வாஷிங்டன் அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எச்சரிக்கை :

அண்டை நாடான தென் கொரியா, இந்த ஏவுதல் சோதனையை வட கொரியா நடத்தக்கூடாது என்று வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

மிரட்டல் :

அதுமட்டுமின்றி மீறி இந்த சோதனை நடத்தப்பட்டால் "கடுமையான விலை கொடுப்பீர்கள்" என்று தென் கொரியா, வட கொரியாவிற்கு எதிராக மிரட்டல் ஒன்றும் விடுத்துள்ளது.

அமைதி - வளர்ச்சி :

ஆனால் வடகொரியாவோ தங்கள் விண்வெளி திட்டங்கள் அனைத்தும் மிகவும் அமைதியான முறையிலும், கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணைகள் வளர்ச்சி நோக்ககத்திலும் நடைபெறுகின்றன என்று தெரிவித்துள்ளது.

சர்வதேச கண்டனம் :

இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி தனது நான்காவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தி சர்வதேச கண்டனத்தை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

English summary
South Korea warns North against satellite launch. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்