ஐடி ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட 'இதுவும்' ஒரு காரணம் தான்.!

எந்தவொரு வேலையும் செய்ய தயாராக இல்லை என்பது தான் புகார் செய்வதின் அடித்தளமே.!

|

உங்கள் ஆபீஸில் யார் யாரெல்லாம் 'அன்ப்ரோடக்டிவ்' - அதாவது கொஞ்சம் கூட வேலை செய்யாமல் ஓப்பியடிக்கும் ஊழியர்கள் - என்பதை 3 வழிகளில் எளிமையாக கண்டுப்பிடித்து விடலாம். ஒன்று - அம்மாதிரியானவர்கள் எல்லாம் ஆபீஸ்க்குள் எப்போதுமே உலா வந்துக்கொண்டே இருப்பார்கள், இரண்டு - கொடுத்த வேலையை கடைசிநொடி வரை செய்வார்கள், மூன்று - எந்த விதமான காரணமும் தேவையில்லை ஒரு சிலரை பார்த்தாலே புரிந்து விடும் இது ஒரு 'டம்மி பீஸ்' என்று..!

எப்படி பார்த்தாலும் இந்த மூன்று விதமான மக்களிடமும் ஒரு பொதுவான பண்பு இருக்கும், அது தான் சோம்பேறித்தனம். அப்படியாக டெக்கீ சோம்பேறிகள், ஐடி சோம்பேறிகள், ஆபிஸ் சோம்பேறிகள் போன்றவர்களிடம் இருக்கும் பொதுவான 7 குணங்கள் பற்றிய தொகுப்பே இது..!

#1 வெறும் புகார் :

#1 வெறும் புகார் :

என்ன புகார்..? யார் மீது புகார்..? என்பதெல்லாம் ஒருப்பக்கம் இருக்கட்டும். மாற்றம் கொண்ட எந்தவொரு வேலையும் செய்ய தயாராக இல்லை என்பது தான் புகார் செய்வதின் அடித்தளமே. ஆகையால், புகார் செய்பவர்கள் நேரத்தை வீண் செய்பவர்கள் ஆவர், நேரம் வீண்ஆனால் 'அன்ப்ரோடக்டிவ்'.!

#2 சாக்கு போக்கு  :

#2 சாக்கு போக்கு :

எப்போதும் புகார் செய்வதை போன்றே தான் எப்போதுமே சாக்கு போக்கு சொல்வதும். எது முக்கியம், எதை முதலில் செய்ய வேண்டும் என்று எப்போதுமே குழம்பிக் கொண்டே இருந்தால் எப்போதுமே கைகட்டி சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியது தான்..!

#3 தள்ளிப்போடுவது :

#3 தள்ளிப்போடுவது :

யார் அதிகம் சாக்கு போக்கு சொல்லுவார்கள் என்று பார்த்தால் அனுதினமும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தாலும்கூட 'அப்புறம் பாத்துக்கலாம் அப்புறம் பாத்துக்கலாம் என்று தள்ளிப்போட்டுக் கொண்டே இருப்பர்வர்கள் தான், ஆக இவர்களும் 'அன்ப்ரோடக்டிவ்'..!

#4 மேனேஜர் மூலம் இயக்கம் :

#4 மேனேஜர் மூலம் இயக்கம் :

செய்யும் வேலையை 'காதலிப்பவர்கள்' மேனேஜர்களுக்காக ஒருபோதும் பணியாற்ற மாட்டார்கள். இதற்கு நேர்மாறான கூட்டம் ஒன்று இருக்கிறது. அவர்கள் வேலை என்று ஒன்று செய்கிறார்கள் என்றால், அது முழுக்க முழுக்க அவர்களின் மேனேஜர்களுக்காகத்தான் இருக்குமே தவிர அவர்களுக்காகவோ இல்லை, கற்றல் என்ற அடிப்படையிலேயோ இருக்கவே இருக்காது..!

#5 பாராட்டுக்காக மட்டும் :

#5 பாராட்டுக்காக மட்டும் :

கடமையே என்று வேலை பார்ப்பவர்களை மிக எளிமையாக கண்டுக்கொள்ள முடியும் அவர்கள் எப்போதுமே 'கிரெடிட்ஸ்'களுக்காக மட்டுமே பணியாற்றுவர், அதாவது பாராட்டு பெவர வேண்டும் என்பதற்காக மட்டும், இவ்வாறன வேலைகள் எப்போதும் 'அன்ப்ரோடக்டிவ்' தான்..!

#6 உள்நோக்கமின்மை :

#6 உள்நோக்கமின்மை :

"இன்னைக்கு எதாச்சும் புதுசா கத்துக்கணும்" என்று நினைப்பதே ஒரு பெரிய கற்றல் ஆகும். அது தான் எதையாவது கற்றுக்கொள்ள தூண்டும். இதற்கு நேர்மாறாக இருப்பவர்களுக்கு என்னதான் செய்தாலும் எந்தவிதமான தூண்டலும், ஊக்கமும் வரவே வராது..!

#7 தனிப்பட்ட நன்மை :

#7 தனிப்பட்ட நன்மை :

மக்கள் தங்கள் வேலைகளை மெத்தனமாக செய்யும் போது எந்த விதமான சுய முன்னேற்றமும் நிகழாது. புகார், சாக்கு போக்கு, ஊக்கமின்மை, மாற்றத்தை ஏற்றுக்கொள்ளாமை ஆகியவைகள் அனைத்தும் சிறிய வாழ்க்கை பிரச்சனையைக்கூட தீர்த்துக்கொள்ள முடியாத நிலையில் தான் கடைசி வரை வாழ வைக்கும்

Best Mobiles in India

Read more about:
English summary
Some Common characteristics of the laziest IT employees. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X