சோலார் எனர்ஜி வந்தாச்சு! கரண்ட் பிரச்சனை போயாச்சு!!

Posted by:

தமிழக மக்கள் தினமும் சந்திக்கும் பெரிய பிரச்சனை கரண்ட் பிரச்சனை. கரண்ட் இல்லை என்றால் அணுவும் அசையாது என்று சொல்லும் அளவுக்கு தற்போதைய உலக்கத்தின் நிலமை உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழகத்தில் பல மணி நேரங்கள் கரண்ட் இல்லாமல் இருப்பது மக்களின் அன்றாட வாழ்கையை வெகுவாக பாதிக்கிறது.

வேலைக்கு செல்பவர்கள்,படிக்கும் மாணவர்கள்,கரண்டை நம்பி தொழில் செய்பவர்கள் முக்கியமாக சீரியல் பார்க்கும் பெண்கள் என பலரும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

பல மணி நேரங்கள் கரண்ட் இல்லை என்றாலும் கரண்ட் பில் மட்டும் அதிகம் வருகிறது. கரண்ட் இல்லை,கரண்ட் பில் அதிகம் வருகிறது,சில மணி நேரங்கள் கரண்ட் இருந்தால் பல மணி நேரங்கள் கரண்ட் இல்லாமல் இருப்பது என இது போன்ற பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு சோலார் எனர்ஜி தான்.

சோலார் எனர்ஜியை பயன்படுத்துவதன் மூலம் நமக்கு தேவையான மின்சாரத்தை நாமே தயார் செய்துகொள்ளலாம்,கரண்டை சேமித்து கரண்ட் இல்லாத நேரத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். இது போன்ற பல நன்மைகள் இதில் உண்டு.

கீழே உள்ள படங்களில் சோலார் எனர்ஜியை பயன்படுத்தி கரண்ட் பிரச்சனையை போக்க மற்றும் கரண்ட் பில்லை குறைக்க சிறந்த வழிகள் அதன் சிறப்புகளை பார்ப்போம்.

Click Here For New Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

சோலார் எனர்ஜியை பயன்படுத்தி கரண்ட் பிரச்சனையை போக்க மற்றும் கரண்ட் பில்லை குறைக்க சிறந்த வழிகள்

சோலார் இன்வெர்ட்டர் ஹோம் யுபிஎஸ் சிஸ்டம்

சோலார் பேனல் மற்றும் ஸ்டோரேஜ் பேட்டரி உள்ளது.

விலை அளவு: RS.3000-1 லட்சம்

உற்பத்தியாளர்கள்:சூ-காம் இன்வெர்ட்டர்ஸ்,அனு சோலார்,சோலார்,மஹாரிஷி சோலார்,ஈகோ

 

சோலார் ஹோம் லைட் சிஸ்டம்

சோலார் பேனல்,பேட்டரி,இன்வெர்ட்டர்,சிஎப்எல்ஸ்,பேன்,மொபைல் சார்ஜிங் பாயிண்ட்

விலை அளவு: RS.3000-15,000

உற்பத்தியாளர்கள்:லூமினஸ்,எக்சைடு,மஹாரிஷி சோலார்,சாலிட் சோலார்,டாடா பவர்,ஈகோ

 

சோலார் மொபைல் சார்ஜர்

சோலார் பேனல் மற்றும் பேட்டரி,யுனிவெர்சல் மொபைல் சார்ஜர்

விலை அளவு: RS.599-750

உற்பத்தியாளர்கள்:மஹாரிஷி சோலார்,அனு சோலார்.

 

சோலார் பிரிட்ஜ்

போர்ட்டபுள் பிரீசர் கம் பிரிட்ஜ்

விலை அளவு: RS.1,25,000

உற்பத்தியாளர்கள்:மஹாரிஷி சோலார்.

 

சோலார் டேபுள் லேம்ப் டார்ச்சஸ்

ஒயர்லெஸ் லேம்ப் உடன் கூடிய சோலார் பிளாஷ் லைட், 6-8 மணி நேரம்.

விலை அளவு: RS.1,000-1,500

உற்பத்தியாளர்கள்:மஹாரிஷி சோலார்,அனு சோலார்,சாலிட் சோலார்,ஈகோ.

 

சோலார் கூலர்

சோலார் பவர் டிசி கூலர், 1 to 8 HP வோல்டேஜ் மோட்டார்

விலை அளவு: RS.5,000-25,000

உற்பத்தியாளர்கள்:மஹாரிஷி சோலார்

 

சோலார் பேனல் வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்

சோலார் பேனல் வாட்டர் ஹீட்டர்,ஸ்டோரேஜ் டேங் 100 லிட்டர் - 5000 லிட்டர்

விலை அளவு: RS.10,000-5,15,000

உற்பத்தியாளர்கள்:மஹாரிஷி சோலார்,அனு சோலார்,சாலிட் சோலார்.

 

சோலார் ஸ்ட்ரீட் லைட்

சோலார் ஸ்ட்ரீட் லைட் தவிர வாட்டர் ஹீட்டிங் சிஸ்டம்,சோலார் பிளாஷ் லைட்,சோலார் ஹோம் லைட் சிஸ்டம் என பல தயாரிப்புகள் உள்ளன.

 

See next photo feature article

எளிதில் வாங்கலாம்


சோலார் எனர்ஜி தயாரிப்புகளை வாங்குவதற்க்கு பேங்கில் லோன் தரப்படுகிறது. அரசாங்கமும் சோலார் எனர்ஜி தயாரிப்புகளை ஊக்குவிக்கின்றன.

 


முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்