ஸ்னாப்டீல் : ரூ.2000/- ஹோம் டெலிவரி மூலம் பெற என்ன செய்ய வேண்டும்.?

கேஷ்@ஹோம் என்ற வசதி மூலமாக ஸ்னாப்டீல் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளம் பண தட்டுப்பாடுகளுக்கு ஒரு தீர்வை வழங்க முயற்ச்சிக்கிறது.

Written By:

நேற்று (வியாழக்கிழமை) ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமான ஸ்னாப்டீல் அதன் கேஷ்@ஹோம் என்ற வசதி மூலமாக ரூ.2000/- வழங்கும் சேவையை அறிவித்தது. இந்த புதிய கேஷ்@ஹோம் வசதியின் மூலம் பயன் பெறுவது மிகவும் சுலபம்.

ப்ரீசார்ஜ் ஆப் பயன்படுத்தியோ அல்லது உங்கள் டெபிட் கார்டீ கொண்டோ இந்த கேஷ்@ஹோம் வசதியை பயன்படுத்த, நீங்கள் ரூ.1 கன்வீனியன்ஸ் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி ஸ்னாப்டீல் வழங்கும் இந்த ரூ.2000/- ஹோம் டெலிவரியை பெற என்ன செய்ய வேண்டும்.? எந்தெந்த பகுதிகளில் இந்த கேஷ்@ஹோம் வசதி கிடைக்கப் பெறுகிறது.? எத்தனை நாட்களில் பணம் கைகளுக்கு வரும்..? போன்ற உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் இதோ.!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

பண வசதி உண்டு என்றால்

முதலில் நீங்கள் ஸ்னாப்டீல் ஆப்பை உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவ வேண்டும் பின்னர் அது உங்கள் பகுதியில் கேஷ் டெலிவரி வசதி கிடைக்கும் என்றால் அதை உங்கள் இடம் சார்ந்த தகவல் மூலம் கண்டறிந்து தெரிவிக்கும். ஸ்னாப்டீல் நிறுவனத்தின் படி, உங்களுக்கான பண வசதி உண்டு என்றால், உங்களுக்கு ஒரு புஷ் மெஸேஜ் மற்றும் ஒரு எஸ்எம்எஸ் அறிவிப்பு வழங்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிஓஎஸ் இயந்திரத்துடன்

உங்கள் வட்டத்தில் பணம் கிடைக்கப்பெற நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த நாளே ஸ்நாப்டீல் நிர்வாகி ஒரு பிஓஎஸ் இயந்திரத்துடன் உங்கள் வீட்டிற்கு வருகை புரிவார் மற்றும் நீங்கள் உங்கள் கார்ட் ஸ்வைப் செய்ய உங்களுக்கு ரூ. 2,000 பணம் வழங்கப்படும்.

அவசியமில்லை

ஒரு முன்பதிவு நாள் வரம்பு ரூ.2000/- தான் என்பதும் மற்றும் நீங்கள் இந்த கேஷ்@ஹோம் வசதியை பெற ஸ்னாப்டீல் ஆன்லைன் வலைதளத்தில் இருந்து எந்தவொரு பொருளும் வாங்க வேண்டிய அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டீல் ஆப் மூலம் மட்டுமே

ஸ்னாப்டீல் அறிவித்துள்ள இந்த கேஷ்@ஹோம் சேவை தற்போதைக்கு குருகரம் (Gurugram) மற்றும் பெங்களூரு பகுதிகளில் வாழும் மக்களுக்கும் வழங்கபப்டுகிறது மற்றும் இந்த சேவை ஸ்னாப்டீல் ஆப் மூலம் மட்டுமே வேலை செய்யும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"நல்லெண்ணத்துடன்"

இந்த வகை பண விநியோகிகமானது ஒரு "நல்லெண்ணத்துடன்" செய்யப்படும் செயல் என்றும், இந்த சேவையில் வழங்கப்படும் பணம் ஆனது கேஷ் ஆன் டெலிவரி மூலம் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற பணம் என்றும் ஸ்னாப்டீல் நிறுவனம் கூறியுள்ளது.

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்Read more about:
English summary
Snapdeal Will Deliver Rs. 2,000 to Your Home Under CashHome Facility. Read more about this in Tamil GizBOt.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்