சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர் அரசு

Posted by:

சிங்கப்பூர் அரசு சிறுவர்களிடம் தமிழ் மொழியினை கொண்டு செல்லும் வகையில் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் நான்கு அரசு மொழிகளில் தமிழ் மொழியும் இடம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அரும்பு எனும் செயலி 14வது தமிழ் இண்டர்நெட் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ் மொழி பேசும் 150 சிறப்பு விருந்தினர்களும், பத்து நாடுகளை சேர்ந்த சுமார் 200 தமிழர்களும் கலந்து கொண்டனர்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அரும்பு செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் இந்த செயலி சிறுவர்களிடம் தமிழ் மொழி குறித்த ஆர்வத்தை தூண்டும் என்று சிங்கப்பூர் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் தெரிவித்தார்.

சிறுவர்களிடம் தமிழ் மொழியை வளர்க்கும் செயலியை வெளியிட்டது சிங்கப்பூர்

தமிழ் மொழிக்கான அதிகாரம் மற்றும் சுதந்திரத்தை சிங்கப்பூர் என்றும் வரவேற்கும் என்றும் தமிழ் மொழியை வளர்க்க சிங்கை அகரம் எனும் மென்பொருள் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து தமிழ் மொழிக்கான டிக்ஷனரி போன்றவை டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மொழியை பிரபலமாக்குவதோடு அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல இந்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மலாய், மன்டரின் மற்றும் ஆங்கிலத்தோடு தமிழ் மொழியும் சிங்கப்பூரின் அரசு மொழிகளில் இடம் பெற்றிருக்கின்றது. இதனால் தமிழ் மொழியை வளர்க்கும் விதமாக சிங்கப்பூர் அரசு கலை நிகழ்ச்சிகள், தேசிய அளவிலான பட்டிமன்றம் மற்றும் விழாக்களை நடத்த இருப்பதாகவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.

 

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Singapore has launched a mobile app to kindle interest and help young children understand the Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்