பேட்டரி பேக்கப் : ஆண்ட்ராய்டை பின் தள்ளும் ஐபோன்..!!

By Meganathan
|

ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு பிரச்சனை உலகம் அறிந்த ஒன்று தான். என்ன செய்ய, போட்டி என வந்து விட்டால் யாராக இருந்தாலும் வெற்றி பெறவே நினைப்பர், ஆனால் வெற்றி யாருக்கும் நிரந்தரம் இல்லை என்பதே உண்மை.

ஆமை வேகத்தில் ஆண்ட்ராய்டு, முயல் வேகத்திற்கு மாற்ற..?!

உலகின் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் இயங்குதளம் என எடுத்து கொண்டால் முன்னணியில் இருப்பது ஆண்ட்ராய்டு தான், இதற்கு பல காரணங்கள் இருக்கின்றது, ஆண்ட்ராய்டை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆப்பிள் நிறுவனம் இருந்தாலும் தொடர்ந்து அந்நிறுவனம் கச்சிதமான கருவிகளை வெளியிட்டு வருகின்றது அனைவரும் அறிந்ததே.

'ஆண்ட்ராய்டு' பத்திரமா பாத்துகோங்க..!!

அந்த வகையில் ஆண்ட்ராய்டை பின் தள்ளும் முயற்சியில் ஆப்பிள் நிறுவனம் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகின்றது, அதன் ஒரு முயற்சியாக வெளியானது தான் ஐஓஎஸ்9. வழக்கம் போல புதிய இயங்குதளம் குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவினாலும், உண்மையில் அதன் தரம் ஆப்பிள் பயனாளிகளுக்கு மட்டும் தான் தெரியும். இங்கு ஆண்ட்ராய்டை மிஞ்சும் அளவு ஆப்பிள் கருவியில் பேட்டரி பேக்கப் பெறுவது எப்படி என்பதை தான் தொகுத்திருக்கின்றோம்...

பேட்டரி

பேட்டரி

புதிய ஐபோன் கருவியில் எந்த செயலி அதிக பேட்டரியை எடுத்து கொள்கின்றது என்பதை அறிந்து கொண்டு அவைகளை எடுத்து விடுங்கள், இதை அறிந்து கொள்ள செட்டிங்ஸ்--ஜெனரல்--பேட்டரி ஆப்ஷன் சென்றால் போதும்.

லோ பவர் மோடு

லோ பவர் மோடு

ஐஓஎஸ்9 இயங்குதளம் பயன்படுத்தும் போது அதிகபட்சம் ஒரு மணி நேரம் கூடுதல் பேக்கப் பெற முடியும் என்கின்றது ஆப்பிள். மேலும் பேட்டரி குறைவாக இருக்கும் நிலையில் புதிய லோவர் பவர் மோடு கூடுதலாக மூன்று மணி நேரம் வரை பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கருவியின் செட்டிங்ஸ்--ஜெனரல்--பேட்டரி--லோவர் பவர் மோடு சென்று கருவியை லோ பவர் மோடில் செட் செய்யலாம்.

லோகேஷன் சர்வீசஸ்

லோகேஷன் சர்வீசஸ்

ஜிபிஎஸ் மூலம் உங்களது இருப்பிடத்தை பயன்படுத்தும் செயலிகளை கண்டறிந்து அவைகளை நிறுத்தினால் பேட்டரி பேக்கப் அதிகமாக கிடைக்கும். இதை மேற்கொள்ள செட்டிங்ஸ்--லோகேஷன் சர்வீசஸ் சென்றால் போதுமானது.

ப்ளூடூத்

ப்ளூடூத்

முடிந்த வரை பயனில்லாத நேரங்களில் ப்ளூடூத் ஆப்ஷனினை ஆஃப் செய்து வைத்தல் பேட்டரி பேக்கப் வழங்கும் நேரத்தை அதிகமாக்கும்.

விட்ஜெட்

விட்ஜெட்

மிகவும் அவசியமான விட்ஜெட்களை மட்டும் பயன்படுத்தலாம். தேவையில்லாமல் அதிக விட்ஜெட்களை பயன்படுத்துவது பேட்டரியை சீக்கிரமே கறைத்து விடும்.

பின்னணி செயலி

பின்னணி செயலி

பேக்கிரவுன்டு ஆப் ரிப்ரெஷ் ஆப்ஷன் செயலிகளின் பன்னணியில் இருக்கும் தேவையற்ற தகவல்களை நீக்கும், ஆனால் இவைகளும் அதிக பேட்டரியை எடுத்து கொள்ளும். இதனால் இந்த ஆப்ஷனினை ஆஃப் செய்தல் நீண்ட பேட்டரி பேக்கப் வழங்கும். இதை செய்ய செட்டிங்ஸ்--ஜெனரல்--பேக்கிரவுன்டு ஆப் ரிப்ரெஷ் சென்றால் போதுமானது.

அனிமேஷன்

அனிமேஷன்

புதிய இயங்குதளத்தில் அனிமேஷன் சார்ந்தவைகளை ஆஃப் செய்தால் பேட்டரி பேக்கப் அதிகம் கிடைக்கும். இதை செய்ய செட்டிங்ஸ்--ஜெனரல்--அக்செஸ்சபிலிட்டி--ரெட்யூஸ் மோஷன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

அக்செஸ்சபிலிட்டி செட்டிங்ஸ்

அக்செஸ்சபிலிட்டி செட்டிங்ஸ்

பொதுவாக அக்செஸ்சபிலிட்டி செட்டிங்ஸ் செயலியில் இருக்கும் சில செட்டிங்ஸ் அதிக பேட்டரியை இழுக்கும், இவைகளை ஆஃப் செய்ய செட்டிங்ஸ்--அக்செஸ்சபிலிட்டி--க்ரேஸ்கேல், இதே போன்று கான்ட்ராஸ்ட், ரெட்யூஸ் டிரான்ஸ்பேரன்ஸி போன்ற ஆப்ஷன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யலாம்.

ஆட்டோ ஆப் அப்டேட்

ஆட்டோ ஆப் அப்டேட்

செட்டிங்ஸ்--ஆப் அன்டு ஐட்யூன்ஸ் ஸ்டோர்--ஆட்டோமேடிக் டவுன்லோடு ஆப்ஷன் சென்று ஆட்டோமேடிக் அப்டேட்களை ஆஃப் செய்தால் பேட்டரி நீண்ட நேரம் கிடைக்கும்.

ப்ரைட்னஸ்

ப்ரைட்னஸ்

முடிந்த வரை எவ்வித கருவியானாலும் குறைந்த ப்ரைட்னஸ் பயன்படுத்துவது பயனர்களின் கண்களுக்கும் நல்லது, பேட்டரிக்கும் நல்லது. கருவியின் ப்ரைட்னஸை குறைக்க செட்டிங்ஸ்--டிஸ்ப்ளே அன்டு ப்ரைட்னஸ் ஆப்ஷன் சென்று உங்களுக்கு வசதியாக இருக்கும் ப்ரைட்னஸ் வைத்து கொள்ளலாம்.

லைவ் போட்டோஸ்

லைவ் போட்டோஸ்

ஆப்பிள் கருவியில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் வேண்டுமானால் லைவ் போட்டோக்களை வால்பேப்பராக வைக்காதீர்கள். இவையும் ஒரு வித அனிமேஷன் என்பதால் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடும்.

3டி டச்

3டி டச்

ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவியின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படும் 3டி டச் பேட்டரியை சீக்கிரம் தீர்க்கும் திறன் கொண்டுள்ளது. இவைகளை டிசேபிள் செய்ய செட்டிங்ஸ்--ஜெனரல்--அக்செஸ்சபிலிட்டி-3டி டச் செல்ல வேண்டும்.

புதுசு

புதுசு

இங்கு தொகுக்கப்பட்டிருக்கும் குறிப்புகள் பெரும்பாலும் புதிய ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளுக்கு பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முகநூல்

முகநூல்

இது போன்று மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Simple ways to get more battery life from your iOS device. Read more in Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X