வாட்டர் ப்ரூஃப் : இருக்கு, ஆனா இல்லை..!?

By Meganathan
|

ஜப்பான் நாட்டை சேர்ந்த மின்சாதன நிறுவனமான சோனி தனது இணையப்பக்கத்தின் மூலம் உலக மக்களை வியப்பில் ஆழ்த்தியதோடு குழப்பத்தை விளைவித்திருக்கின்றது என்று தான் கூற வேண்டும். அந்த வகையில் சோனி நிறுவனம் என்ன செய்திருக்கின்றது என்பதை யோசிக்காமல் அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

உலக ஸ்மார்ட்போன் சந்தையில் பல வித்தியாசமான கருவிகளை வெளியிடும் பழக்கம் கொண்ட நிறுவனம் தான் சோனி.

மாடல்

மாடல்

பல்வேறு மாடல்களின் மூலம் சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்துவதில் எவ்வித தயக்கமும் காட்டாமல் வழங்கும் சிறப்பம்சங்களுக்கு ஏற்ப விலையை நிர்ணயம் செய்து வருவது அனைவரும் அறிந்ததே.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

பெரும்பாலான சோனி கருவிகள் எக்ஸ்பீரியா வகையை சார்ந்ததோடு, சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்ட சில எக்ஸ்பீரியா கருவிகளில் வாட்டர் ப்ரூஃப் வசதியும் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐபி68

ஐபி68

பொதுவாக வாட்டர் ப்ரூஃப் கொண்ட கருவிகள் ஐபி68 தர சான்றிதழ் பெற்றிருக்கும் இதை கொண்ட குறிப்பிட்ட கருவியானது 1 மீட்டர் வரை தண்ணீரிலும் இயங்கும் திறன் கொண்டதாக அர்த்தமாகும்.

இணையதளம்

இணையதளம்

சோனி நிறுவனம் தனது இணையப்பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களை அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

வேண்டாம்

வேண்டாம்

அதன் படி சோனி நிறுவனத்தின் வலைப்பக்கத்தில் சோனி வாடிக்கையாளர்கள் வாட்டர் ப்ரூஃப் கொண்ட தங்களது கருவிகளை தண்ணீரில் பயன்படுத்த வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.

விளக்கம்

விளக்கம்

சோனி கருவிகளை மழையிலும், உங்களது கை ஈரமாக இருக்கும் போதும், அதிக தூசி இருக்கும் இடங்களிலும் பயன்படுத்தலாம்.

கூடாது

கூடாது

கருவியை தண்ணீரில் மூழ்கடித்து புகைப்படம், வீடியோக்களை எடுத்தல் போன்றவைகளை மேற்கொள்ள கூடாது என அந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

சோனி நிறுவனத்தின் விளம்பரங்களில் இந்த தகவல்கள் எவையும் குறிப்பிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனினும் சோனி நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டும் ஐபி சான்றிதழ் குறித்து அந்நிறுவனம் விரிவாக விளக்கம் அளித்துள்ளதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமே.

வீடியோ

இங்கு அந்நிறுவனம் தனது வாட்டர் ப்ரூஃப் கருவியை விளம்பரம் செய்த வீடியோவை இங்கு பாருங்கள்.

கவனம்

கவனம்

தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இது போன்ற கருவிகளை வாங்கும் போது கவனமாக இருப்பதை தவிற மக்களுக்கு வேறு வழியே இல்லை என்று தான் கூற வேண்டும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Sony Warns its users not to use 'Waterproof' Xperia Device Underwater. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X