2017-ல் எந்தெந்த கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட்.? (முழு பட்டியல்)

இந்த 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட் கிடைக்குமா என்பதை கீழ் வழங்கப்பட்டுள்ள பட்டியலை பார்த்து அறிந்துக்கொள்ளவும்.

|

பயனர்களின் ஆண்ட்ராய்டு அனுபவத்தை மேலும் சுத்திகரிக்கும் ஒரு முயற்சியாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ஆம் தேதி அன்று கூகுள் அதன் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் இயங்குதளத்தை வெளியீட்டது.

இந்த மென்பொருள் மேம்படுத்தல் ஆனது உடனடியாக நெக்ஸஸ் சாதனங்கள் பரவியது (நெக்ஸஸ் 6, நெக்ஸஸ் 5 எக்ஸ், நெக்ஸஸ் 6பி, நெக்ஸஸ் 9, நெக்ஸஸ் பிளேயர் மற்றும் பிக்சல் சி) எல்ஜி வி20 தான் மேம்படுத்தல் பெற்ற நெக்சஸ் அல்லாத முதல் பிற நிறுவன ஸ்மார்ட்போன் ஆகும். பிற கருவிகள் மேம்படுத்தல் வருகைக்காக காத்துள்ளனர்.

கூகுள், லெனோவா, சாம்சங், எஎச்டிசி, எல்ஜி, சோனி, ஹூவாய்/ஹானர், ஒன்ப்ளஸ் மற்றும் சியோமி ஆகிய நிறுவனங்களின் கருவிகள் தான் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்கும் முதன்மை ஸ்மார்ட்போன் தயாரிப்புகளாகும். இந்த நிறுவனங்களின் கருவிகளில் ஓவர்-தி-ஏர் ஓடிஏ (OTA) நௌவ்கட் என்ற சொந்த வேகத்தில் இயங்கும் மேம்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது என்பது ஒருபக்கம் இருக்க 2017-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே எந்தெந்த ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு நௌவ்கட் அப்டேட் கிடைக்கும் என்ற முழு பட்டியல் இதோ.!

எச்டிசி

எச்டிசி

எச்டிசி 10 மற்றும் எச்டிசி ஒன் எம்9 மற்றும் எச்டிசி ஒன் ஏ9 ஆகிய கருவிகளின் அன்லாக்டு வெர்ஷன் 2017-ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே அப்டேட் பெறும். உடன் எச்டிசி போல்ட் (அமெரிக்க, ஸ்பிரிண்ட் பிரத்தியேக) மற்றும் எச்டிசி10 ஈவோ (ஐரோப்பிய: எச்டிசி போல்ட்) இந்த ஆண்டுக்குள் அப்டேட் பெறும்.

ஹூவாய்

ஹூவாய்

ஹூவாய் மேட் 8, பி9, பி9 பிளஸ், பி9 லைட், நோவா, நோவா பிளஸ் மற்றும் மீடியாபேட் எம்3 ஆகிய கருவிகள் 2017-அம்மா ஆண்டின் முதல் காலாண்டில் 7.0 நௌவ்கட் அப்டேட் பெறும். பிப்ரவரி மாதத்தில் ஹானர் 8 கருவிக்கும், ஹானர் 5 எக்ஸ் மற்றும் 5சி ஆகிய கருவிகளுக்கு இந்த ஆண்டுக்குள் மேம்படுத்தல் கிடைக்கும்.

லெனோவா மோட்டோ

லெனோவா மோட்டோ

மோட்டோ ஜி ப்ளே (4-வது ஜென்), மோட்டோ எக்ஸ் ப்யூர் எடிஷன் (3-ஆம் ஜென்), மோட்டோ எக்ஸ் ஸ்டைல், மோட்டோ எக்ஸ் ப்ளே, மோட்டோ எக்ஸ் போர்ஸ், ட்ராய்டு டர்போ 2, மோட்டோ மேக்ஸ் 2, மோட்டோ இசட் ட்ராய்டு, மோட்டோ இசட் போர்ஸ் ட்ராய்டு, மோட்டோ இசட் பிளே ட்ராய்டு மற்றும் மோட்டோ எம் ஆகிய கருவிகளில் மேம்படுத்தல் உறுதியாக இந்தாண்டு கிடைக்கப்பெறும். எனினும் சரியான தேதி தெரியவில்லை.

எல்ஜி

எல்ஜி

எல்ஜி ஜி4 மற்றும் எல்ஜி ஜி3 கருவிகள் 2017-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அப்டேட் பெற வி10 கருவி மார்ச் மாத வாக்கில் அப்டேட் பெறும்.

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ்

ஒன்ப்ளஸ் விரைவில் மேம்படுத்தலை பெறவுள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக அதன் ஒன்ப்ளஸ் 3 மற்றும் ஒன்ப்ளஸ் 3டி ஆகிய இரண்டு கருவிகளும் மிக விரைவில் அப்டேட் பெறும்.

சாம்சங்

சாம்சங்

கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன்கள், சாம்சங் கேலக்ஸி ஏ5 (2016) மற்றும் கேலக்ஸி ஏ3, (2016) கேலக்ஸி ஏ5 (2014) ஆகிய கருவிகளில் இந்த மாதத்திற்குள் அப்டேட் கிடைக்கும் என்று வதந்திகள் தெரிவிக்கின்றன. கேலக்ஸி நோட் 5 கருவியில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே அப்டேட் கிடைக்கப்பெறும்.

சோனி

சோனி

சோனி எக்ஸ்பீரியா இசெட்5, இசெட்5 பிரீமியம், இசெட்5 காம்பாக்ட், இசெட்3 + மற்றும் இஸட் 4 டேப்ளெட்கள் ஆகிய கருவிகள் கடந்த டிசம்பர் மாதம் முதலே அப்டேட் கிடைக்கப்பெறும் என்று கூறப்பட்டாலும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. மறுபக்கம் எக்ஸ்பீரியா எக்ஸ்ஏ மற்றும் எக்ஸ்ஏ அல்ட்ரா ஆகிய கருவிகளில் 2017 மார்ச் மாத வாக்கில் அப்டேட் கிடைக்கப்பெறும்.

சியோமி

சியோமி

சியோமி மி மேக்ஸ், மி நோட், மி 4சி மற்றும் மி எஸ் ஆகிய கருவிகளில் 2017-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அப்டேட் கிடைக்கபெறும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

2017-ல் இதெல்லாம் அப்படியே நடந்தால் ரொம்ப நல்லாயிருக்கும்.!?

Best Mobiles in India

English summary
Smartphones that will get Android Nougat: Find out if yours is in this list. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X